இப்போ மோடிக்கு விசா கொடுப்பீர்களா?: அமெரிக்காவின் புதிய பதில்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: பாஜக பிரதமர் வேட்பாளரான மோடிக்கு விசா வழங்குவதில் தொடர்ந்து அமைதி காக்கும் அமெரிக்கா மாநில மற்றும் மத்திய அரசு தலைவர்கள் ஏ1 விசா பெற தகுதியானவர்கள் என்று தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை மறுநாள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படுகிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தான் ஆட்சி அமைக்கும் என்று தெரிவிக்கின்றன. பாஜகவும் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வது என்பது பற்றிய வேலைகளில் பரபரப்பாய் உள்ளது.

'Heads of Government Eligible for A1 Visas': US Ducks Question on Narendra Modi

இந்நிலையில் மோடிக்கு தொடர்ந்து விசா கொடுக்க மறுத்து வரும் அமெரிக்கா அவர் பிரதமர் ஆனால் என்ன செய்யும் என்ற கேள்வி எழுந்தது. இது குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளரான ஜென் ப்ஸாகி கூறுகையில்,

மாநிலங்கள் மற்றும் அரசுகளின் தலைவர்கள் ஏ1 விசா பெற தகுதியானவர்கள். அமெரிக்க விசா பெற தனிநபர்கள் தானாக தகுதி பெறுவதில்லை. புதிய இந்திய அரசுடன் பணியாற்ற அமெரிக்கா ஆவலாக உள்ளது. விசா கேட்டு விண்ணப்பிப்பது குறித்து நாங்கள் பேச விரும்பவில்லை என்றார்.

மோடிக்கு விசா மறுக்கப்படுவது குறித்து கேட்டதற்கு அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+