இந்துவாக இருந்து கிறிஸ்தவரான தேவசகாயம்!போர் வீரர் முதல் புனிதர் பட்டம் வரை! முழு பின்னனி
வாடிகன்: தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டம் நட்டாலம் கிராமத்தை சேர்ந்த மறைசாட்சி தேவசகாயம் பிள்ளைக்கு இன்று வாடிகன் நகரில் போப் ஆண்டவர் பிரான்ஸிஸ் புனிதர் பட்டம் வழங்கினார். இதன்மூலம் தமிழ்நாட்டை உலகளவில் பெருமைப்படுத்திய தேவசகாயம் யார் என்பது பற்றிய முழுவிபரம் வருமாறு:
கன்னியாகுமரி மாவட்டம் நட்டாலத்தை சேர்ந்தவர் வாசுதேவன் நம்பூதி. இவரது மனைவி தேவகியம்மாள். இந்த தம்பதிக்கு 1712ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ம் தேதி பிறந்தவர் தான் நீலகண்டன் பிள்ளை.
நீலகண்டன் பிள்ளை சிறுவயது முதலே படிப்பில் கெட்டிக்காரர். பல்வேறு கலைகளை கற்பதில் ஆர்வம் கொண்டிருந்தார். இதனால் பல்வேறு கலைகளிலும், மொழிகளிலும் அவர் சிறந்து விளங்கினார்.

போர் வீரர் முதல் அரசவை அதிகாரி வரை
குறிப்பாக தமிழ், மலையாளம், வடமொழி ஆகியவற்றை கற்று தேர்ந்தார். மேலும் வர்மசாஸ்திரம், சிலம்படி, மல்யுத்தம், குதிரையேற்றம், அம்பு எய்தல், அடிமுறைகள், சண்டைப்பயிற்சி போன்ற பல கலைகளிலும் கைத்தேர்ந்தார். அவர்கள் வசிக்கும் பகுதி திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கு உட்பட்டது. இதையடுத்து மன்னரிடம் போர் படை வீரராக அவர் பணியாற்றினார். இவரது திறமையை கண்டு மன்னர் வியந்தார். இதையடுது்து அரசவை அதிகாரியாக நியமித்தார். நீலகண்டன் பத்மநாபபுரம் அரண்மனையைச் சுற்றிலும் கோட்டை கட்டுமான பணிகளை கண்காணித்தார். மேலும் அவர் அங்குள்ள நீலகண்டசாமி கோவில் அதிகாரியாகவும் இருந்தார். இந்தநிலையில் பார்கவி என்ற பெண்ணை திருமணம் செய்து இல்லற வாழ்வில் ஈடுபட்டார்.

மனம் மாற்றம்
இதற்கிடையே குளச்சல் போர் ஏற்பட்டது. 1741ம் ஆண்டு திருவிதாங்கூர் படைகளுக்கும், டச்சுப்படைகளுக்கும் இடையே நடைபெற்ற போரில் டச்சுப்படைத் தளபதி பெனடிக்ட் டிலனாய் திருவிதாங்கூர் மன்னரிடம் சரண் அடைந்து போர்க்கைதியானார். பிற்காலத்தில் மன்னர் அவரை தமது படைத்தளபதியாக நியமித்தார். கத்தோலிக்க கிறிஸ்தவரான டிலனாயுடன், நீலகண்டனுக்கு பழக்கம் ஏற்பட்டது. அப்போது டிலனாய், இயேசு கிறிஸ்துவின் பாடுகளையும், கிறிஸ்தவர்களின் புனித நூலான திருவிவிலியத்தில் உள்ள யோபுவின் வரலாறையும் மேற்கோள் காட்டி ஆறுதல் கூறினார். இந்த விளக்கம் நீலகண்டனுக்கு பிடித்துப்போனதோடு, அவருடைய மனதில் ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தியது.

மனைவியுடன் திருமுழுக்கு
இதையடுத்து இயேசு பற்றி முழுமையாக அறிய அவர் விரும்பினார். இதையடுத்து திருமுழுக்கு பெற்று கிறிஸ்தவராக மதம் மாறினார். தற்போதைய திருநெல்வேலி மாவட்டத்தின் வடக்கன்குளத்தில் உள்ள திருக்குடும்ப ஆலயத்தில் தேவசகாயம் பிள்ளை என்னும் பெயரில் திருமுழுக்கு பெற்றார். அவருடன் மனைவியும் மதம் மாறினார். அவரது பெயர் ஞானப்பூ என்ற பெயர் சூட்டப்பட்டது. தேவசகாயம் திருமுழுக்கு பெற்றபிறகு நற்செய்தியை அறிவிக்க தொடங்கினார். சில படைவீரர்களும் மனம் மாறி கிறிஸ்தவரானார்கள்.

சிறையில் அடைப்பு
இதையடுத்து மனிதர்கள் அனைவரும் பிறப்பால் சமம், சாதி, மதம் எனும் ஏற்றத்தாழ்வுகள் மனிதர்களுக்கு கிடையாது என போதனைகளை துவங்கினார். தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மக்களிடம் நெருக்கமாக பழகினார். பலரை கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றினார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. கிறிஸ்தவ மதத்தை கைவிட்டு வலியுறுத்தப்பட்டது. இருப்பினும் அவர் செவிசாயக்கவில்லை. மன்னர் கூறியும் அவர் மனம் மாறவில்லை. இதையடுத்து மன்னர் மார்த்தாண்ட வர்மா தேவசகாயத்தை சிறையில் அடைக்க உத்தரவிட்டது. சிறை தண்டனை மூலம் அவர் மனம் மாறுவார் என்ற எதிர்பார்ப்பும் பொய்யானது. அவர் நற்செய்தி அறிவிப்பை கைவிடவில்லை.

துன்புறுத்தி சுட்டுக்கொலை
இதனால் அவர் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டார். அவரை கொல்ல முடிவு செய்தனர். இதையடுத்து மற்றவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அவரை எருமைமாடு மீது அமர்த்தி ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டார். இறுதியாக ஆரல்வாய்மொழி அருகே காற்றாடி மலையில் படைவீரர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது உடல் வனவிலங்குகளுக்கு இரையாக போடப்பட்டதாக கூறப்படுகிறது. உடலின் சில பாகங்கள் கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தின் பலி பீடத்துக்கு முன்பு அடக்கம் செய்யப்பட்டது. இவரிடம் ஆசி பெற சென்றவர்களுக்கு நல்லது நடப்பாதக கூறப்படுகிறது. இதன்மூலம் மறைசாட்சி தேவசகாயம் புனிதராக கருதப்பட்டு வந்தார்.

புனிதர் பட்டம்
இவருக்கு புனிதர் பட்டம் வழங்க வேண்டும் என்று தமிழக கத்தோலிக்க திருச்சபை சார்பிலும், கோட்டார் மறைமாவட்டம் சார்பிலும், இறைமக்கள் சார்பிலும் கத்தோலிக்க திருச்சபையின் தலைமையகமான வாடிகனில் உள்ள புனிதர் பட்டமளிப்பு பேராயத்துக்கு தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இது நீண்ட காலமாக கிடப்பில் இருந்த நிலையில் இன்று 2012ல் தேவசகாயம் முக்திப்பேறு பெற்றவர் (அருளாளர்) என அறிவிக்கப்பட்டது. கடந்த 2021ல் மறைசாட்சி தேவசகாயத்துக்கு புனிதர் பட்டம் வழங்குவதாக அறிவிப்பு வெளியானது. அதன்படி வாடிகனில் உள்ள செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் இன்று மதியம் மறைசாட்சி தேவசகாயத்துக்கு புனித பட்டத்தை போப் ஆண்டவர் பிரான்சிஸ் வழங்கினார். இதன்மூலம் புனிதர் பட்டம் பெற்ற முதல் தமிழர் என்ற பெருமையை தேவசகாயம் பெற்றுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications