For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரதமர் நரேந்திர மோடிக்கு பூடான் நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவம்.. சிறந்த தலைவர் என புகழாரம்

Google Oneindia Tamil News

பூடான்: இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு பூடான் அரசின் உயரிய விருதை வழங்க உள்ளதாக அந்நாட்டு பிரதமர் லோடே ஷேரிங் தெரிவித்துள்ளார்.

மேலும் பூடான் நாட்டின் உயரிய விருது பெற இந்திய பிரதமர் நரேந்திர மோடி தகுதியானவர் என்றும் லோடே ஷேரிங் புகழாரம் சூட்டியுள்ளார்.

பூடான் தேசிய தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு உரையாற்றி பூடான் பிரதமர் இதை உறுதிபடுத்தி உள்ளார்.

Indian Prime Minister Narendra Modi get Bhutan highest award

பூடான் நாடு முழுவதும் இன்று தேசிய தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு பூடான் நாட்டின் மிக உயரிய விருதான நகடக் பெல் ஜி கோர்லோ வழங்கப்பட உள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இது அந்த நாட்டின் உயரிய விருதாகும். பூடான் தேசிய தினத்தை முன்னிட்டு பிரதமர் லோடே ஷேரிங் நாட்டு மக்களுக்கு பேஸ்புக் மூலம் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டிருந்தார். அதில் உலகத் தலைவர்களில் சிறந்த தலைவர்களில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் ஒருவர் என குறிப்பிட்டார்.

எனவே, பூடான் நாட்டின் உயரிய விருதான நகடக் பெல் ஜி கோர்லோ பெறுவதற்கான தகுதி பிரதமர் நரேந்திர மோடிக்கு இருப்பதாக தெரிவித்துள்ளார். எனவே பூடான் நாட்டு மக்கள் சார்பாக தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக கூறினார். ஆன்மீக நாயகனாக பார்க்கப்படும் நரேந்திர மோடிக்கு விரைவில் விருது வழங்கி கவுரவித்து கொண்டாட காத்திருப்பதாக குறிப்பிட்டார். இதனால் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளதாக குறிப்பிட்ட பூடான் பிரதமர் கொரோனா தொற்றுகளின்போதும் மோடியின் நிபந்தனையற்ற நட்பும், ஆதரவும் நீடிப்பதாக பெருமையாக கூறினார்.

இயற்கை விவசாயத்துக்கு திரும்புவோம்... கெமிக்கல் உரங்களுக்கு குட்பை சொல்வோம்..பிரதமர் மோடி அழைப்பு இயற்கை விவசாயத்துக்கு திரும்புவோம்... கெமிக்கல் உரங்களுக்கு குட்பை சொல்வோம்..பிரதமர் மோடி அழைப்பு

English summary
The Prime Minister of Bhutan Lotay Tshering has said that he intends to present the highest award of the Government of Bhutan to the Prime Minister of India Narendra Modi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X