For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஸ்காட்லாந்து பிரிவினையில் தலையிட மாட்டேன் - இங்கிலாந்து ராணி எலிசபெத்

Google Oneindia Tamil News

லண்டன்: ஸ்காட்லாந்து பிரிவினை தொடர்பான பொது வாக்கெடுப்பு விவகாரத்தில் தான் தலையிடப் போவதில்லை என்று பிரிட்டிஷ் ராணி எலிசபெத் கூறியுள்ளார்.

ராணி எலிசபெத் முன்பு போல அதிகம் பேசுவதில்லை. எப்போதாவது, மிக மிக அரிதாகத்தான் அறிக்கை விடுவார். அந்த வகையில் தற்போது ஸ்காட்லாந்து குறித்து அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஸ்காட்லாந்து பொது வாக்கெடுப்பில் நான் தலையிட மாட்டேன். தலையிடுமாறு காோரி எத்தரப்பிலிருந்தும் என்னை யாரும் கேட்டுக் கொள்ளவில்லை. இந்த விவகாரத்தில் நான் நடுநிலையுடன் இருக்க முடிவு செய்துள்ளேன் என்று பர்மிங்காம் அரண்மனை வெளியிட்ட அறிக்கையில் ராணி எலிசபெத் கூறியுள்ளார்.

I'm not going to intervene in referendum, says the Queen

முன்னதாக ஸ்காட்லாந்தைச் சேர்ந்த அமைச்சர் அலெக்ஸ் சல்மான்ட், தான் ராணியை சமீபத்தில் பார்த்துப் பேசியதாகவும், ஸ்காட்லாந்து பிரிவினையைத் தடுக்க அவர் முயற்சிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாகவும் கூறி சலசலப்பை ஏற்படுத்தியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.

ஆனால் எலிசபெத் தரப்புதிட்டவட்டமாக மறுத்துள்ளது. ராணி சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ராணி அரசியலுக்கு அப்பாற்பட்டவர். அதை காக்கும் வகையில் அரசியலில் உள்ளவர்கள் செயல்பட வேண்டும் என்று சல்மான்ட் பேச்சுக்கு குட்டு வைக்கப்பட்டிருந்தது.

மேலும் வாக்கெடுப்பு நடைபெறவுள்ள செப்டம்பர் 18ம் தேதி ஒரு நிகழ்ச்சி ஒன்றில் ராணி எலிசபெத் பிசியாக இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் ஸ்காட்லாந்து பிரிவு எலிசபெத்துக்குள் நிச்சயம் மன வேதனையை ஏற்படுத்தியிருப்பதாக கூறுகிறார்கள். முன்பு 1977ம் ஆண்டு அவர் முடிசூடியதன் 25வது ஆண்டு தினத்தின்போது அவர் பேசுகையில், நான் யுனைட்டெட் கிங்டத்தின் கிரேட் பிரிட்டன் - வடக்கு அயர்லாந்தின் ராணியாக முடி சூட்டப்பட்டதை மறக்கவில்லை. மறக்க மாட்டேன்.

இந்த சமயத்தில் நாம் அனைவரும் இணைந்து செயல்படுவதன் முக்கியத்துவத்தையும், பலன்களையும் நாம் உணர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The Queen issued a rare public statement last night to deny claims she had been asked to step in over the Scottish referendum. Following a report that a number of MPs were suggesting privately that the Monarch, who is thought to be strongly in favour of the Union, should intervene, Buckingham Palace insisted she would remain neutral. Alex Salmond, the Scottish First Minister, risked controversy yesterday by declaring that he had met the Queen recently at Balmoral and insisting that she would be proud to reign over an independent Scotland.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X