ஒரு கிராம் தங்கம் வெறும் ரூ.181 தான்.. முட்டை விலையை விட குறைவு.. எந்த நாட்டில் தெரியுமா? பின்னணி

Subscribe to Oneindia Tamil

கராகஸ்: ஒரு கிராம் தங்கம் வெறும் ரூ.181 முதல் ரூ.200 தான் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?. இதை படித்ததும் நீங்கள் ஆச்சரியப்படலாம். இது எப்படி சாத்தியம் என்ற கேள்வியையும் நீங்கள் எழுப்பலாம். ஆம், இது உண்மை தான். ஒரு லிட்டர் பால், பிரட் பாக்கெட்டுக்கு நிகராகவும், முட்டை விலையை ஒப்பிடும்போது தங்கத்தின் விலை குறைவாகவும் ஒரு நாட்டில் உள்ளது. அது எந்த நாடு? அங்கு ஏன் தங்கத்தின் விலை இவ்வளவு குறைவாக உள்ளது? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

நம் நாட்டில் தங்கத்தின் விலை உச்சம் தொட்டுள்ளது. இன்று சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.1,12,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.13,885க்கு விற்பனையாகி வருகிறது. கடந்த 6 மாதத்தில் மட்டும் தங்கம் விலை கிடுகிடுவென உச்சம் தொட்டு ஒரு லட்சத்தை கடந்துள்ளது.

gold-price-gold-has-become-so-cheap-that-it-costs-less-than-daily-items-like-eggs-in-venezuela

இதனால், நடுத்தர வர்க்கத்தினர், ஏழைகள் தங்கம் வாங்க முடியாத வகையில் இருக்கிறது. இந்தியாவில் தங்கத்தின் விலை இப்படி உச்சத்தில் இருக்கும்போது இன்னொரு நாட்டில் தங்கத்தின் விலை பால், பிரட் பாக்கெட்டுக்கு நிகராகவும், முட்டை விலையை விட குறைவாகவும் கிடைக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?.

வெனிசுலாவில் தங்கம் விலை சரிவு

ஆம், நீங்கள் படித்தது சரிதான். இந்த காலத்திலும் கூட பால், பிரட் பாக்கெட் விலைக்கு நிகராக ஒரு நாட்டில் தங்கம் கிடைக்கிறது. அந்த நாட்டின் பெயர் தான் வெனிசுலா. இது தென்அமெரிக்கா நாடாகும். அமெரிக்காவின் அருகே இந்த நாடு அமைந்துள்ளது. இந்த நாட்டில் 24 காரட் தங்கம் மிகவும் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இங்கு 24 காரட் ஒரு கிராம் தங்கம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே ரூ.181 முதல் ரூ.200க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன்படி பார்த்தால் ரூ.2000க்கு 10 கிராம் தங்கத்தை வாங்கி கொள்ள முடியும். ஆனால் நம் நாட்டில் ஒரு கிராம் தங்கம் இன்று 13,800க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் இந்த பணத்தை வெனிசுலாவில் கொடுத்தால் மொத்தம் 69 கிராம் தங்கத்தை நம்மால் வாங்க முடியும்.

முட்டை விலையை விட குறைவு

வெனிசுலாவில் நிலவும் தங்கம் விலை என்பது அந்த நாட்டின் பால், பிரட் பாக்கெட் விலைக்கு நிகராக தான் உள்ளது. ஏனென்றால் வெனிசுலாவில் ஒரு லிட்டர் பால் ரூ.175க்கு விற்பனையாகிறது. அதேபோல் பிரட் பாக்கெட் ரூ.170 க்கு விற்பனையாகி வருகிறது. இதனால் தான் பால், பிரட் பாக்கெட் விலைக்கு நிகராக ஒரு கிராம் தங்கம் விற்பனையாவதாக கூறுகிறோம். மேலும்வெனிசுலாவின் ஒரு டஜன் முட்டை (12 முட்டை) விலை ரூ.233 ஆகும். அதன்படி பார்த்தால் 12 முட்டைகளின் விலையை விட ஒரு கிராம் தங்கத்தின் விலை குறைவாக உள்ளது.

விலை குறைவுக்கு என்ன காரணம்?

தங்கத்தின் விலை இவ்வளவு மிகவும் மலிவாக இருப்பதால் வெனிசுலா மிகவும் செழிப்பான பொருளாதாரத்தில் சிறந்து விளங்கும் நாடு என்று நினைக்க வேண்டாம். ஏனென்றால் இந்த நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமாக உள்ளது. வெனிசுலாவில் பணவீக்கம் அதிகமாக உள்ளது. வெனிசுலாவின் கரன்சியை 'பொலிவார்' (Bolivar) என அழைப்பார்கள். அமெரிக்க டாலருக்கு நிகரான பெலிவார் கரன்சியின் மதிப்பு 473.36 VES என்ற அளவில் உள்ளது.

இந்த கரன்சியின் மதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. இதனால் நாட்டில் பணவீக்கம் அதிகரித்து அத்தியாவசிய பொருட்களின் விலை உச்சம் தொட்டுள்ளதோடு, தங்கம் உள்ளிட்ட பிற பொருட்களின் விலை குறைந்து வருகிறது. இதனால் தங்கம் விலை குறைந்தும் உணவு பொருட்களின் விலை அதிகமாக உள்ளது. தங்கத்தை விட அந்த நாட்டு மக்கள் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மீது தான் கவனம் செலுத்துவதால் தங்கத்தின் விலை சரிவை எதிர்கொண்டுள்ளது.

வளம்மிக்க நாடு வீழ்ந்தது எப்படி?

இது போதாது என்று இந்த ஆண்டின் தொடக்கமான ஜனவரி 3ம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சிறப்பு படை வீரர்களை பயன்படுத்தி வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் ஆகியோரை நாடு புகுந்து சிறை பிடித்து சென்றார். நிகோலஸ் மதுரோ கடல் வழியாக அமெரிக்காவுக்கு போதைப்பொருட்களை கொண்டு செல்வதாக டிரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்த நிலையில் அவரையும், அவரது மனைவியையும் நாடு புகுந்து கைது செய்தார்.

தற்போது இருவரும் அமெரிக்காவின் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது நாட்டின் நிலைமையை இன்னும் மோசமாக்கி உள்ளது. வெனிசுலாவை எடுத்து கொண்டால் அங்கு அதிகளவில் கச்சா எண்ணெய் உள்ளது. இன்னும் சொல்லப்போனால் உலகிலேயே அதிக கச்சா எண்ணெய் வளம் கொண்ட நாடாக வெனிசுலா உள்ளது. அதுமட்டுமின்றி அந்த நாட்டில் 8 ஆயிரம் டன் தங்கம் ஒரினோகோ சுரங்கத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த நாட்டில் அரசியல் சூழல் சரியில்லை.

அதிபராக இருந்த நிகோலஸ் மதுரோவுக்கு எதிராக பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். போதைப்பொருள் புழக்கம் அதிகரித்தது. இதனால் அந்த நாட்டில் பணவீக்கம் அதிகரித்து கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+