அமெரிக்காவில் விஸ்கான்சினில் துப்பாக்கிச் சூடு.. 8 பேர் காயம்
வாவட்டோசா: அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் ஒரு ஷாப்பிங் மாலில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் 8 பேர் காயமடைந்தனர்.
விஸ்கான்சினில் உள்ள புறநகர் பகுதியில் மேஃபேர் மால் உள்ளது. இந்த மாலில் நேற்று மதியம் 2.50 மணிக்கு நுழைந்த மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுடத் தொடங்கினார்.

இதனால் மக்கள் நாலாப்புறமும் சிதறி ஓடினர். சுமார் 3 மணி நேரம் நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து போலீஸார் கூறுகையில் அந்த மர்ம நபருக்கு 20 முதல் 30 வயது இருக்கும்.
அவர் வெள்ளை நிறத்தைச் சேர்ந்த அமெரிக்கர். தொடர்ந்து விசாரணை நடத்தப்படுகிறது என்றனர். இந்த மால் அடுத்த அறிவிக்கை வரும் வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 8 முதல் 12 குண்டுகள் வெடித்த சப்தம் கேட்டதாக மாலில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.
மேலும் துப்பாக்கிச் சூடு அருகிலேயே நடந்த போதிலும் அதை சுட்டவர் யார் என தெரியவில்லை. துப்பாக்கி சூடு சப்தம் கேட்டவுடன் நாங்கள் கீழ்தளத்திற்கு சென்று விட்டோம் என தெரிவித்தனர்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications