For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"கறுப்பு நிற ஜாக்கெட் அணிந்தும்," இஸ்ரேல் ராணுவ துப்பாக்கிச் சூட்டில் பெண் பத்திரிகையாளர் பலி.. ஷாக்

Google Oneindia Tamil News

ஜெருசலேம்: இஸ்ரேல் படைகளின் தாக்குதலில் அல் ஜசீரா பெண் பத்திரிகையாளர் ஷிரின் அபு அக்லா கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலஸ்தீன பத்திரிகையாளரான ஷிரின் அபு அக்லா, பல ஆண்டுகளாக அல் ஜசீராவில் இஸ்ரேல் - பாலஸ்தீனம் குறித்த செய்திகளை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் இஸ்ரேல் ராணுவத்தால் ஷிரின் அபு அக்லா கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

டெல்லி இஸ்ரேல் தூதரகத்துக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்! கண்காணிப்பு தீவிரம் டெல்லி இஸ்ரேல் தூதரகத்துக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்! கண்காணிப்பு தீவிரம்

அல்ஜசீரா பத்திரிகையாளர்

அல்ஜசீரா பத்திரிகையாளர்

பாலஸ்தீனத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஷிரின் அபு அக்லா. 51 வயதான இவர் பல ஆண்டுகளாக அல் ஜசீராவில் இஸ்ரேல் - பாலஸ்தீனம் குறித்த செய்திகளை வெளியிட்டு வருகிறார்.

ஜெருசலேமில் கடந்த மாதம் இஸ்ரேல் படையினருக்கும், பாலஸ்தீனர்களுக்கும் இடையே நடைபெற்ற மோதலின்போது துப்பாக்கிச்சுட்டில் சிறுவன் ஒருவன் உயிரிழந்தான். இந்நிலையில் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

துப்பாக்கிச்சூட்டில் பலி

துப்பாக்கிச்சூட்டில் பலி

அல்ஜசீரா ஊடகத்தின் மூத்த செய்தியாளர் ஷிரீன் அபு அக்லா ஜெனின் நகரில் உள்ள அகதிகள் முகாமில் செய்தி சேகரிக்க சென்றார். அப்போது, இஸ்ரேல் படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில், அவர் தலையில் குண்டு பாய்ந்து உயிரிழந்துள்ளார்.

அல் - குத்ஸ் என்ற பத்திரிகையின் செய்தியாளர் அலி சமோதி என்பவர் மீதும் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. இதில் காயமடைந்த அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

கறுப்பு நிற ஜாக்கெட்

கறுப்பு நிற ஜாக்கெட்

கொல்லப்பட்டபோது ஷிரின் அபு அக்லா, பத்திரிகையாளர்களுக்கான தற்காப்புக்கான 'கறுப்பு நிற ஜாக்கெட்' அணிந்திருந்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகி உள்ளன.

கறுப்பு நிற ஜாக்கெட் அணிந்திருந்தும் அவர் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஷிரின் அபு அக்லா கொல்லப்பட்டது சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பத்திரிகையாளர்கள் கண்டனம்

பத்திரிகையாளர்கள் கண்டனம்

அல்ஜசீரா பத்திரிகையாளர் ஷிரின் அபு அக்லா இஸ்ரேல் படையினரால் கொல்லப்பட்டதற்கு சர்வதேச பத்திரிகையாளர்கள் பலரும் தங்களது கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.

ஆனால் இந்தத் தகவலை இஸ்ரேல் ராணுவம் மறுத்துள்ளது. இஸ்ரேல் - பாலஸ்தீனர்களுக்கு இடையேயான மோதலில் பாலஸ்தீனர்களால் அவர் சுடப்பட்டிருக்கலாம் என்றும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

English summary
Al Jazeera journalist Shireen Abu Akleh shot dead in Israel. Abu Akleh was wearing a press vest and was standing with other journalists when she was killed.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X