விசித்திர கேஸ்.. ஒரே நேரத்தில்.. 2 வெவ்வேறு வகையான கொரோனா "வேரியண்ட்" தாக்கிய பெண்.. மரணம்!
ப்ரூசல்ஸ்: பெல்ஜியத்தில் ஒரே நேரத்தில் இரண்டு வகை கொரோனா காரணமாக பாதிக்கப்பட்ட பெண் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா வைரஸ் தோன்றிய காலத்தில் இருந்து தொடர்ந்து அது உருமாற்றம் அடைந்து வருகிறது. மியூட்டேஷன் என்று அழைக்கப்படும் இந்த மாற்றம், கொரோனா ஒருவரின் உடலில் இருந்து இன்னொருவரின் உடலுக்கு செல்லும் போதும், உடலுக்குள் பெருக்கம் அடையும் போதும் ஏற்படும் மாற்றம் ஆகும்.
முக்கியமான பல்வேறு மியூட்டேஷன்களில் கொரோனாவின் ஸ்பைக் புரோட்டின் மொத்தமாக மாறியுள்ளது. இந்த ஸ்பைக் புரோட்டின் மாறுவதால் வேக்சின் போட்டவர்களை கூட புதிய உருமாறிய கொரோனா வகைகள் தாக்கும் வாய்ப்புகள் உள்ளன.

ஏற்கனவே
கொரோனா வைரஸின் ஸ்பைக் புரோட்டீன், அதன் ஆர்என்ஏ என்று ஒவ்வொரு விஷயமும் மியூட்டேஷனின் மாற்றம் அடைய வாய்ப்புள்ளது. இதன் மூலம் கொரோனா வைரஸ் மேலும் வலிமையடைய வாய்ப்புள்ளது. அதோடு ஏற்கனவே கொரோனா மூலம் பாதிக்கப்பட்டு குணமடைந்த நபர்கள் மீண்டும் கொரோனா காரணமாக பாதிக்கும் வாய்ப்புகள் கூட உள்ளன.

மீண்டும்
இந்த நிலையில்தான் பெல்ஜியத்தில் 90 வயது பெண் ஒருவருக்கு ஒரே சமயத்தில் இரண்டு வகையான கொரோனா தாக்கி உள்ளது. ஒரே நேரத்தில் ஆல்பா வகை கொரோனாவும், பீட்டா வகை கொரோனாவும் அந்த பெண்ணிற்கு தாக்கி இருக்கிறது. இந்த ஆல்பா வகை கொரோனா யுகேவிலும், பீட்டா வகை கொரோனா தென்னாப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்டது ஆகும்.

மரணம்
பெல்ஜியத்தில் இரண்டு வகையான கொரோனா காரணமாக பாதிக்கப்பட்ட இந்த பெண் மரணமடைந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறி உள்ளனர். இவர் கடந்த மார்ச் 2021லேயே மரணம் அடைந்துவிட்டார். இவரின் வைரஸ் ஜீனோம் சோதனை செய்ததில் இரண்டு வகை கொரோனா ஒரே நேரத்தில் இவரின் உடலில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பாதிப்பு
இது மிகவும் விசித்திரமான கேஸ் என்றாலும் மக்கள் இப்படி பாதிப்பிற்கு உள்ளாக வாய்ப்புள்ளது. ஒரே நேரத்தில் இரண்டு வகையான கொரோனா தாக்கும் வாய்ப்புகள் உள்ளது. உருமாறிய கொரோனா வைரஸ்கள் பல்வேறு மாதிரியான ஸ்பைக் புரோட்டின்களை கொண்டு இருப்பதால் ஒரே நேரத்தில் பல வகையான கொரோனா உடலை தாக்கும் வாய்ப்புள்ளது.

ஒன்று அல்ல
ஒரே நேரத்தில் ஒருவருக்கு 2,3,4 என்று பல வகை உருமாறிய கொரோனா ஏற்பட வாய்ப்புள்ளது. பெல்ஜியமில் மரணம் அடைந்த அந்த பெண் இரண்டு பேர் மூலம் இந்த கொரோனா பரவலை பெற்று இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. பெல்ஜியத்தில் ஆல்பா, பீட்டா ஆகிய இரண்டு வகை கொரோனாவும் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.
Recommended Video

அதிர்ச்சி
இந்த புதிய கேஸ் காரணமாக இனி மற்றவர்களும் இதே போல பாதிப்படையும் வாய்ப்புகள் உள்ளன. கொரோனாவின் வீரியத்தை இது மேலும் அதிகரிக்கும் என்று அச்சம் எழுந்துள்ளது. அதோடு இரண்டு உருமாறிய கொரோனா மூன்றாவதாக வேறு ஒரு உருமாறிய கொரோனாவை ஏற்படுத்தும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications