For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என்னை 43, 200 பேர் பலாத்காரம் செய்துள்ளனர்: மெக்சிகோ இளம்பெண்ணின் கண்ணீர் கதை

By Siva
Google Oneindia Tamil News

மெக்சிகோ: மெக்சிகோவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தினமும் 30 பேர் என 43 ஆயிரத்து 200 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

மெக்சிகோவைச் சேர்ந்தவர் கார்லா ஜெசிந்தோ(23). பெண்களை கடத்தி விபச்சாரத்தில் தள்ளிவிடுபவர்களில் ஒருவர் கார்லாவுக்கு 12 வயது இருக்கையில் அவரை அணுகி இனிமையாகப் பேசி தன்னுடன் வந்தால் பணம், பரிசுகள், கார்கள் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

பிரச்சனை, பிரச்சனை என்று இருக்கும் வீட்டில் இருந்து கிளம்பினால் போதும் என்று கார்லாவும் அந்த நபருடன் டெனான்சிங்கோ நகருக்கு சென்றார். கடத்தப்படும் பெண்கள், சிறுமிகள் பெரும்பாலும் டெனான்சிங்கோ நகருக்கு தான் அழைத்து செல்லப்படுகிறார்கள்.

3 மாதங்கள் கழித்து கார்லாவை அந்த நபர் குவாடலஜரா நகருக்கு அழைத்துச் சென்று விபச்சாரத்தில் தள்ளிவிட்டார்.

Rape Victim

இது குறித்து கார்லா கூறுகையில்,

காலை 10 மணிக்கு வேலையை துவங்கினால் நள்ளிரவு ஆகிவிடும். தினமும் 30 பேர் என 4 ஆண்டுகளில் 43 ஆயிரத்து 200 பேர் என்னை பாலியல் பலாத்காரம் செய்தனர். நான் அழுவதை பார்த்து சில ஆண்கள் சிரிப்பார்கள்.

நான் என் கண்ணை மூடிக் கொள்வேன். அந்த ஆண்கள் என்னிடம் நடந்து கொள்வதை பார்க்காமல் இருக்க கண்களை மூடிக் கொள்வேன். ஒரு வாடிக்கையாளர் என் கழுத்தில் முத்தமிட்டு கடிக்கையில் அவரது பல் பதிந்துவிட்டது. இதை பார்த்து என்னை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியவர் ஆத்திரம் அடைந்து சங்கிலியால் என்னை அடித்தார்.
முகத்தில் காரித் துப்பினார் என்றார்.

கடந்த 2006ம் ஆண்டு மீட்கப்பட்ட கார்லா பெண்கள், சிறுமிகள் கடத்தப்படுவதற்கு எதிராக பிரச்சாரம் செய்து வருகிறார்.

English summary
A 23-year old Mexican woman told that she was raped by 43,200 men in a period of four years.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X