காத்மாண்டு விமான நிலையம் மூடல்.. நேபாளத்திற்கு ஏர் இந்தியா, இண்டிகோ விமானங்கள் முழுமையாக நிறுத்தம்
காத்மாண்டு: நேபாளத்தில் அரசாங்கத்திற்கு எதிரான 'GenZ' போராட்டங்களால் அந்த நாட்டில் புரட்சி பரவியது. நிலைமை மோசமடைந்து வருவதால், காத்மாண்டுவின் திரிபுவன் சர்வதேச விமான நிலையம் அதிரடியாக மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இந்திய விமான நிறுவனங்களின் விமானங்கள் உட்பட பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. எப்போது நிலைமை சீராகுமோ, அதுவரை விமானங்கள் இயக்கப்பட வாய்ப்பே இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை, வங்கதேசம் போல் நேபாளத்திலும் நடந்துள்ளது.
காத்மாண்டு விமான நிலையம் மூடப்பட்டதாலும், நேபாளத் தலைநகரில் நிலவும் பாதுகாப்பு சூழல் காரணமாகவும், இந்திய விமான நிறுவனங்களான இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா ஆகியவை காத்மாண்டுவுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து புறப்படும் தங்கள் விமானங்களை உடனடியாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

நேபாளத்தில் விமானப் போக்குவரத்து அமைப்பு வெளியிட்ட தகவலின் படி,, விமான நிலையம் மதியம் 2 மணியளவில் மூடப்பட்டது. அப்போது, இண்டிகோவின் இரண்டு விமானங்களும், ஏர் இந்தியாவின் ஒரு விமானமும் காத்மாண்டுவில் தரையிறங்க அனுமதி எதிர்பார்த்து நகரத்தின் தெற்குப் பகுதியில் காத்திருந்துள்ளன. ஆனால், பிறகு அவை தரையிறங்க அனுமதிக்கப்படவில்லை.
இண்டிகோவும் ஏர் இந்தியாவும் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகத் தெரிவித்துள்ளது. நேபாள செய்தி ஊடகங்கள் அறிக்கைகளின்படி, காத்மாண்டு விமான நிலையத்தைப் பாதுகாக்க ராணுவம் நிறுத்தப்பட்டிருக்கிறது.
விமான நிலையம் மூடல்
இண்டிகோ தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "காத்மாண்டுவில் நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, விமான நிலையம் மூடப்பட்டிருக்கிறது. இதனால், காத்மாண்டுவுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் இப்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. உங்களது பயணம் பாதிக்கப்பட்டு இருந்தால், நீங்கள் எங்கள் இணையதளத்திற்குச் சென்று மாற்று விமானத்தைத் தேர்ந்தெடுக்கலாம் அல்லது பணத்தைத் திரும்பப் பெற விண்ணப்பிக்கலாம்.
இண்டிகோ விளக்கம்
நாங்கள் நேபாளத்தில் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். விரைவில் செயல்பாடுகளை மீண்டும் தொடங்க உள்ளூர் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து வருகிறோம். வாடிக்கையாளர்கள் சமீபத்திய நிலைமைகளை அறிய எங்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை தொடர்ந்து சரிபார்க்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். நேபாளத்தில் இயல்பு நிலை திரும்புவதை நாங்கள் எதிர்நோக்குகிறோம், உங்கள் பொறுமை மற்றும் புரிதலுக்கு நன்றி" இவ்வாறு இண்டிகோ கூறியுள்ளது.
ஏர் இந்தியா விளக்கம்
ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிவிப்பில் "காத்மாண்டுவில் தற்போது நிலவி வரும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, டெல்லி-காத்மாண்டு-டெல்லி வழித்தடத்தில் இயங்கும் AI2231/2232, AI2219/2220, AI217/218, AI211/212 ஆகிய விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டிருக்கிறது. நாங்கள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். பயணிகளின் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பு முக்கியமானது" என்று கூறியுள்ளார்.
என்ன பிரச்சனை
நேபாள அரசாங்கம் இருபதுக்கும் மேற்பட்ட சமூக ஊடக தளங்களுக்குத் தடை விதித்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து காத்மாண்டுவில் நடைபெற்ற போராட்டங்களில், திங்கட்கிழமை அன்று காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் 19 இளைஞர்கள் கொல்லப்பட்டனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பின்னர் தடை நீக்கப்பட்டபோதிலும், திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை போராட்டங்கள் தீவிரமடைந்தது. ஒருகட்டத்தில் அது ஒரு பெரும் ஊழல் எதிர்ப்பு இயக்கமாக உருவெடுத்தது. வங்கதேசத்தில் நடந்தது போல் நிலைமை மோசமடைந்த காரணத்தால். நேபாள பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி (KP Sharma Oli) தனது ராஜினாமாவை அறிவித்தார்.
இந்திய அரசு அறிக்கை
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், அண்டை நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றங்களை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். அமைதியான வழிகள் மற்றும் பேச்சுவார்த்தைகள் மூலம் அனைத்துப் பிரச்சினைகளும் தீர்க்கப்படும் என்று நம்புகிறோம். மேலும், நேபாளத்தில் உள்ள இந்தியர்கள் "கவனத்துடன் இருக்க வேண்டும். நேபாள அதிகாரிகளால் வழங்கப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
இந்தியா கவலை
நேற்று முதல் நேபாளத்தில் நடந்த மாற்றங்களை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். பல இளைஞர்களின் உயிரிழப்பு எங்களுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் நாங்கள் பிரார்த்திக்கிறோம்" என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications