For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஹெச்1-பி விசா பெற்ற அமெரிக்க ஐ.டி துறையினரில் 86% பேர் இந்தியர்கள்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவில் ஹெச்-1பி விசா பெற்று ஐ.டி துறையில் பணிபுரியும் வெளிநாட்டவர்களில் 86 சதவீதத்தினர் இந்தியர்கள் என்ற விஷயம் ஆய்வொன்றின் மூலமாக தெரியவந்துள்ளது.

ஜார்ஜ் டவுன் பல்கலைக்கழகத்தின் சர்வதேச குடியேற்றத்துக்கான ஆய்வு நிறுவனம் இந்த விவரங்களைப் பெற்றுள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் அமைப்பிடமிருந்து அந்நிறுவனம் அவ்விவரங்கள் பெற்றுள்ளது.

76 பேருக்கு விசா:

76 பேருக்கு விசா:

அதன்படி, "கடந்த ஆண்டில் மொத்தமாக 76 ஆயிரம் வெளிநாட்டவர்களுக்கு ஹெச்-1பி விசா வழங்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக தகவல் தொழில்நுட்ப துறையில் பணிபுரிவோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

86 சதவீதம் இந்தியர்கள்:

86 சதவீதம் இந்தியர்கள்:

இத்துறையில் இந்த விசா பெற்றவர்களில் 86 சதவீதம் இந்தியர்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் இன்போசிஸ், டிசிஎஸ் உள்ளிட்ட அவுட்சோர்சிங் நிறுவனங்களில் பணிபுரிகின்றனர்.

சீனா 2ம் இடத்தில்:

சீனா 2ம் இடத்தில்:

இந்தியாவுக்கு அடுத்தபடியாக ஹெச்-1பி விசா பெற்றவர்கள் பட்டியலில் 5 சதவீதத்துடன் சீனா 2 ஆம் இடத்தில் உள்ளது. வேறு எந்த நாடும் 1 சதவீதத்தைத் தாண்டவில்லை.

47 சதவீதம் நாமதான்:

47 சதவீதம் நாமதான்:

அமெரிக்காவில் பல்வேறு பொறியியல் துறையில் பணிபுரிந்து கொண்டு இந்த விசா பெற்றவர்களில் 47 சதவீதம் பேர் இந்தியர்கள். அடுத்தபடியாக சீனா 19.5 சதவீதத்துடன் 2 ஆம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
New data reveals that 86% of the total H1B visas issued in 2014 for technology firms was used to hire IT professionals from India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X