For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அட்லாண்டிக் கடலில் தத்தளித்த 150 தமிழ் அகதிகளை மீட்ட மீனவர் கஸ் டல்டன்... உடல்நலக்குறைவால் மரணம்!

By Gajalakshmi
Google Oneindia Tamil News

Recommended Video

    தமிழ் மீனவர்களை காப்பாற்றிய கேப்டன் மரணம்

    ஒட்டாவா : கனடாவில் கடந்த 1986ம் ஆண்டு நடக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 150 தமிழ் அகதிகளை மீட்ட மீனவர் கஸ் டல்டன் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். டல்டனின் இறுதிச் சடங்கு அவரது சொந்த ஊரில் நாளை நடைபெறுகிறது.

    கஸ் டல்டன், 1986ம் ஆண்டில் செய்த நல்ல காரியம் ஒன்றால் சர்வதேச ஊடகங்களின் ஹீராவானார். தெற்கு நியூஃபவுண்ட்லேண்ட் பகுதியில் 1986ம் வருட்ம் ஆகஸ்ட் மாதம் மீன்பிடிக்கச் சொன்ற போது, அவர் கண்ட காட்சி டல்டனை பதற்றம் அடையச் செய்தது.

    Gus Dalton who saved 150 tamil refugees passed away

    இலங்கை தமிழ் அகதிகள் சுமார் 150 பேர் அட்லாண்டிக் நடுக்கடலில் உயிருக்காக போராடிக் கொண்டிருந்தனர். சற்றும் தாமதிக்காத டல்டன் தன்னுடைய திறந்தவெளி படகில் அனைவரையும் மீட்டார். சுமார் 30 ஆண்டுகளாக மீன்பிடி தொழிலில் இருந்த டல்டனுக்கு கடலில் தத்தளித்த தமிழ் அகதிகளை பார்த்ததும் பதற்றம் தான் முதலில் ஏற்பட்டதாம்.

    எனினும் தன்னுடைன் வந்தவர்களின் உதவியுடன் படகில் மீட்க முடிந்தவர்கள் வரை மீட்டுவிட்டு, கனடா கடற்படைக்கு தகவல் கொடுத்து எஞ்சியவர்களையும் மீட்டுள்ளார் டல்டன். உயிருக்குப் போராடிய தங்களை காப்பாற்றியதற்காக டல்டனுடன் பலரும் நம்பு பாராட்டத்தொடங்கினர்.

    சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தங்களை கஸ் டல்டன் மீட்ட தினத்தை நினைவுகூரும் வகையில் அவரை சந்தித்து சிறப்பு பரிசுகளையும் தமிழ் அகதிகள் வழங்கினர். இந்நிலையில் 87 வயதான கஸ் டல்டன் கடந்த 16ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். அவரது இறுதிச் சடங்குகள் டல்டனின் சொந்த ஊரான அட்மிரல்ஸ் கடற்கரையில் நடைபெற உள்ளது.

    English summary
    Gus Dalton a fishing captain turs as a hero in 1986 who saved 150 Tamil refugees those were struggling life in Atlantic sea, died on his 87 years. His funeral will be held on Saturday morning in his hometown of Admiral's Beach.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X