For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தல்... இம்ரான் கான் கட்சி முன்னிலை... பின்னுக்கு தள்ளப்பட்ட நவாஸ்

பாகிஸ்தானின் அடுத்த பிரதமருக்கான தேர்தலில் இம்ரான் கான் கட்சி முன்னிலை வகித்துள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    பாகிஸ்தான் தேர்தல்...இம்ரான் கான் கட்சி முன்னிலை- வீடியோ

    இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் நாடாளுமன்றத் தேர்தலில் இம்ரான் கான் கட்சி முன்னிலை வகித்துள்ளது. நாட்டின் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப்பின் கட்சி பின்னுக்கு தள்ளப்பட்டது.

    பாகிஸ்தானில் நாடாளுமன்றத் தேர்தல் நேற்று நடைபெற்றது. மொத்தமுள்ள 272 நாடாளுமன்றத் தொகுதிகளில் 3,459 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். அது போல் பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான், கைபர்-பாக்துன்வா ஆகிய 4 மாகாணத்திற்கு சட்டசபை தேர்தலும் நடைபெற்றது.

    Imran Khans party leading in Pakistan National Assembly election

    இந்நிலையில் இதன் வாக்கு எண்ணிக்கை நேற்று நள்ளிரவில் இருந்து எண்ணப்பட்டு வருகிறது. இதில் இம்ரான் கான் கட்சி 114 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

    நவாஸ் ஷெரீப் கட்சி 64 இடங்களில் முன்னிலை வகித்துள்ளது. பிலாவல் புட்டோ கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சி 42 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெறும் கட்சியே பாகிஸ்தானின் அடுத்த பிரதமர் பதவியில் அமரும்.

    English summary
    Imran Khan's Pakistan Tehreek-i-Insaf (PTI) party leading in Pakistan's National Assembly election.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X