For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'புடின் ரொம்ப ஸ்மார்ட்' - ட்ரம்ப் அமெரிக்காவின் புதிய அதிபரா? அல்லது ரஷ்யாவின் அமெரிக்கத் தூதரா?

By Shankar
Google Oneindia Tamil News

வாஷிங்டன்(யு.எஸ்) வெளியுறவு விவகாரத்தை ஜஸ்ட் லைக் தட் ட்விட்டரில் தட்டி விளையாடும் அமெரிக்காவின் புதிய அதிபர் ட்ரம்பின் புதிய ட்விட் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா ஹேக்கர்கள் மூலம் தலையிட்டது என்று ஒபாமா குற்றம் சாட்டியிருந்தார். புலனாய்வுத் துறையினரின் சாட்சியங்களின் அடிப்படையில் ரஷ்யாவின் அமெரிக்க தூதரக அதிகாரிகள் 35 பேரை நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவு பிறப்பித்தார் ஒபாமா. மேலும் இரண்டு ஹேக்கரகள் மற்றும் துணை புரிந்த மூன்று ரஷ்ய நிறுவனங்களுக்கு தடை விதித்துள்ளார்.

Is Trump US president or Russian Ambassador?

இதற்கு பதிலடியாக ரஷ்யாவும் அமெரிக்க தூதர அதிகாரிகளை திருப்பி அனுப்பும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ரஷ்ய அதிபர் புடின் அத்தகைய முடிவை எடுக்காமல் சற்று அடக்கி வாசிக்கிறார். ஒபாமாவின் நடவடிக்கைக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு நிறுத்திக் கொண்டுள்ளார்.

குடியரசுக் கட்சியினர் உட்பட செனட்டர்கள், காங்கிரஸ் உறுப்பினர்கள் ரஷ்யாவின் தேர்தல் முறைகேடு குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும், ரஷ்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆனால் புதிய அதிபராக பதவியேற்க உள்ள டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய அதிபரின் புத்திசாலித்தனத்தை பாராட்டியுள்ளார்.

'புடின் ஸ்மார்ட் ஆனவர். ஒபாமா மாதிரி தூதரக அதிகாரிகளை திருப்பி அனுப்பாமல் அமைதி காக்கிறார். அவரது புத்திசாலித்தனத்தைப் பாராட்டுவதாக' ட்விட்டியுள்ளார்.

ஏற்கனவே ட்ரம்ப் நியமித்துள்ள வெளியுறவுத் துறைச் செயலாளர் ரெக் டில்லர்சன் புடினுக்கு நெருக்கமானவர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இப்போதைய ட்விட் மூலம், ட்ரம்ப் அமெரிக்காவுக்கு அதிபரா, அல்லது புடின் அமெரிக்காவுக்கு நியமித்துள்ள ரஷ்ய தூதரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஹேக்கர்கள் மூலம் வாக்கு எந்திரத்தில் ட்ரம்புக்கு வாக்குகள் மாறும் மாதிரி செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வந்துள்ளது. இந்த மோசடிகளை எப்படி நிரூபிக்கப் போகிறார்கள்?

அடுத்து பதவிக்கு வரும் ட்ரம்ப் இந்த விசாரணைகளுக்கு அனுமதி அளிப்பாரா? பாராளுமன்ற இரு அவை உறுப்பினர்களும் ட்ரம்பின் முடிவை எதிர்ப்பார்களா? ரஷ்யா மீதான குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டால் ட்ரம்பின் வெற்றி என்னவாகும்? என பல கேள்விகளும் முளைத்துள்ளன.

சீனாவுடன் கடுமையான நிலைப்பாடு, ரஷ்யாவுடன் தோழமைப் போக்கு என அமெரிக்க வெளியுறவுக் கொள்கைகளை புரட்டிப் போட்டு வருகிறார் ட்ரம்ப். இதன் தாக்கம் உலக அரங்கில் எப்படி இருக்கப் போகிறது என்ற ஒரு வித அச்சம் நிலவுவதை மறுப்பதற்கில்லை.

- இர தினகர்

English summary
President elect Donald Trump tweeted appreciating Russian President Putin. ‘Great move on delay (by V.Putin)- I always knew he was very smart’ trump tweeted.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X