For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எல்லையில் பதற்றம்.. இந்திய ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சீனா குற்றச்சாட்டு

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: இந்திய ராணுவம் கிழக்கு லடாக் எல்லையில் பாங்கோங் த்சோ ஏரி பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சீன ராணுவம் குற்றம்சாட்டி உள்ளது. ஆனால் இது பற்றி இந்திய ராணுவம் தரப்பில் இதுவரை எந்த பதிலும் வெளியாகவில்லை.

Recommended Video

    இந்தியா துப்பாக்கிச் சூடு நடத்தியதாக புகார் கூறிய சீனா

    இந்தியாவிற்கும் சீனாவுக்கும் இடையே எல்லையில் கடந்த மே மாதம் முதல் மோதல் நீடித்து வருகிறது. இந்திய எல்லைகளை ஆக்கிரமித்து சீனா அத்துமீறி நடந்தது. இது தொடர்பாக கால்வானில் ஜூன் 15ம் தேதி அதிகாலையில் நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பபட்டனர். சீன தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டது. ஆனால் வெளியிடப்படவில்லை.

    அதன்பிறகு இரு நாட்டு எல்லையிலும் பதற்றம் நீட்டிக்கிறது. சீனா சில பகுதிகளில் படைகளை விலக்கி கொள்ள மறுத்துள்ளதுடன், இந்தியாவை அச்சுறுத்தி வருகிறது. இதற்கு பதிலடி தரும் வகையில் எல்லையில் இந்திய வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் லடாக்கில் லடாக்கில் உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் இந்திய வீரர்கள் எச்சரிக்கும் வகையில் சுட்டார்கள் என்று சீனா தெரிவித்துள்ளது.

    ஹாட்லைனில் கேள்வி கேட்ட இந்தியா.. அருணாசலப்பிரதேசம் சீனாவில் இருக்கும் ஒரு பகுதி.. சீனா பகீர் பதில்!ஹாட்லைனில் கேள்வி கேட்ட இந்தியா.. அருணாசலப்பிரதேசம் சீனாவில் இருக்கும் ஒரு பகுதி.. சீனா பகீர் பதில்!

    இந்தியா நுழைந்தது

    இந்தியா நுழைந்தது

    சீன இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் இதுபற்றி கூறும் போது, இந்திய இராணுவம் "சட்டவிரோதமாக உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதி கடந்து, பாங்காங் ஏரியின் தென் கரையிலும், ஷென்பாவ் மலைப் பகுதியிலும் நுழைந்தது.

    எதிர் நடவடிக்கை

    எதிர் நடவடிக்கை

    இந்த நடவடிக்கையின் போது, இந்திய இராணுவம் பிரதிநிதித்துவப்படுத்திய சீன எல்லைக் காவல் ரோந்துப் பணி வீரர்களுக்கு அப்பட்டமாக அச்சுறுத்தல்களை விடுத்தது, மேலும் சீன எல்லை படை வீரர்கள் நிலைமையை சமாளிக்க எதிர் நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது" என்று கூறினார்.

    இந்தியாவுக்கு சீனா மிரட்டல்

    இந்தியாவுக்கு சீனா மிரட்டல்

    இதை "மிகவும் மோசமான இயல்புடைய தீவிர ஆத்திரமூட்டல்கள்" என்று கண்டித்துள்ள சீனா, "ஆபத்தான நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு இந்திய தரப்பை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்" என்று கூறியுள்ளது. இது தொடர்பாக இந்தியா தரப்பில் இதுவரை எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.

    வெளியுறவு மட்ட பேச்சுவார்த்தை

    வெளியுறவு மட்ட பேச்சுவார்த்தை

    நாளை சீனாவுடனான வெளியுறவு அமைச்சர் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில் இப்போது சீனா இந்தியா மீது புகார் தெரிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே பேச்சுவார்த்தை ஏற்கனவே கடந்த சில நாட்கள் முன்பு இருநாட்டு ராணுவ அமைச்சர்கள் நடத்தினர்.

    English summary
    China has said Indian soldiers fired warning shots at the Line of Actual Control or LAC. "The Chinese border guards were forced to take countermeasures to stabilise the situation," a spokesperson of the People's Liberation Army said. There is no response yet from the Indian side.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X