196 நாடுகள் ஏற்றுக் கொண்ட பாரீஸ் பருவநிலை மாற்ற உடன்பாட்டின் முக்கிய அம்சங்கள் என்ன?
பாரீஸ்: பாரீஸ் பருவநிலை மாற்ற மாநாட்டில் எட்டப்பட்ட உடன்பாட்டின் முக்கிய அம்சங்கள் செயல்வடிவம் பெற்றால் உலகம் நன்மை அடையும்.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்ற பருவநிலை மாற்ற மாநாட்டில் வரலாற்று சிறப்பு மிக்க உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. புவி வெப்பமயமாதலை 2 டிகிரி செல்சியசுக்கு கீழே குறைப்பது என்ற உடன்பாட்டை 196 நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன.
உலக நாடுகள் வரவேற்றுள்ள உடன்பாட்டின் முக்கிய அம்சங்கள்,

2 டிகிரி செல்சியஸ்
புவி வெப்பமயமாதலை 2 டிகிரி செல்சியஸுக்கு கீழே குறைக்க உலக நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் 1.5 டிகிரி செல்சியஸுக்கு குறைவாக வெப்பத்தை குறைக்கவும் முயற்சி செய்ய வேண்டும்.

நிதி
புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்த பணக்கார நாடுகள் நிதி அளித்து உதவ வேண்டும். 2020ம் ஆண்டில் இருந்து பணக்கார நாடுகள் ரூ.6 லட்சத்து 70 ஆயிரம் கோடி நிதி அளிக்க வேண்டும்.

கிரீன்ஹவுஸ் வாயுக்கள்
கிரீன்ஹவுஸ் வாயுக்கள் அதிக அளவில் வெளியேறுவதை தடுக்க முன்னேறிய நாடுகள் முன்நின்று வழிநடத்த வேண்டும். வளர்ந்து வரும் நாடுகளும் இந்த முயற்சியை மேம்படுத்துமாறு ஊக்குவிக்கப்படும்.

முயற்சி
புவி வெப்பமாக காரணமான கார்பன்-டை-ஆக்சைடு, கார்பன்-மோனாக்சைடு, நைட்ரிக்-ஆக்சைடு உள்ளிட்ட கிரீன்ஹவுஸ் வாயுக்கள் வெளியேற்றத்தை முடிந்த அளவுக்கு குறைக்க வேண்டும்.

உதவி
புவி வெப்பமயமாதலை கட்டுப்படுத்த வளர்ந்த நாடுகள் வளர்ந்து வரும் நாடுகளுக்கு நிதியுதவி செய்ய வேண்டும். பிற நாடுகளும் தானாக முன்வந்து நிதியுதவி செய்யலாம்.

மறுஆய்வு
2023ம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு 5 ஆண்டுக்கு ஒரு முறை மறுஆய்வு செய்யப்படும். மறுஆய்வின் முடிவில் உலக நாடுகள் இனி மேற்கொள்ள நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கப்படும்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications