For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாளை பாகிஸ்தான் பொதுத்தேர்தல்.. நவாஸ் ஷெரீப், இம்ரான் கான் இடையே கடும் போட்டி!

பாகிஸ்தான் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நாளை ஜீலை மாதம் 25-ம் தேதி நடைபெற உள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் இரண்டு எதிர் எதிர் துருவங்களான நவாஸ் ஷெரீப், இம்ரான் கான் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

பாகிஸ்தான் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நாளை ஜீலை மாதம் 25-ம் தேதி நடைபெற உள்ளது. பாகிஸ்தானில் ஆளும் கட்சியின் ஆட்சிக்காலம் கடந்த மே 31-ம் தேதியுடன் முடிவடைந்தது. அங்கு புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படும் வரை இடைக்கால பிரதமர் ஒருவர் செயல்படுவார்.

How Pakistan Punjab will play an important role in General Election of the country

இதையடுத்து புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் பல முக்கியமான நபர்கள் போட்டியிடுகிறார்கள். இம்ரான் கான், தற்போதைய பிரதமர் அப்பாஸி, அந்நாட்டின் முக்கிய வேட்பாளரான பிலாவால் போட்டியிடுகிறார்கள்.

மொத்தம் அங்கே 272 நாடாளுமன்ற இடங்கள் இருக்கிறது. இதில் 140 இடங்கள், பாகிஸ்தானின் பஞ்சாப்பில் இருக்கிறது. இதனால் இந்த தொகுதியில் வெற்றிபெறும் நபர்கள் அங்கு தேர்தலில் எளிதாக வெற்றிபெற முடியும். இந்த பகுதியில் வெற்றிபெற நவாஸ் ஷெரீப்பின் பிஎம்எல்-என் கட்சிக்கும், இம்ரான் கானின் பிடிஐ கட்சிக்கும் இடையில் கடும் போட்டி நிலவுகிறது.

இதனால் பஞ்சாப் தொகுதியை யார் பிடிப்பது என்று கேள்வி நிலவி வருகிறது. நவாஸ் ஷெரீப் ஜெயிலியல் இருக்கும் நிலையில் கூட பிஎம்எல்-என் கட்சி பஞ்சாப்பில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மத்திய பாகிஸ்தானில் இம்ரான் கானின் கட்சியே வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அந்த நாட்டில் மொத்தம் 100 மில்லியன் வாக்காளர்கள் இருக்கிறார்கள். 59.2 மில்லியன் ஆண் வாக்காளர்களும், 46.7 மில்லியன் பெண் வாக்காளர்களும்உள்ளனர். இதனால் தற்போது இந்த தேர்தல் மிக முக்கிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

English summary
General Election in Pakistan to be held in July 25 says press report of President Office. Pakistan Punjab will play an important role in General Election of the country.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X