For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கொத்துக் கொத்தாய் செத்து விழுந்த பறவைகள்.. பறக்கும் போதே பரிதாபம்.. பதைபதைக்க வைக்கும் காட்சிகள்

Google Oneindia Tamil News

மெக்சிகோ: மெக்சிகோ நாட்டில் பறந்து கொண்டிருந்த போது நூற்றுக்கணக்கான பறவைகள் திடீரென கொத்துக் கொத்தாய் கீழே விழுந்த நிகழ்வுகள் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கழுத்தில் மஞ்சள் நிறமும் மற்ற பாகங்களை கருப்பு நிறமும் கொண்ட பறவைகள் கனடாவில் அதிகமாக வசிக்கின்றன . நமது ஊரில் வசிக்கும் முனியா குருவிகளைப் போல அந்தப் பகுதிகளில் இந்த பறவைகள் அதிகளவில் வசிக்கின்றன.

முதல் முறையாக வாக்களிக்கும் 4 மலைகிராம மக்கள்! ஓட்டு போடுவதை திருவிழா போல் கொண்டாடும் பழங்குடியினர்!முதல் முறையாக வாக்களிக்கும் 4 மலைகிராம மக்கள்! ஓட்டு போடுவதை திருவிழா போல் கொண்டாடும் பழங்குடியினர்!

ஆண்டுதோறும் கனடாவிலிருந்து இந்த வகை பறவைகள் மெக்சிகோவுக்கு இனப்பெருக்கத்திற்காக பல நூறு கிலோமீட்டர்கள் கடந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் மெக்சிகோ நாட்டில் மர்மமான முறையில் இந்த வகை பறவைகள் திடீரென இறந்து கொத்தாக கீழே விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

சிசிடிவி காட்சிகள்

சிசிடிவி காட்சிகள்

மெக்சிகோ நாட்டின் சிவாஹுவா நகரின் பரபரப்பான சாலைகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு அதிர்ச்சி காட்சி பதிவாகியிருந்தது. அதில் வானில் மொத்தமாக பறந்து கொண்டிருந்த பறவை கூட்டம் திடீரென சாலையில் விழுந்தது பதிவாகி இருந்தது. கரும்புகை கூட்டம் போல திடீரென எழுந்த பறவைகளில் பெரும்பாலான பறவைகள் பறந்து சென்ற நிலையில் சில பறவைகள் சாலையில் விழுந்து இறந்து கிடந்தன.

மக்கள் குழப்பம்

மக்கள் குழப்பம்

வானத்தில் பறவைகள் பறந்து கொண்டிருந்தபோது திடீரென கீழே விழுந்த வினோத காட்சிகள் சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக பரவியது. தொடர்ந்து வேகமாக சமூக வலைதளங்களில் பரவிய இந்த வீடியோவால் சமூக ஊடக பயனாளர்கள் திகிலடைந்து குழப்பத்திற்கு உள்ளாயினர் மேலும் இதுகுறித்து நிபுணர்களும் அரசு விளக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

காரணம் என்ன?

காரணம் என்ன?

இதையடுத்து அங்கு விரைந்த கால்நடை மருத்துவர்கள் இறந்துகிடந்த பறவைகளை பரிசோதித்த பின்னர் நச்சுப் புகையை சுவாசித்ததால் அல்லது மின்கம்பிகளில் இருந்து மின்சாரம் தாக்கியதால் அந்த பறவைகள் விழுந்து இறந்திருக்கலாம் என மெக்சிகன் செய்தித்தாள் நிறுவனம் ஒன்றில் கூறியுள்ளார்.ஆனால் கூட்டமாக பறந்து கொண்டிருக்கும்போது வேட்டையாடும் பறவை காரணமாக இந்த பறவைக்கூட்டம் திடீரென கீழே விழுந்து எழுவது போல இருக்கலாம் எனவும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

நிபுணர்கள் விளக்கம்

நிபுணர்கள் விளக்கம்

பெரிக்ரைன் அல்லது பருந்து போன்ற வேட்டையாடும் விலங்குகள் பறவைக்கூட்டத்தை துரத்தி இருக்கலாம் எனவும் அவற்றை ஏமாற்றுவதற்காக பறவைகள் கீழே விழுந்து மீண்டும் பறந்திருக்கலாம் என இங்கிலாந்தின் சூழல் மற்றும் நீரியல் மையத்தின் நிபுணரான டாக்டர் ரிச்சர்ட் ப்ரோட்டன் கூறியுள்ளார். ஆரம்பத்தில் ஒரு அலை போல பறவைகள் செயல்பட்டு மீண்டும் பறக்கின்றன என்பதால் வேட்டை பறவையை ஏமாற்ற அவை இவ்வாறு செயல்பட்டிருக்கலாம் என கூறினார்.

சாதாரண நிகழ்வு

சாதாரண நிகழ்வு

மேலும் இதுகுறித்து மான்செஸ்டர் மெட்ரோபாலிட்டன் பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு உயிரியல் பேராசிரியரான டாக்டர் அலெக்சாண்டர் லீஸ், இதே கருத்தை ஆமோதித்து உள்ளார். வேட்டையாடப்படும் மிகப் பெரிய விலங்குகளை சந்திப்பதை தவிர்க்கும் வகையில் அவை கூட்டமாக தரையில் விழுந்து விடுவது தான் காரணமாக இருக்கும் என தான் நிச்சயமாக கூறுவேன் எனவும், இது போன்ற அசாதாரண நிகழ்வுகளுக்கு எல்லாம் சுற்றுச்சூழல் மாசுபாடுகள் தான் காரணம் எனக் கூறுவது முழங்காலுக்கு சமுடிச்சுப் போடுவது போல் இருப்பதாகவும் இவை சாதாரண நிகழ்வுகள் தான் எனவும் இவை எப்போதும் நடப்பதுதான் வழக்கம் எனவும் அவர் கூறியுள்ளார்.

English summary
The events of hundreds of birds suddenly falling from a cluster while flying in Mexico have caused great shock and excitement.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X