இந்திய பெருங்கடலில் சம்பவம்! ஈரானுடன் கைகோர்த்த சீனா மற்றும் ரஷ்யா! சிக்கலில் அமெரிக்கா
தெஹ்ரான்: அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்து போடவில்லை எனில், மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்படும் என்று டிரம்ப் எச்சரித்திருக்கிறார். இந்நிலையில், ஈரானுடன் இணைந்து சீனா மற்றும் ரஷ்யா கடற்படை கூட்டு பயிற்சியை மேற்கொள்ள இருக்கிறது. இந்த பயிற்சி, அமெரிக்காவுக்கு பதிலடியாக இருக்கும்.
ஈரானிடம் அணு சக்தி தொழில்நுட்பம் இருக்கிறது. இதனை மின்சாரம் தயாரிக்க அந்நாடு பயன்படுத்தி வருகிறது. இருப்பினும் அமெரிக்கா போன்ற நாடுகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டால், அதை எதிர்க்கொள்ள இந்த தொழில்நுட்பத்தை தனது பாதுகாப்புக்கு பயன்படுத்த யோசித்து வருகிறது. இந்த யோசனைதான் அமெரிக்காவுக்கு பிடிக்கவில்லை.

ஆபிரகாம் லிங்கன்
எனவே தங்களுடன் அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்று அமெரிக்கா கேட்கிறது. அப்படி கையெழுத்து போட்டால், ஈரானால் தன்னை பாதுகாத்துக்கொள்ள முடியாது. எனவே, ஈரான் தயங்கி வருகிறது. இந்த தயக்கத்தை விரும்பாத அமெரிக்கா, ஈரானை நோக்கி தனது சக்தி வாய்ந்த போர் கப்பலான யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கனையும், அத்துடன் சிறிய போர்க்கப்பல்களையும் அனுப்பி வருகிறது. இந்த யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பலை, அணு குண்டால் மட்டுமே மூழ்கடிக்க முடியும்.
8வது ஆண்டு பயிற்சி
இப்படி இருக்கையில் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், சீனா மற்றும் ரஷ்யாவுடன் சேர்ந்து, கடற்படை கூட்டு பயிற்சியை ஈரான் தொடங்க இருக்கிறது. கடந்த 7 ஆண்டுகளாக இந்த பயிற்சியை மூன்று நாடுகளும் மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது 8வது ஆண்டாக பயிற்சி நடைபெற இருக்கிறது.
இந்திய பெருங்கடல்
இந்திய பெருங்கடல் மற்றும் ஓமன் கடலில் இந்த பயிற்சி நடைபெறும். ஓமன் கடல் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகத்தான் உலகின் பெரும்பகுதி கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படுகிறது. இந்தப் பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைப்பது இந்த நாடுகளின் முக்கியமான வியூகமாகும். இந்த பயிற்சியில் சீனாவின் தங்ஷான் போர்க்கப்பல் பங்கு பெறுகிறது. இது ஆபிரகாம் லிங்கன் அளவுக்கு சக்தி வாய்ந்தது கிடையாது.
இருப்பினும் இது சீனக் கடற்படையின் மிகவும் நவீனமான அழிப்பான் கப்பலாகும். இதில் அதிநவீன ரேடார் அமைப்புகள் மற்றும் வான்வழி இலக்குகளையும், கப்பல்களையும் தாக்கி அழிக்கும் ஏவுகணைகள் உள்ளன. இதனை சீனாவின் ஏஜிஸ் என்று ராணுவ வல்லுநர்கள் அழைக்கிறார்கள்.
ஈரான் கப்பல்
அதேபோல, ஈரான் சார்பில் ஐரிஸ் மக்ரான் ரக போர்க்கப்பல் பயிற்சியில் பங்கேற்கிறது. இது ஈரானிய கடற்படையின் மிகப்பெரிய கப்பலாகும். ஒரு எண்ணெய் டாங்கர் கப்பலை உருமாற்றிப் போர்க்கப்பலாக மாற்றியுள்ளனர். இதில் ஒரே நேரத்தில் பல ஹெலிகாப்டர்கள் தரையிறங்க முடியும் மற்றும் இது சிறிய ரக ஏவுகணைப் படகுகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டது. இது கடலில் நீண்ட நாட்கள் தங்கியிருந்து மற்ற கப்பல்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கும்.
ரஷ்ய கப்பல்
ரஷ்யா சார்பில் கோர்வெட் ஸ்டோய்கி கப்பல் பயிற்சியில் பங்கேற்கிறது. இது அளவில் சிறியதாக இருந்தாலும், எதிரிக் கப்பல்களைத் துல்லியமாகத் தாக்கும் ஏவுகணைகள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்டறிந்து அழிக்கும் கருவிகளைக் கொண்டது. இது மூன்றும் சேர்ந்தால் ஆபிரகாம் லிங்கனை தோற்கடிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications