சர்வ வல்லமை வாய்ந்த அமெரிக்காவை 20 வருடங்கள் தாலிபான்கள் எதிர்த்து நின்றது எப்படி?
காபூல்: 2001ம் ஆண்டு நவம்பர் மாதம், ஆப்கன் தலைநகர் காபூலில் இருந்து வெளியேற்றப்பட்டனர் தாலிபான்கள். கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கு மேலாக மட்டுமே அவர்கள் ஆட்சியில் இருந்தனர், ஆனால், அமெரிக்க வரலாறு கண்ட மிக நீண்ட யுத்தம் ஆப்கனில்தான் அமைந்தது. மொத்தம் 20 வருடங்கள். அமெரிக்க ராணுவம் அங்கேயே முகாமிட தேவை ஏற்பட்டது.
Recommended Video
அமெரிக்காவை விஞ்சி மற்றும் அமெரிக்காவிடமிருந்து 80 பில்லியன் டாலர் மதிப்புள்ள உபகரணங்கள் மற்றும் பயிற்சிகளைப் பெற்ற ஆப்கானிஸ்தான் ராணுவத்தை தோற்கடித்த போராடும் சக்தியாக தாலிபான்களை ஆக்கியது எது?
கிட்டத்தட்ட வரம்பற்ற செல்வம், உபகரணங்களை கொண்ட அமெரிக்கா போன்ற ஒரு எதிரியுடன் 20 வருட கால யுத்தத்தில் தங்களைத் தக்கவைத்துக்கொள்ள தாலிபான்களால் எப்படி முடிந்தது. அதற்கான நிதியை அவர்கள் எங்கிருந்து பெற்றனர்?

ஐ.நா. அறிக்கை
2020ம் ஆண்டு, மே மாதம் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில், ஒட்டுமொத்த தாலிபான் வருடாந்திர ஒருங்கிணைந்த வருவாய் $ 300 மில்லியன் முதல் ஆண்டுக்கு $ 1.5 பில்லியன் வரை இருக்கும் என்று மதிப்பிட்டுள்ளது. 2019ம் ஆண்டிற்கான புள்ளிவிவரங்களில் வருமானம் குறைவாக இருந்தபோதிலும், தாலிபான்கள் அவர்களின் வளங்களை திறம்பட மற்றும் திறமையாகப் பயன்படுத்தினர், பண நெருக்கடியை அனுபவிக்கவில்லை என்று அதிகாரிகள் சுட்டிக் காட்டுகிறார்கள்.

போதைப் பொருள் வர்த்தகம்
தாலிபான்களுக்கு கிடைக்கும் நிதிகளின் முதன்மை ஆதாரம் போதைப்பொருள் வர்த்தகமாகும். போதை பயன்பாடுக்கு எதிராக குடிமக்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்து மரண தண்டனை கொடுக்கும் தாலிபான்கள், அவர்கள் வருமானத்திற்கு நம்பியுள்ளது போதை பொருட்களைத்தான். பல வருடங்களாக ஹெராயின் சாகுபடி தாலிபான் வருவாயின் பெரும்பகுதிக்கு காரணமாக இருந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் மெத்தாம்பேட்டமைன் போதை பொருளும் சமீப காலமாக பெரும் வருவாய் ஈட்டும் விஷயமாக மாறிப்போனது.

மெத்தாம்பேட்டமைன் போதை மருந்து
ஐ.நா. அறிக்கையின்படி, மெத்தாம்பேட்டமைனின் பற்றி முதன்முதலில் 2014 ஆம் ஆண்டில் (யுஎன்ஓடிசி) ஐக்கிய நாடுகள் அலுவலகம் பதிவு செய்துள்ளது. 9 கிலோ கண்டுபிடிக்கப்பட்டதாக ஆவணத்தில் உள்ளது. ஹெராயினை விட இதில் அதிக லாபம் கிடைக்கிறதாம். ஏனெனில் அதன் இடு பொருட்கள் விலை குறைந்தது. பெரிய ஆய்வகங்கள் தேவையில்லை. என்று ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதை மருந்து கடத்த வரிகள்
"தாலிபான்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஹெராயின் கடத்தல் மற்றும் வரிவிதிப்பு முறை பாகிஸ்தானின் எல்லையில் உள்ள ஹிசராக் முதல் துர் பாபா வரை, நங்கர்ஹாரின் தெற்கு மாவட்டங்கள் வரை நீண்டுள்ளது" என்று அதிகாரிகளை மேற்கோள் காட்டி அந்த அறிக்கை கூறுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும், கடத்தல்காரர்கள் ஒரு கிலோ ஹெராயினுக்கு 200 பாகிஸ்தான் ரூபாய் (சுமார் 1.30 டாலர்கள்) அளவுக்கு தாலிபான் மாவட்டத் தளபதிகளுக்கு வரி செலுத்தினர். இதன் மூலம் தாலிபான்களுக்கு வருவாய் கிடைத்தது. போதை மருந்து கடத்தல்காரர்கள் அடுத்த மாவட்டத்திற்குச் செல்வதற்கு முன் வரி செலுத்தினரா என்பதை தாலிபான்கள் உறுதி செய்தனர்.

அபின் உற்பத்தி
கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், "ஆப்கானிஸ்தான், அதிக அபின் உற்பத்தி செய்யப்படும் நாடு, இது கடந்த ஐந்து ஆண்டுகளில் உலகளாவிய அபின் உற்பத்தியில் சுமார் 84 சதவிகிதத்தை தன்வசம் கொண்டுள்ளது, அண்டை நாடுகள், ஐரோப்பா, அருகில் மற்றும் நடுத்தர நாடுகளில் அபின் சப்ளை செய்கிறது. கிழக்கு ஆசியா, தெற்காசியா மற்றும் ஆப்பிரிக்கா மற்றும் ஓரளவுக்கு வட அமெரிக்கா (குறிப்பாக கனடா) மற்றும் ஓசியானியா ஆகியவற்றுக்கு அபின் சப்ளை ஆப்கனிலிருந்து நடந்து வருகிறது.

பல வகைகளில் வருமானம்
தாலிபான் நிறுவனர் முல்லா முஹம்மது ஒமரின் மகன் முல்லா முஹம்மது யாகூப் சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகங்களை மேற்பார்வை செய்து வந்துள்ளார். தாலிபான்கள் 2020 மார்ச் மாதத்துடன் முடிவடைந்த ஆண்டில் 1.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை சம்பாதித்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில், 416 மில்லியன் டாலர்கள் போதைப்பொருள் வர்த்தகத்தில் இருந்து வந்தது. இரும்பு தாது, பளிங்கு, தாமிரம், தங்கம், துத்தநாகம் மற்றும் அரிய உலோகங்கள் சட்டவிரோத சுரங்கத்திலிருந்து $ 450 மில்லியனுக்கும் அதிகமான வருவாய் கிடைத்துள்ளது. மிரட்டி பணம் பறித்தல் மற்றும் வரிகள் போன்றவற்றின் மூலம், 160 மில்லியன் டாலர்கள் வரை சம்பாதித்துள்ளது. வளைகுடா நாடுகளில் இருந்து $ 240 மில்லியன் நன்கொடைகளை தாலிபான்கள் பெற்றுள்ளனர். பணத்தை வெள்ளைப் பணமாக மாற்ற $ 240 மில்லியன் மதிப்புள்ள நுகர்வோர் பொருட்களை இறக்குமதி செய்து ஏற்றுமதி செய்துள்ளனர் தாலிபான்கள்.












Click it and Unblock the Notifications