நெதன்யாகுவை காலி செய்ய.. யூத-அரபு கூட்டணி அமையணும்! இஸ்ரேலில் மக்கள் போர்க்கொடி!

Subscribe to Oneindia Tamil

டெல் அவிவ்: இஸ்ரேலில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்நிலையில், நெதன்யாகுவை பதவியிலிருந்து நீக்க, எதிர்க்கட்சிகள்.. அரபு கட்சிகளுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று இஸ்ரேலில் மக்கள் போராட்டத்தில் இறங்கியிருக்கின்றனர்.

டெல் அவிவ் நகரில், ஆயிரக்கணக்கான மக்கள் இந்த கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இருப்பினும் எதிர்க்கட்சிகள் என்ன முடிவெடுக்கப்போகின்றன என்பது கேள்வியாக இருக்கிறது.

Israelis Demand Opposition Arab Alliance

இஸ்ரேல் நாடாளுமன்றத்தை பொறுத்தவரை, மொத்தம் 120 இடங்கள் இருக்கின்றன. 61 இடங்களில் ஜெயித்தால் ஆட்சியமைக்கலாம். ஆனால், தேர்தல் முடிவுகளின்படி நெதன்யாகு கூட்டணிக்கு 53, எதிர்க்கட்சிகளுக்கு 48, அரபு கட்சிகளுக்கு 19 இடங்கள் கிடைத்திருக்கின்றன. இதை வைத்து பார்க்கும்போது, நெதன்யாகு, எதிர்க்கட்சியுடன் கூட்டணி வைக்கணும். இல்லையெனில், அரபு கட்சிகளுடன் கூட்டணி வைக்கணும். ஆனால், நெதன்யாகுவை பொறுத்தவரை.. நான்தான் ராஜா, நானே மந்திரி என்கிற மைண்ட் செட் கொண்டவர். எனவே நிச்சயம் அரபு கட்சியோடு போக மாட்டார்.

மட்டுமல்லாது எதிர்க்கட்சியை சரமாரியாக விமர்சித்திருந்தார். இப்படி இருக்கையில், அவரால் எதிர்க்கட்சிகளுடனும் கூட்டணி வைக்க முடியாது. அவருக்கு இருக்கும் ஒரே ஆப்ஷன், மீண்டும் தேர்தலை நடத்துவது. அப்படியில்லையெனில், எதிர்க்கட்சிலிருந்து எம்பிக்களை தள்ளிக்கொண்டு வருவது.

ஆனால், இதெல்லாம் நடப்பதற்கு முன்னதாக.. எதிர்க்கட்சிகள், அரபு கட்சிகளுடன் கூட்டணி வைத்து நெதன்யாகுவை பதவியிலிருந்து காலி செய்ய வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள். "உண்மையான மாற்றத்திற்கான கடைசி வாய்ப்பு இது" என்று கூறி அக்.31 அன்று இரவு ஹபிமா சதுக்கத்தில், ஆயிரக்கணக்கான யூத மற்றும் அரபு மக்கள் இணைந்து போராட்டத்தை நடத்தியுள்ளனர். அரபு கட்சிகளுடன், எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதே அவர்களின் விருப்பம்.

இதை எதிர்பார்க்காத நெதன்யாகு ஆதரவாளர்கள், "பயங்கரவாதிகளுடன் இணைந்து இஸ்ரேலில் ஆட்சி அமைக்க கூடாது" என்று எதிர் போராட்டங்களை நடத்தியிருக்கின்றனர். மேலும், அரபு கட்சிகள் கத்தாரிடமிருந்து நிதி பெற்று தேர்தலை திருடிவிட்டதாக நெதன்யாகு குற்றம் சாட்டியுள்ளார். வலதுசாரி அமைப்புகள் இந்த அரபு மக்களின் வாக்குப்பதிவை தேர்தல் பயங்கரவாதம் என்று விமர்சித்துள்ளன.

இஸ்ரேல் தேர்தலை பொறுத்தவரை, நெதன்யாகுவுக்கு இது வாழ்வா, சாவா போராட்டம்! அவர் மீது ஊழல் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. ஒருவேளை பதவி இல்லையெனில்.. வழக்கு விசாரணை சூடுபிடிக்கும். இது நெதன்யாகுவுக்கு பெரிய சிக்கல். எனவே, அடுத்த சில நாட்கள் இஸ்ரேல் நடக்கும் மாற்றங்கள் சர்வதேச அளவில் கவனம் பெற உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+