For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கேன்ஸ் விழாவில் முத்தம்: நடிகையை விளாசித் தள்ளும் ஈரானிய அரசு

By Siva
Google Oneindia Tamil News

பாரீஸ்: கேன்ஸ் திரைப்பட விழா தலைவர் ஜில்லஸ் ஜேக்கப்பின் கன்னத்தில் முத்தமிட்ட ஈரானிய நடிகை லைலா ஹதாமி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா தற்போது நடந்து வருகிறது. இந்த திரைப்பட விழா நடுவர்களில் ஒருவராக ஈரானிய நடிகை லைலா ஹதாமி உள்ளார்.

5 பெண் நடுவர்களில் அவரும் ஒருவர் ஆவார்.

விழா

விழா

கேன்ஸ் திரைப்பட விழாவில் விழாவின் தலைவர் கில்லஸ் ஜேக்கப் கன்னத்தில் லைலா முத்தமிட்டார். இது ஈரானில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

விளாசல்

விளாசல்

லைலா ஈரானியர்கள் அதிலும் குறிப்பாக ஈரானிய பெண்களின் பெயரை தனது செயல் மூலம் கெடுத்துவிட்டார். சர்வதேச விழாக்களில் கலந்து கொள்பவர்கள் ஈரானியர்களின் நம்பகத்தன்மை மற்றும் தூய்மையை வெளிப்படுத்த வேண்டும். ஈரானிய பெண்கள் தூய்மையின் சின்னம் என்று ஈரானிய கலாச்சாரத் துறை துணை அமைச்சர் ஹொசைன் நௌஷபாதி தெரிவித்துள்ளார்.

ஜேக்கப்

ஜேக்கப்

ஈரான் லைலாவை குற்றம்சாட்டியதை அடுத்து ஜேக்கப் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, நான் தான் மேடம் ஹதாமிக்கு முத்தம் கொடுத்தேன். அப்போது அவர் ஒட்டுமொத்த ஈரானிய சினிமாவின் பிரிதிநிதியாக எனக்கு தெரிந்தார். வழக்கமான மேற்கத்திய கலாச்சாரத்தை வைத்து சர்ச்சையை கிளப்புவது நல்லதல்ல என்று தெரிவித்துள்ளார்.

ஆஸ்கர்

ஆஸ்கர்

2011ம் ஆண்டு சிறந்த வெளிநாட்டுப்படத்திற்கான ஆஸ்கர் விருது பெற்ற எ செபரேஷன் படத்தில் நடித்ததன் மூலம் உலகப் புகழ் பெற்றார் லைலா. லைலா தனது கணவரும், நடிகருமான அலி மொசாஃபாவுடன் ஈரானில் வசித்து வருகிறார். ஞாயிற்றுக்கிழமை நடந்த விழாவில் லைலா ஜேக்கபையும், ஜேக்கப் அவரையும் மேற்கத்திய முறைப்படி கன்னத்தில் முத்தமிட்டது தான் தற்போது பெரிய சர்ச்சையாகி உள்ளது.

English summary
Iranian actres Leila Hatami is blasted by Iranian government after she kissed the Cannnes film festival president Gilles Jacob on sunday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X