For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இயற்கை நினைத்தால் நிலம் கூட கடலாகும்.. ஒரே இரவில் அமெரிக்காவை மிரட்டிப்போன 'ஹார்வி'!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஒரே இரவில் மக்களை மிரட்டிவிட்டு சென்றுள்ளது ஹார்வி புயல்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

நியூயார்க் : மெக்சிகோ வளைகுடாவில் உருவான ஹார்வி புயல் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் தென் கிழக்கு பகுதியில் மெக்சிகோ வளைகுடாவில் உருவான புயலுக்கு ஹார்வி எனப் பெயரிடப்பட்டுள்ளது.4ம் எண் புயலாக வலுவடைந்துள்ள இந்த புயல் டெக்சாஸ் மாகாணத்தை இந்திய நேரப்படி காலை 7 மணிக்கு தாக்கியது. புயல் காரணமாக 130 மைல் (215 கி.மீ.) வேகத்தில் காற்று வீசி வருகிறது.

கார்பஸ் கிருஸ்டி பகுதி முதல் ஹஸ்டன் வரை குடியிருக்கும் லட்சக்கணக்கான பொதுமக்கள், பல்வேறு வாகனங்கள் மூலம் பாதுகாப்பான இடங்களை நோக்கி ஏற்கனவே வெளியேறினர். டெக்ஸாஸை தாக்கியுள்ள புயல் விக்டோரியா நகரம் நோக்கி நகரும் போது பலத்த சேதம் ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

உஷ் உஷ் சூறைக்காற்று

இதனிடையே ஹார்வே புயல் கடந்தாலும் சூறாவளிக் காற்று எப்படி வீசுகிறது என்று நெட்டிசன் ஒருவர் டுவிட்டரில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். காற்றை உணர்ந்தவர்களுக்கு இந்த உஷ் உஷ் சத்தம் சூறாவளியைக் கண்டு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.

கடலான நிலம்

ஹார்வே புயல் காரணமாக சூறாவளிக் காற்று மட்டுமின்றி கனமழையும் பெய்து வருகிறது. இயற்கை நினைத்தால் நிலம் கூட சில சமயம் கடலாகும் என்பது போல சாலையில் சூழ்ந்துள்ள வெள்ள நீரைக் கடக்கும் வாகனம் அங்குள்ள நிலைமையை உணர்த்துகிறது.

முன்எச்சரிக்கை

புயல் காரணமாக வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளதோடு, தேசிய பேரிடராகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விடுதியில் தங்கியுள்ளவர்களுக்கு ஒரு வேளை ஓட்டல் வெள்ளத்தில் மூழ்கினால் என்ன செய்ய வேண்டும் என்று நிர்வாகத்தின்ர் விளக்கம் அளித்துள்ளனர்.

எழும்பும் அலைகள்

கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத சூறாவளிக் காற்றால் கடல் அலைகள் பல அடி தூரம் எழும்புகின்றன. கடற்கரையை ஒட்டியுள்ள வீடுகளை தாக்கும் கடல் அலைகளின் காட்சியை விருது வென்ற கதை சொல்லி ஜிம் ஆட்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

English summary
Extreme strom at Texas caused heavy damage and continuous rainfal turns the land to waterpools.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X