அமெரிக்க ராணுவத்தின் அடுத்த டார்கெட் கியூபா தானா? டிரம்ப் சொன்ன பதிலால் புது குழப்பம்!
ஈரான் - அமெரிக்கா, இஸ்ரோல் - லெபனான் மத்தியிலான போர் பதற்றம் இன்னும் குறையாத நிலையில், அமெரிக்கா கியூபாவுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வி மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது.
நேற்று இரவு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானமத்தில் செய்தியாளர்களுடன் பேசிய போது ஈரான் போர் குறித்த பல கேள்விகளுக்கு டக் டக்கென பதில் அளித்த டிரம்ப், கியூபா குறித்த கேள்விக்கு அளித்த பதில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

டிரம்ப் மறைமுக பதில்
கியூபாவுக்கு எதிராக பென்டகன் ராணுவ நடவடிக்கை எடுக்க திட்டமிட்டு வருகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் உண்மையா? கியூபா தான் அமெரிக்காவின் அடுத்த டார்கெட்டா? என்று செய்தியாளர் ஒருவர் டிரம்ப்-யிடம் கேள்வி கேட்டார், இதற்கு டிரம்ப் நேரடியாக பதில் அளிக்கவில்லை.
இக்கேள்விக்கு பதில் அளித்த டிரம்ப் "ராணுவ நடவடிக்கை என்றால், நீங்கள் எப்படி அதை வரையறை செய்கிறீர்கள் என்பது முக்கியம்" என்று அவர் பதிலளித்தார்.
இதற்கு செய்தியாளர், அமெரிக்க ராணுவ சமீபத்தில் வெனிசுலா, ஈரான் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போன்று இருக்குமா என்று தனது கேள்வியை டிரம்ப்-க்கு மீண்டும் எளிப்படுத்தி விளக்கினார்.
இதற்கு பதில் அளிக்க முடியாமல் டிரம்ப், கியூபா மீதான நடவடிக்கையையும் முழுமையாக மறுக்கவில்லை, அதே நேரத்தில் நேரடியாக ஒப்புக்கொள்ளவும் தயங்கி அடுத்த கேள்விக்கு டிரம்ப் சென்றார்.
பென்டகன்
அமெரிக்காவின் பாதுகாப்புத் துறையான பென்டகன், கியூபாவுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைக்கான முன்ஏற்பாடுகளை அதிகரித்துள்ளதாக 2 நாட்களுக்கு முன்பாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் அடிப்படையில் தான் செய்தியாளர்கள் டிரம்ப்-யிடம் இந்த கேள்வியை நேரடியாக கேட்டனர்.
டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டால் உடனடியாக செயல்படக்கூடிய வகையில் கியூபா மீது பல்வேறு தாக்குதல் சூழ்நிலைகளை ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியானது. இருப்பினும், அதிகாரப்பூர்வமாக பென்டகன் இதை உறுதிப்படுத்தாமல், அவசர நிலைகளுக்கான திட்டமிடல் என்பது வழக்கமான நடைமுறை என மட்டுமே விளக்கம் அளித்துள்ளது.
கிட்டத்தட்ட இதேபோன்ற பதிலையை தான் டிரம்ப் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். டிரம்ப் கூறிய பதிலில் முக்கியமாக கவனிக்க வேண்டியது, அவர் எந்தவொரு ராணுவ நடவடிக்கையையும் இல்லை என்று தெளிவாக மறுக்கவில்லை என்பதே. "அது நீங்கள் அதை எப்படி வரையறைக்கிறீர்கள் என்பதில் தான் உள்ளது" என்ற பதில், எதிர்காலத்தில் எத்தகைய நடவடிக்கைகளையும் அமெரிக்க ராணுவம் எடுக்காலம் என்பதை தான் காட்டுகிறது.
"There have been reports that the Pentagon is preparing for military action in Cuba. Are those reports true? Is Cuba next?"@POTUS: "Well, it depends on what your definition of 'military action' is." pic.twitter.com/6u7nZmtwu4
— Rapid Response 47 (@RapidResponse47) April 18, 2026
2026 தொடக்கத்திலிருந்து அமெரிக்கா கியூபாவிற்கு செல்லும் எண்ணெய் விநியோகத்தை கட்டுப்படுத்தியதன் மூலம் இருநாடுகளுக்கிடையேயான உறவு மோசமடைந்தது. மேலும், கியூபாவில் அரசியல் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அமெரிக்க நிர்வாகம் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. பென்டகன் கியூபா மீதான தாக்குதல் நடத்துவதற்கு தாயராகி வருவது குறித்த தகவல் வெளியான போது கியூபா அதிபர் மிகல் டியாஸ்-கானெல், அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கையையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக எச்சரித்துள்ளார்.












Click it and Unblock the Notifications