என் தாய் நாடு இந்தியா.. பாக்.கை விட்டு இந்தியாவில் குடியேறும் மாஜி கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா?
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முதல் முதலாக இடம்பிடித்த இந்து மதத்தை சேர்ந்த வீரர் என்றால் அது டேனிஷ் கனேரியா தான். இவர் இந்தியா வம்சாவளியை சேர்ந்தவர். சமீபகாலமாக அவர் இந்தியாவுக்கு ஆதரவாக கருத்துகளை அவர் கூறிய வரும் நிலையில் டேனிஷ் கனேரியா நம் நாட்டில் குடியுரிமயை பெற்று குடியேற உள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் தான் டேனிஷ் கனேரியா, ‛ஜெய் ஸ்ரீராம்’ முழக்கத்துடன் விளக்கம் அளித்துள்ளார்.
பாகிஸ்தான் இஸ்லாமிய நாடாக உள்ளது. இந்த நாட்டின் கிரிக்கெட் அணியின் இஸ்லாமியர்கள் தான் விளையாடி வந்தனர். முதல் முதலாக இந்து மதத்தை சேர்ந்தவர் வீரராக இடம்பிடித்தார் என்றால் அது டேனிஷ் கனேரியா தான். இவரது முன்னோர்கள் இந்தியாவை பூர்வீமாக கொண்டவர்கள்.

இவர் சுழற்பந்து வீச்சாளர். லெக்ஸ் ஸ்பின்னராக பாகிஸ்தான் அணியில் ஜொலித்தார். கடந்த 2000ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்காக விளையாடினார். அதன்பிறகு ஓய்வு பெற்றார்.
இவர் இந்தியா குறித்து தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் அவ்வப்போது கருத்து தெரிவித்து வருகிறார். குறிப்பாக இந்தியாவின் பொருளாதாரம், செயல்பாடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை அவர் புகழ்ந்து கருத்து தெரிவித்துள்ளார். இந்நிலையில் தான் டேனிஷ் கனேரியா விரைவில் பாகிஸ்தானை விட்டு இந்தியாவில் குடியேற உள்ளார். இதற்காக தான் டேனிஷ் கனேரியா இந்தியா குறித்து நல்ல விதமாக கருத்து தெரிவித்து வருவதாக பலரும் கூறி வருகின்றனர்.
இதுதொடர்பாக டேனிஷ் கனேரியா விளக்கம் அளித்துள்ளார். இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛பல மக்கள் என்னிடம் கேள்விகள் கேட்கின்றனர். நான் ஏன் பாகிஸ்தான் பற்றி பேசவில்லை என்று கேள்வி டேக்கின்றனர். அதேபோல் இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்கள் பற்றி கருத்து தெரிவிப்பது பற்றியும் கேள்வி எழுப்புகின்றனர். இன்னும் சிலரோ இந்தியாவில் குடியுரிமை பெறுவதற்காக இப்படி செய்வதாக என் மீது குற்றம்சாட்டுகின்றனர்.
இதனால் இதுபற்றி விளக்கம் அளிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். பாகிஸ்தான் என்பது நான் வாழும் பூமியாக இருக்கலாம். ஆனால் எனது முன்னோர்கள் வாழ்ந்த பாரத் (இந்தியா) எனது தாய்நாடு. பாரத் எனக்கு கோவில் போன்றது. தற்போது இந்தியாவிடம் குடியுரிமை கோரும் திட்டம் எதுவும் இல்லை. ஆனால் எதிர்காலத்தில் என்னை போன்ற ஒருவர் அவ்வாறு குடியுரிமை பெற வேண்டும் என்று விரும்பினால் இந்தியாவில் சிஏஏ நடைமுறையில் உள்ளது.
தற்போது இந்தியாவின் குடியுரிமைக்காக நான் கருத்து சொல்வதாக யாரும் நினைக்க வேண்டாம். அப்படி சொல்பவர்கள் தவறான கருத்தை பரப்புகின்றனர். நான் நெறிமுறைகளை கடைப்பிடித்து தர்மத்துக்காக தொடர்ந்து நிற்பேன். அதேபோல் தேசவிரோதிகள் மற்றும் போலி மதசார்பற்றவர்களை அம்பலப்படுத்துவேன். இப்போது நான் நன்றாக இருக்கிறேன். ஸ்ரீராமின் ஆசிர்வாதத்துடன் நான் எனது குடும்பத்துடுன் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறனே். எனது விதி பகவான் ராமரின் கைகளில் உள்ளது. ஜெய் ஸ்ரீராம்'' என்று கூறியுள்ளார்.
இதன்மூலம் தற்போது இந்தியாவில் குடியேறும் திட்டம் இல்லை என்று டேனிஷ் கனேரியா கூறியுள்ளார். அதேவேளையில் இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர்கள் இந்தியாவில் குடியேற விரும்பினால் சிஏஏ மூலமாக குடியேறலாம் என்று அவர் கூறியுள்ளார்.
டேனிஷ் கனேரியாவின் முன்னோர்கள் நம் நாட்டின் குஜராத்தை சேர்நதவர்கள். அவரது தாய் இந்தியாவில் தான் பிறந்துள்ளார். சூரத்தில் வசித்து வந்தனர். அதன்பிறகு அவர்கள் பாகிஸ்தானின் கராச்சிக்கு குடியேறினார். டேனிஷ் கனேரியா பாகிஸ்தானின் கராச்சி நகரில் தான் பிறந்து அங்கேயே படித்தார். இருப்பினும் தனது முன்னோர்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்பதால் அடிக்கடி நம் நாட்டுக்கு ஆதரவான கருத்துகளை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications