For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் பூமியை பிளக்கும் அளவுக்கு சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு.. ஷாக் வீடியோ

Google Oneindia Tamil News

பெய்ரூட்: லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில் சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு ஏற்பட்டுள்ளது, ஜன்னல்களை அதிர்ந்தன. கட்டிடங்கள் பயங்கரமாக சேதமாகின. இந்த வீடியோ காண்போரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

இந்த குண்டுவெடிப்பில் 100க்கும்மேற்பட்டோர் படுகாயம் அடைந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 10க்கும்மேற்பட்டோர் பலியாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது. லெபனானின் தலைநகர் பெய்ரூட்டின் துறைமுகப் பகுதியில் உள்ள கிடங்குகளில் நெருப்புடன் புகை வந்து கொண்டே இருந்தது.

இந்நிலையில் திடீரென பயங்கர சத்ததுடன் வெடித்து சிதறியது. சில மைல் தூரத்திற்கு பூமியே குழுங்கியது. இந்த சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு எப்படி நடந்தது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

என்ன திமிர்.. காஷ்மீரையும் குஜராத்தின் ஜுனகத்தையும் சேர்த்து புதிய மேப் வெளியிட்ட இம்ரான்கான்!என்ன திமிர்.. காஷ்மீரையும் குஜராத்தின் ஜுனகத்தையும் சேர்த்து புதிய மேப் வெளியிட்ட இம்ரான்கான்!

விபத்தா சதியா?

விபத்தா சதியா?

குண்டு வெடித்தபின் ஏற்பட்ட அதிர்வால் சுற்றியிருந்த கட்டிடங்கள் மிகப்பெரிய சேதம் அடைந்தன. இந்த குண்டுவெடிப்பு எப்படி ஏற்பட்டது என்பதற்கான காரணங்கள் தெரியவரவில்லை. விபத்தா அல்லது சதி செயலா என்ற தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.

அதிர்ச்சியில் உறைந்தனர்

அதிர்ச்சியில் உறைந்தனர்

மிக மோசமான குண்டு வெடிப்பு என்று பெய்ரூட்டில் உள்ள செய்தியாளர்கள் தெரிவித்தனர். "நான் தெருவில் நடந்து கொண்டிருந்தேன், நான் தரையில் வீசப்பட்டேன்" என்று கோத்ர் என்பவர் அதிர்ச்சியுடன் தெரிவித்தார். மக்களிடையே "பீதி மற்றும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. எல்லா இடங்களிலும் கண்ணாடிகள் உடைந்து சிதறி உள்ளன. கட்டிடங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர்.

போராடும் ஹெலிகாப்டர்கள்

போராடும் ஹெலிகாப்டர்கள்

இந்த சக்திவாய்ந்த குண்டு வெடிப்பில் நூற்றுக்கணக்கான மக்கள் காயமடைந்துள்ளதாக லெபனானின் சுகாதார அமைச்சர் ஹமாத் ஹசன் தெரிவித்தார். துறைமுகப் பகுதியைச் சுற்றி எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்க ஹெலிகாப்டர்கள் போராடி வருகின்றன.

பலர் படுகாயம்

பலர் படுகாயம்

குண்டு வெடிப்பு நடந்த இடத்தின் அருகே உடைந்து போய்கிடந்த ஓரியண்ட் குயின் என்ற இத்தாலிய கப்பலின் கேப்டன், இதில் இருந்த பலர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்றார்..அவரது கப்பல் முழுவதும் எரிந்து கிடந்தது. ரத்த வெள்ளத்தில் சிதறி கிடந்தது. 10க்கும்மேற் பட்டோர் பலியாகி இருக்கலாம் என கூறப்படுகிறது.

English summary
Large explosion rocks Lebanon capital Beirut. Thick smoke seen rising above Beirut after powerful blast; cause of explosion remains unknown.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X