டிரம்ப் சொன்ன 7 விஷயமும் முழுக்க முழுக்க பொய்.. மொத்தமாக டேமேஜ் செய்த ஈரான் தலைவர் காலிபாப்!

Subscribe to Oneindia Tamil

லெபனான் - இஸ்ரேல் மத்தியிலான தாக்குதலை 10 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்படுவதாக இரு நாடுகள் மத்தியிலான கூட்டத்தில் போர்நிறுத்த முடிவு எடுக்கப்பட்டு வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் ஈரான் அரசு முடக்கி வைத்திருந்த உலகின் முக்கியமான ஹார்முஸ் நீர்வழி பாதையை சரக்கு கப்பல்களுக்கு முழுமையாக திறந்துவிடப்படுவதாக அறிவித்தது.

இந்த அறிவிப்புக்கு முக்கியமான காரணம், அமெரிக்கா உடனான போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் ஈரான் தரப்பில் கொடுக்கப்பட்ட 10 முக்கிய அம்சத்தில் லெபனான் மீதான தாக்குதலை நிறுத்துவதையும் சேர்க்கப்பட்டு இருந்தது. தற்போது இதை நிறைவேற்றப்பட்ட காரணத்தால் ஈரான் அரசு ஹார்முஸ்-ஐ திறப்பதாக அறிவித்தது.

iran War Hormuz USA Trump Iran Strait of Hormuz Threat Mohammad Bagher Ghalibaf Trump Trump 7 False Claims US Blockade Hormuz Closure Iran Negotiator X Post 7 iran top negotiator threatens hormuz closure mohammad bagher ghalibaf trump false claims strait of hormuz not remain open us blockade iran ports hormuz passage hormuz iranian authorization trump seven claims false iran media warfare iran response axis of resistance ceasefire hezbollah steadfastness iran iran foreign ministry spokesman interview hormuz designated route iran field determines hormuz status trump lies no war victory iran parliament speaker x post hormuz threat if blockade continues

ஈரான் அரசின் அறிவிப்புக்கு பின்பு டிரம்ப், தனது ட்ரூத் சோசியல் தளத்தில் ஒரு மணிநேரத்தில் 10க்கும் அதிகமான பதிவுகளை செய்தார், இந்த பதிவில் ஈரான் தொடர்பாகவும், போர் தொடர்பாகவும் 7 வாக்குறுதிகளை கொடுக்கப்பட்டதாக அறிவித்தார் டிரம்ப். இதை முழுக்க முழுக்க பொய் என ஈரான் நாடாளுமன்ற சபாநாயகரும், அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தைகளில் முக்கிய நபராக இருக்கும் முகமது பாகர் காலிபாப் தெரிவித்துள்ளார். இவரின் தலைமையில் தான் கடந்த வாரம் பாகிஸ்தான் ஈரான் பேச்சுவார்த்தையை மேற்கொண்டது.

டிரம்ப்-ன் ஏழு பொய்கள்

முகமது பாகர் காலிபாப் தனது பதிவில், அமெரிக்க அதிபர் நேற்று இரவு ஒரு மணி நேரத்தில் போர் தொடர்பாக ஏழு வெவ்வேறு விஷயங்களையும், வாக்குறுதிகளையும் முன்வைத்தார். இந்த ஏழு விஷயங்களும் முழுக்க முழுக்க பொய்யானவை என்று அவர் வலியுறுத்தினார். "இந்த பொய்களால் அமெரிக்கா யுத்தத்தில் வெற்றி பெறவில்லை. பேச்சுவார்த்தைகளிலும் இது எந்த முன்னேற்றத்தையும் தராது" என்று அவர் தெளிவாகக் கூறினார்.

தற்போது ஈரானும், அமெரிக்காவும் 3ஆம் தரப்பினர் (பாகிஸ்தான்) வாயிலாகவே பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் அமெரிக்காவும், அமெரிக்க அதிபரும் போர் மற்றும் அமைதி பேச்சுவார்த்தை தொடர்பான பொய்யான தகவல்களை பயன்படுத்துவதாக ஈரான் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. அதிலும் முகமது பாகர் காலிபாப்-ன் இந்த பதிவு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

அமெரிக்க தடை

காலிபாப் தனது பதிவில், "அமெரிக்காவின் இந்த கடற்படையின் தடை தொடர்ந்தால் ஹார்முஸ் நீரிணை திறந்திருக்காது" என்று எச்சரித்தார். இந்த நீரிணை வழியாக செல்லும் போக்குவரத்து அனைத்தும் ஈரான் நியமிக்கப்பட்ட பாதையில், ஈரான் அரசின் அனுமதி பெற்ற பின்பே நடக்கும் என்பதையும் தெரிவித்தார்.

ஹார்முஸ் நீரிணை உலகின் பல நாடுகளுக்கு எண்ணெய் ஏற்றுமதிக்கு மிக முக்கியமான வழியாகும். இதை மீண்டும் மூடுவது மூலம் உலக அளவில் எரிபொருள் விலை குறைந்துள்ளதை மீண்டும் உயர்த்தும் விஷயமாக உள்ளது. ஈரான் தரப்பின் இந்த எச்சரிக்கை, அமெரிக்காவின் தடையை உடனடியாக நீக்க வேண்டும் என்பதையும் குறிக்கிறது.

சமூக ஊடகம் முக்கியமல்ல

ஹார்முஸ் நீரிணை திறந்திருக்குமா அல்லது மூடப்படுமா என்பது, அதற்கான விதிமுறைகள் என்பது சமூக ஊடக பதிவுகளால் தீர்மானிக்கப்படாது. கள நிலவரம் தான் தீர்மானிக்கும் என்று முகமது பாகர் காலிபாப் டிரம்புக்கு நேரடியாக உணர்த்தும் வகையில் தெரிவித்துள்ளார்.

மேலும் முகமது பாகர் காலிபாப் டிரம்ப்-ன் பதிவுகள் அனைத்து முதலீட்டு சந்தையை ஏமாற்றுவதற்காக செய்யப்படுபவை என பலமுறை தெரிவித்துள்ளார். நேற்றைய வர்த்தகத்திலும் எண்ணெய் விலை குறையும் என பெரும் தொகை ஷாட் பொசிஷனில் வைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஊடக போர்

அமெரிக்காவுக்கு ஊடகங்கள் வாயிலாக கருத்து போர் நடத்துவது மற்றும் பொதுமக்களின் எண்ணத்தையும், கருத்தை வடிவமைப்பது போரின் ஒரு முக்கிய பகுதி என்று காலிபாப் கூறினார். ஆனால் ஈரான் மக்கள் இத்தகைய தந்திரங்களால் பாதிக்கப்பட மாட்டார்கள் என்றும் முகமது பாகர் காலிபாப் தெரிவித்தார்.

உண்மையான மற்றும் துல்லியமான போர் தொடர்பான பேச்சுவார்த்தை செய்திகளை வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளரின் பேட்டியிலும், சமுக வலைத்தள கணக்கில் படிக்குமாறும் முகமது பாகர் காலிபாப் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார். இதுவும் டிரம்ப்-ஐ நேரடியாக தாக்கும் வகையில் அமைந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+