For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒரே நேரத்தில் 20 பல்லை பிடுங்க டாக்டர் முயன்றதால் நோயாளி சாவு

By Veera Kumar
Google Oneindia Tamil News

நியூயார்க்: 20 பல்லையும் ஒரே நேரத்தில் பிடுங்க முயன்றதால் பெண் உயிரிழந்ததையடுத்து அமெரிக்காவை சேர்ந்த இந்திய பல் டாக்டர் லைசன்ஸ் ரத்து செய்யப்பட்டது.

இந்தியாவை பூர்வீகமாக கொண்ட பல் டாக்டர் ரஸ்மி பட்டேல், அமெரிக்காவின் என்பீல்ட், ரொடிங்டன் ஆகிய இரு நகரங்களில் கிளினிக் நடத்தி வருகிறார். 2003ம் ஆண்டு பட்டேல், பல் சிகிச்சை மேற்கொள்ள அமெரிக்க அரசு லைசென்ஸ் கொடுத்தது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி 17ம்தேதி ஜுடித் ஞான் என்ற 64 வயது பெண்மணி, தனது பல் பிரச்சனைக்காக பட்டேலை சந்திக்க வந்தார். முதாட்டியின் பல்களை அகற்றிவிட வேண்டும் என்று பட்டேல் ஐடியா கொடுத்துள்ளார்.

பிப்ரவரி 17ம்தேதி மூதாட்டியின் பல் பிடுங்க நாள் குறிக்கப்பட்டது. ஆனால் ஒரே நேரத்தில் 20 பற்களை பிடுங்க ரஸ்மி முயன்றுள்ளார். இதனால் மயக்கமடைந்த ஜுடித் ஞான் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து சுகாதாரத்துறை விசாரணை நடத்தியது. விசாரணையில், ஜுடித் மூர்ச்சையாகி விழுந்ததும் அவருக்கு ஆக்ஜிஜன் கூட கொடுக்காமல் ரஸ்மி பட்டேல் காலதாமதம் செய்தது நோயாளின் சாவுக்கு காரணமாகியுள்ளதாக அறிக்கை அளிக்கப்பட்டது. "பல் சிகிச்சையால் நோயாளி சாகவில்லை, மருத்துவரின் அஜாக்கிரதையால் அவர் இறந்துள்ளார்" என்று அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இதையடுத்து ரஸ்மி பட்டேலுக்கு வழங்கிய லைசென்ஸ்சை அமரிக்கா ரத்து செய்துள்ளது.

English summary
License of an Indian dentist was revoked in the US after he attempted to extract 20 teeth from the mouth of a 64-year-old woman in one sitting which led to her death.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X