அவ்வளவு தான் நம்மள முடிச்சு விட்டீங்க போங்க! ஈரான் மீதான தாக்குதலை நிறுத்திய இஸ்ரேல்.. என்னாச்சு?
ஜெருசலேம்: ஹிஸ்புல்லா அமைப்புக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய ஈரான் மீது இன்று காலை திடீரென இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இந்த நிலையில் ஈரான் மீதான துல்லிய தாக்குதலை சில மணி நேரங்களிலேயே முடித்து விட்டதாக அறிவித்திருக்கிறது இஸ்ரேல். இதனை இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகரி உறுதி செய்துள்ளார்.
ஹிஸ்புல்லா, ஹமாஸ் உள்ளிட்ட போராளி குழுக்களுக்கு ஆதரவாக இஸ்ரேலின் டெல் அவிவ் மற்றும் விமானப் படைத் தளங்கள் மீது ஈரான் ராணுவம் நூற்றுக்கும் மேற்பட்ட ஹைப்பர்சோனிக் மற்றும் பாலிடிக்ஸ் ஏவுகணைகளை வீசியது.

இந்த நிலையில் அமெரிக்காவுடன் இணைந்து ஈரான் மீது இஸ்ரேல் எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தும் என கூறப்பட்டது.
இதற்கான வியூகங்களை அமைக்கும் பணியில் ஈரான் மும்முரமாக ஈடுபட்டுள்ளதாகவும், இதனால் இஸ்ரேல் தாக்குதலுக்கு பயந்து ஈரான் தலைவர் அயத்துல்லா கமேனி பயந்து போய் பதுங்கி உள்ளதாக மேற்கத்திய செய்தி ஊடகங்கள் தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வந்தன. ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன் மக்களிடையே தோன்றும் பேசிய கமேனி, இஸ்ரேல் மீது ஈரான் தொடுத்தது சிறிய தண்டனை ஏவுகணை தாக்குதல் தான் எனவும் தேவைப்பட்டால் மீண்டும் தாக்குதல் தொடரும் என கூறினார்.
இந்நிலையில் ஹிஸ்புல்லா மற்றும் ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து மட்டுமே தாக்குதல் நடத்தி வந்த இஸ்ரேல் ஈரான் மீது இன்று திடீரென தாக்குதல் நடத்தியது. 20க்கும் மேற்பட்ட ராணுவ நிலைகளை குறி வைத்து நூற்றுக்கும் மேற்பட்ட போர் விமானங்கள் மூலம் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்டது. குறிப்பாக ஈரான் தலைநகரான டெஹ்ரானில் அடித்தடுத்து வெடிச்சத்தம் கேட்டது.
அதே நேரத்தில் ஈரான் தங்களது வான் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் இஸ்ரேலின் தாக்குதலை முறியடித்ததாக ஈரான் ராணுவம் கூறியுள்ளது. தற்போது வரை ஈரானில் என்ன வகையான சேதங்கள் ஏற்பட்டது என்பது குறித்தான எந்த தகவலும் வெளியாகவில்லை. அதே நேரத்தில் ஈரானில் விமான போக்குவரத்து முழுமையாக ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் இஸ்ரேல் நடவடிக்கைக்கு எதிராக பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் கூறியுள்ளது.
இந்த நிலையில் ஈரான் மீது இன்று காலை நடத்தப்பட்ட துல்லிய தாக்குதல் சில மணி நேரங்களில் முடிவுக்கு வந்துள்ளதாக இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் ரியல் அட்மிரல் டேனியல் ஹகரி உறுதி செய்துள்ளார். இதன் தொடர்பாக சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்," இஸ்ரேலுக்கு எதிராக ஈரானின் தாக்குதலுக்கு நாங்கள் பதிலடி கொடுத்தோம். அந்த பதிலடி முடிந்துவிட்டது. ஈரானில் ராணுவ இலக்குகள் மீது துல்லியமான தாக்குதல் நடத்தினோம். இதனால் இஸ்ரேலுக்கு எதிரான அச்சுறுத்தல் முறியடிக்கப்பட்டு இருக்கிறது. ஈரான் மீண்டும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினால், இஸ்ரேலை தாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் எடுப்போம்" எனக் கூறியிருந்தார்.
முன்னதாக காலையில் அவர் வெளியிட்ட வீடியோவில்,” இஸ்ரேல் அரசுக்கு எதிராக ஈரானில் இருந்து நடத்தப்படும் தாக்குதல்களுக்கு பதில் அளிக்கும் வகையில் இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் ஈரானில் உள்ள ராணுவ இலக்குகளை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். உலகில் மற்ற நாடுகளைப் போலவே இஸ்ரேலுக்கும், பதில் அளிக்கும் உரிமையும் கடமையும் உள்ளது. எங்கள் தற்காப்பு மற்றும் தாக்குதல் திறன்கள் முழுமையாக அணி திரட்டப்பட்டு, எங்களை மக்களை பாதுகாக்க அனைத்தையும் செய்வோம்” என அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில் ஈரான் இஸ்ரேலின் தாக்குதலை முறியடித்துள்ளதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள், இஸ்ரேலின் ராக்கெட்டுகள் மற்றும் ட்ரோன்களை நடுவானிலேயே அழித்ததாகவும், இது இஸ்ரேலுக்கு தோல்வி தான் என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்கா வான் தாக்குதலில் இந்தியா வர இருந்த ஈரான் விமானம் சேதம்! என்ன நடந்தது? -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
"விட்டால் போதும்.." கையை பிசையும் டிரம்ப்.. ஈரான் போரை முடிக்க முடியாமல் திணறும் அமெரிக்கா! -
இஸ்ரேல் முழுதும் வெடித்த போராட்டம்.. ஈரான் போரை கைவிட மக்கள் கொந்தளிப்பு! நெதன்யாகுவிற்கு சிக்கல் -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
இஸ்ரேலுக்கு நாலா பக்கமும் விழும் அடி.. ஹைபா கடற்படை தளம் மீது ஏவுகணை வீசி ஹிஸ்புல்லா தாக்குதல் -
பாகிஸ்தான் இருக்க வேண்டிய இடம் இதுதான்.. முகத்தில் அறைந்த அமெரிக்க நாடாளுமன்ற அறிக்கை -
ஈரான் போர் காரணமாக எந்தெந்த நாட்டில் என்ன இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது தெரியுமா? லிஸ்ட் இதோ -
ஈரானிடம் உள்ள 400 கிலோ யுரேனியம்.. கண்வைத்த டிரம்ப்.. தரைவழி தாக்கி மீட்க அமெரிக்கா மாஸ்டர் பிளான் -
இனி ரேஷன் கடை மட்டுமில்லை! பெட்ரோல் பங்க்குகளிலும் மண்ணெண்ணெய் விற்பனை! மத்திய அரசு அனுமதி -
ஒரு மாதமாக இழுக்கும் ஈரான் போர்.. டிரம்ப் சொன்ன பாசிட்டிவ் மேட்டர்! இந்தியாவுக்கு பெரிய நிம்மதி! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள்












Click it and Unblock the Notifications