4 இந்திய கப்பல்களை விரட்டிய ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியில் திக்திக்.. திடீர் யூடர்ன் - பெரும் பதற்றம்

Subscribe to Oneindia Tamil

டெஹ்ரான்: மத்திய கிழக்கில் இருந்து இந்தியா நோக்கி வந்து கொண்டிருந்த 3 கச்சா எண்ணெய் கப்பல், ஒரு சரக்கு கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி அருகே திடீரென்று யூடர்ன் போட்டுள்ளன. வந்த வேகத்தில் இந்த 4 கப்பல்களும் மீண்டும் திரும்பி சென்றுள்ள நிலையில் அதன் பின்னணி குறித்த திடுக்கிட வைக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஈரான் - அமெரிக்கா இடையே நடந்த போர் ஒரு வழியாக நிறைவு பெற்றுள்ளது. மேலும் அமெரிக்காவும், ஈரானும் பாகிஸ்தானில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தின. இதில் உடன்பாடு ஏற்படவில்லை என்றாலும் கூட இருநாடுகள் இடையேயான பேச்சுவார்த்தை நல்ல சைனாக பார்க்கப்படுகிறது.

iran-tension-4-indian-vessels-turn-back-after-irgc-opens-fire-in-strait-of-hormuz

இதனால் ஈரானும் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதாக அறிவித்தது. நேற்று முதல் ஹார்முஸ் ஜலசந்தி அனைத்து நாடுகளின் கப்பல்களுக்கும் திறக்கப்பட்டது. ஆனால் திடீரென்று ஈரான் இந்த ஜலசந்தியை இன்று மூடியது.

கப்பல்கள் மீது தாக்குதல்

அதாவது ஹார்முஸ் ஜலசந்தியை சுற்றி அமெரிக்கா தனது போர்க்கப்பல்களை நிறுத்தி உள்ளது. இந்த கப்பல்கள் பிற நாடுகளின் கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்கி வருகின்றன. இதற்கு ஈரான் எதிர்ப்பு தெரிவித்தது. போர்க்கப்பல்களை அங்கிருந்து திரும்ப பெற கூறியது. ஆனால் அமெரிக்கா கேட்கவில்லை. இதனால் கோபமான ஈரான், ஹார்முஸ் ஜலசந்தியை இன்று மீண்டும் மூடுவதாக அறிவித்தது.

அதுமட்டுமின்றி, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கடந்து செல்லும் கப்பல்கள் குறிவைத்து தாக்கப்படுகின்றன. ஈரானின் புரட்சிகர காவல் படையினர் கப்பல்களை குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்தி வருகிறது. இதில் நம் நாட்டின் கொடியுடன் வந்த 2 கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தான் தற்போது திடுக்கிட வைக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

யூடர்ன் போட்ட இந்தியாவின் 4 கப்பல்கள்

இந்நிலையில் தான் ஹார்முஸ் ஜலசந்தி வரை வந்த இந்தியாவின் 4 கப்பல்கள் திரும்பி சென்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது இந்தியாவின் கொடியுடன் 4 கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை நெருங்கி உள்ளன. அதாவது நம் நாட்டுக்கு சொந்தமான இந்திய கப்பல் கழகத்திற்கு (SCI) சொந்தமான தேஷ் வைபவ் மற்றும் தேஷ் விபூர், சன்மார் ஷிப்பிங் நிறுவனத்துக்கு சொந்தமான சன்மார் ஹெரால்ட், மற்றும் கிரேட் ஈஸ்டர்ன் ஷிப்பிங் கம்பெனிக்கு சொந்தமான ஜாக் அர்னவ் என்ற பெயர் கொண்ட 4 கப்பல்கள் திரும்பி சென்றுள்ளன.

யூடர்ன் போட்டதன் பின்னணி

இதில் தேஷ் வைபவ், தேஷ் விபூர், சன்மார் ஹெரால்டு ஆகியவை கச்சா எண்ணெய் கப்பலாகும். 'ஜாக் அர்னவ்' என்பது சரக்கு கப்பலாகும்.
ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக ஈரான் அறிவித்துள்ளதோடு, ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. இதனால் அச்சமடைந்த நம் நாட்டுக்கு வர வேண்டிய 4 கப்பல்களும் திரும்பி சென்றுள்ளன. தற்போது இந்த கப்பல்கள் நடுக்கடலில் தவிக்கினறன. இதன்மூலம் பெர்ஷியன் வளைகுடா கடலில் இந்தியா கொடியுடன் தவிக்கும் கப்பல்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.

ஈரானுக்கு பயந்து 'ரிவர்ஸ்'

இதனை பிரிட்டன் கடல்சார் வர்த்தக செயல்பாடுகள் பிரிவு (UKMTO) உறுதி செய்துள்ளது. இதுபற்றி, ''ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) நடத்திய துப்பாக்கிச்சூடு காரணமாக 4 இந்திய கப்பல்களும் திரும்பி சென்று இருக்கலாம்'' என்று தெரிவித்துள்ளது. இதற்கிடையே சம்பவத்தால் மத்திய அரசு கடும் அதிருப்தியடைந்துள்ளது. நம் நாட்டுக்கான ஈரான் தூதர் முகமது ஃபதாலியை அழைத்து சம்மன் வழங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஹார்முஸை எத்தனை கப்பல்கள் கடந்துள்ளது?

முன்னதாக நேற்றைய தினம் ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்ட பிறகு இந்தியாவின் ஒரு கப்பல் மட்டும் மத்திய கிழக்கில் இருந்து இந்தியா நோக்கி வந்துள்ளது. அதாவது இந்திய கப்பல் கழகத்துக்கு சொந்தமா 'தேஷ் கரிமா' என்ற கச்சா எண்ணெய் கப்பல் இன்று ஹார்முஸ் ஜலசந்தியை வெற்றிகரமாக கடந்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் இருந்து இதுவரை மொத்தம் 9 கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து வந்துள்ளது. அந்த வரிசையில் 10வது கப்பலாக 'தேஷ் கரிமா' இணைந்துள்ளது. இன்று மாலை நிலவரப்படி இந்த கப்பல் ஓமன் வளைகுடாவில் பயணித்து கொண்டிருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+