87 முறை.. கொரோனா தடுப்பூசியை வைத்து இப்படி ஒரு பித்தலாட்டமா.. 60 வயது தாத்தாவின் நூதன மோசடி!
87 முறை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட முதியவரை ஜெர்மனி போலீசார் கைது செய்துள்ளனர்.
பெர்லின்: போலி சான்றிதழ் தயாரித்து விற்பதற்காக ஜெர்மனியில் 60 வயது முதியவர் ஒருவர் சுமார் 87 முறை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2020ம் ஆண்டு கொரோனா உலக நாடுகளில் வேகமாகப் பரவ ஆரம்பித்த போது, எப்போது இதற்கு தடுப்பூசி கண்டுபிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்புதான் எல்லோரிடமும் இருந்தது. ஆனால் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னரோ, அப்படியே மக்களின் மனநிலை மாறத் தொடங்கியது. பரிசுகள் கொடுத்து மக்களை தடுப்பூசி போட்டுக் கொள்ள வைக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு அரசுகள் தள்ளப்பட்டன. அந்தளவிற்கு நம்பிக்கையைப் போலவே தடுப்பூசி பற்றிய பயமும் மக்கள் மத்தியில் இருந்தது.
கொஞ்சம் கொஞ்சமாக அந்தப் பயம் விலகி, இப்போது இந்தியா உட்பட பல நாடுகள் அதிக எண்ணிக்கையிலான தடுப்பூசி போடப்பட்டவர்கள் பட்டியலில் உள்ளது. ஆனால் இன்னமும் தடுப்பூசி போடத் தயங்குகிறவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
சரி, இதெல்லாம் இருக்கட்டும், இப்போது அந்த ஜெர்மனி முதியவரின் கதைக்கு வருவோம்.

நூதன மோசடி
மேலே கூறியது போல், தடுப்பூசி போடத் தயங்குகிறவர்கள் ஜெர்மனியில் நிறைய பேர் இருக்கிறார்களாம். அவர்களின் பயத்தையே தனது வருமானத்திற்கான முதலீடாக வைத்து, கொரோனா தடுப்பூசி மூலம் நூதன மோசடி செய்து பணம் சம்பாதித்துள்ளார் அந்த 60 வயது முதியவர். கொரோனா தடுப்பூசியை வைத்து எப்படி வருமானம் பார்த்தார் எனக் குழப்பமாக உள்ளதா? இதோ விளக்கமாகப் பார்க்கலாம்.

போலிச் சான்றிதழ்
கொரோனாவுக்கு எதிரான போரில் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்பதற்காக, பல நாடுகள் பொது இடங்களுக்கு செல்ல தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் வேண்டும் என்ற உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜெர்மனியில் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள், இப்படி பொது இடங்களுக்கு செல்ல போலியாக தடுப்பூசி சான்றிதழை வாங்க ஆர்வம் காட்டியுள்ளனர். அப்படிப்பட்டவர்களுக்கு சான்றிதழை விற்பதற்காகத்தான் சுமார் 87 முறை தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார் இந்த முதியவர்.

87 முறை தடுப்பூசி
ஜெர்மனியின் மெக்டபெர்க் (Magdeberg) நகரைச் சேர்ந்த இந்த முதியவர், தனது சான்றிதழ்களை விற்பனை செய்ததோடு, போலியாக தடுப்பூசிச் சான்றிதழ் தயாரித்துத் தரும் பணியையும் செய்து வந்திருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. தான் விற்பனை செய்யும் சான்றிதழ்களில் வரிசை எண் உண்மையான எண்ணாக இருப்பதற்காக, தனக்கு 87 முறை தடுப்பூசி செலுத்திக்கொண்டிருக்கிறார் இந்நபர்.

விசாரணை
சமீபத்தில் எலியன்பெர்க் என்ற ஊரில் நடந்த தடுப்பூசி முகாமில் தொடர்ந்து அடுத்தடுத்த நாளில் தடுப்பூசி செலுத்திக் கொண்டபோது வசமாகச் சிக்கிக் கொண்டுள்ளார். இவரிடமிருந்து சில தடுப்பூசிச் சான்றிதழ் அட்டைகளை அந்நாட்டு காவல்துறை பறிமுதல் செய்துள்ளது. சட்டத்துக்கு புறம்பாக தடுப்பூசிச் சான்றிதழ்கள் வழங்கியதற்காக இவரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மருத்துவ கண்காணிப்பு
அதோடு, தொடர்ந்து இத்தனை முறை, அதுவும் வெவ்வேறு தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டதால், அந்நபரின் உடல்நிலையையும் மருத்துவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இதுபோன்ற போலி தடுப்பூசி சான்றிதழ்களை போலீசார் பறிமுதல் செய்வது ஜெர்மனியில் இது முதன்முறையல்ல. கடந்த சில மாதங்களாகவே இது போன்ற பல சம்பவங்கள் அங்கு நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications