ஜூம்பா டான்ஸ்க்கு நோ சொன்ன ஈரான்... எதற்கு தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

தெஹ்ரான் : ஈரானில் உடற்பயிற்சியாக செய்யப்படும் ஜூம்பா நடனத்திற்கு அந்த நாடு தடை விதித்துள்ளது.

உலகம் முழுவதும் உடற்பயிற்சிக்கான முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. வாக்கிங், யோகா, நீச்சல் என்று பல்வேறு உடற்பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில் பெண்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது கொலம்பியாவின் ஜூம்பா நடனம்.

Iran lifted ban against Zumba dance

எளிமையான உடற்பயிற்சியுடன் ஏரோபிக்ஸ் இணைந்து ஆடப்படும் ஜூம்பா நடனம் உடல் எடையை குறைப்பதோடு மனஅழுத்தத்தை போக்குவதாகவும் நம்பப்படுகிறது. இதனால் ஜிம், விளையாட்டு மையங்கள் என பல்வேறு இடங்களில் ஜூம்பா நடனம் கற்றுத் தரப்படுகிறது.

ஈரானிலும் பெண்கள் இந்த ஜூம்பா நடனத்தை விரும்பி பயிற்சி எடுத்து வருகின்றனர். ஆனால் இஸ்லாமிய சித்தாந்தத்துக்கு முரணாக உள்ள இந்த நடனத்தை தடை செய்ய வேண்டும் என்று அந்த நாட்டு விளையாட்டு அமைப்கின் தலைவர் அலி மஜ்தாரா இளைஞர் நலத்துறை அமைச்சருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

இதன் அடிப்படையில் ஜூம்பா நடனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் தடையின் எதிரொலியாக ஜூம்பா நடனம் கற்றுத் தந்த பயிற்சி இடங்கள் அனைத்திலும் வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்றும் கூறப்படுகிறது.

ஈரான் தங்கள் நாட்டு பெண்கள் மீதான ஆடைக்கலாச்சாரத்தில் சமரசம் செய்து கொள்ளாமல் இன்னும் அதே கெடுபிடிகளை காட்டி வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் ஜிஹாப் என்று சொல்லக்கூடிய தலைமுக்காடு அணியாததால் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க இரண்டு பெண்களுக்கு அனுமதி அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Iran newspapers reported that Zumba dance is banned by the country with the charges that the dance is against of Islamic ideology
Please Wait while comments are loading...