ஐநா வளாகத்திற்கு அடியில் சென்ற ஹமாஸ் சுரங்கம்.. 7 கிமீ நீளம், 80+ ரூம்கள்! அதிர்ந்து போன இஸ்ரேல்
டெல் அவிவ்: இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் பல ஆண்டுகள் தொடர்ந்தது அனைவருக்கும் தெரியும். அங்குப் போர் முடிவுக்கு வந்துவிட்ட நிலையில், ஹமாஸ் பயன்படுத்திய ஒரு சுரங்கம் குறித்த வீடியோவை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது.. சுமார் 25 மீட்டர் ஆழத்தில் 7 கிமீ நீண்டு இருக்கும் இந்த சுரங்கம் 80 ரூம்கள், கமாண்ட் சென்டர்களையும் கொண்டு இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த சில ஆண்டுகளாகவே போர் நிலவி வந்தது. இந்த போரில் ஹமாஸை அமைப்பைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் பலரும் கொல்லப்பட்டனர். போர் பல ஆண்டுகளாக நீடித்த நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் தலையிட்ட பிறகே இந்த போர் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. போர் முடிவுக்கு வந்துவிட்ட போதிலும், ஆங்காங்கே ஓரிரு தாக்குதல்கள் நடக்கவே செய்கிறது.

இஸ்ரேல் ஹமாஸ்
இது ஒரு பக்கம் இருக்கக் காசா பகுதியில் ஹமாஸ் பயன்படுத்திய ஒரு பிரம்மாண்ட சுரங்கம் குறித்த வீடியோவை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது.. இந்த சுரங்கத்தில் தான் லெப்டினன்ட் ஹதர் கோல்டின் என்பவரின் உடல் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இஸ்ரேல்- ஹமாஸ் போரின் போது, காசாவில் நடந்த ஒரு தாக்குதலில் லெப்டினன்ட் கோல்டின் உயிரிழந்தார். அவரது உடல் இந்த மாத தொடக்கத்தில் தான் இஸ்ரேலிடம் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சுரங்கம்
காசா பகுதியில் இஸ்ரேல் கண்காணிப்பு அதிகமாக இருக்கும் என்பதால் ஹமாஸ் படைகள் அங்கு மிகப் பெரிய சுரங்கத்தை உருவாக்கி இருந்தது. இந்த சுரங்கம் பல கிமீ வரை விரிவானதாகவும் பல வசதிகளைக் கொண்டதாகவும் இருந்தது. ஹமாஸ் இத்தனை ஆண்டுகள் தாக்குப்பிடிக்க இந்த சுரங்கங்களே பிரதான காரணமாக இருந்தது. இந்தச் சூழலில் தான் ஹமாஸ் படையினர் பயன்படுத்தி வந்த இந்த பிரதான சுரங்கத்தை இஸ்ரேல் கண்டுபிடித்துள்ளது.
இது தொடர்பான வீடியோவும் இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. காசாவின் முக்கிய நகரான ரஃபாவின் அடர்த்தியான குடியிருப்புப் பகுதிக்கு அடியில் இந்த சுரங்கம் செல்கிறது. மேலும், UNRWA எனப்படும் ஐநா சபையின் அகதிகள் முகாம் வளாகம், மசூதிகள், மருத்துவ நிலையங்கள், மழலையர் பள்ளிகள் ஆகியவற்றின் வழியாகவும் இந்தச் சுரங்கம் செல்கிறது என்று இஸ்ரேல் பாதுகாப்புப் படை குறிப்பிட்டது.
⭕️ EXPOSED: A 7+ kilometer Hamas tunnel route that held Lt. Hadar Goldin.
— Israel Defense Forces (@IDF) November 20, 2025
IDF troops uncovered one of Gaza’s largest and most complex underground routes, over 7 km long, ~25 meters deep, with ~80 hideouts, where abducted IDF officer Lt. Hadar Goldin was held.
The tunnel runs… pic.twitter.com/GTId75CvYw
80 ரூம்கள்
கடந்த ஜூலை மாதம் இந்த சுரங்கத்தை இஸ்ரேல் கண்டுபிடித்துள்ளது. அப்போது எடுத்த வீடியோவை தான் இப்போது வெளியிட்டுள்ளனர். இந்தச் சுரங்கத்தைத் தான் ஹமாஸ் தளபதிகள் ஆயுதங்களை சேமிக்கவும், தாக்குதல்களைத் திட்டமிடவும், நீண்ட நாட்கள் மறைந்திருக்கவும் பயன்படுத்தியுள்ளனர். சுமார் 7 கிமீ நீண்டு இருக்கும் இந்த சுரங்கம், 25 மீட்டர் ஆழத்தில் அமைந்துள்ளது
மேலும், சுமார் 80 ரூம்களை கொண்டுள்ளது. இஸ்ரேல் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த எலைட் யஹலோம் போர் பிரிவு மற்றும் ஷாயெடெட் 13 கடற்படை கமாண்டோ பிரிவினர் இந்த சுரங்கத்தைக் கண்டுபிடித்தனர். கடந்த மே மாதத்தில் ஹமாஸ் தலைவர் முகமது சின்வாருடன் கொல்லப்பட்ட முகமது ஷபானா உள்ளிட்ட ஹமாஸ் தளபதிகள் இங்கிருந்து தான் செயல்பட்டதாகவும் இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேல் தாக்குதல்கள்
இஸ்ரேல் காசா போரில் பல ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது என்ற போதிலும், காசா மக்களே இதனால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இரு தரப்பிற்கும் இடையே 6 வாரங்களாகப் போர் நிறுத்தம் தொடரும் போதிலும், ஆங்காங்கே சிறு சிறு தாக்குதல்கள் தொடர்ந்தே வருவது குறிப்பிடத்தக்கது.
-
நெதன்யாகு சாயம் வெளுத்தது.. ஈரான் நினைத்தால் இஸ்ரேல் 2 மணிநேரத்தில் காலி.. டிரம்ப் பேச்சால் ஷாக்! -
இஸ்ரேலை கழற்றிவிட நேரம் வந்தாச்சு.. டிரம்ப் எடுக்கப்போகும் முக்கிய முடிவு.. நெதன்யாகு ஷாக்! -
மீண்டும் குட்டையை குழப்பும் இஸ்ரேல்.. டிரம்புக்கு தலைவலியாக மாறிய பெஞ்சமின் நெதன்யாகு! -
60 எச்சரிக்கை.. 8 முறை விமானம் மூலம் வார்னிங்.. அமெரிக்கா தாக்குதலில் இந்தியர்கள் பலியானது எப்படி? -
சுந்தர் பிச்சைக்கு எதிர்ப்பு! பேசிக்கொண்டிருக்கும்போதே.. சாரை சாரையாக வெளியேறிய மாணவர்கள்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்!












Click it and Unblock the Notifications