எல்லை தாண்டி சென்று தாக்கிய உக்ரைன்..உச்ச கட்ட கோபத்தில் புடின்.. தாக்குதலை தீவிரப்படுத்த முடிவு!?

Subscribe to Oneindia Tamil

கீவ் : உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 40 நாட்கள் நெருங்கி வரும் நிலையில் ரஷ்ய நாட்டின் எண்ணெய் கிடங்குகள் மீது ராணுவ ஹெலிகாப்டர்கள் தாக்குதல் நடத்தியதாகவும், இதனால் பல லட்சம் லிட்டர் எண்ணெய் வளம் சேதம் அடைந்ததாக ரஷ்யா பரபரப்பு புகார் கூறியுள்ள நிலையில், தாக்குதலை தீவிரபடுத்த புடின் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 37வது நாளாக நீடித்து வரும் நிலையில் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ள ரஷ்ய ராணுவம்.

தற்போதைய நிலவரப்படி, உக்ரைன் தலைநகர் கீவ்வை சுற்றி வளைத்து ரஷ்ய துருப்புகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

உக்ரைன் போர்

உக்ரைன் போர்

உக்ரைன் மீதான போரின் முதற்கட்ட இலக்கை எட்டிவிட்டதாகவும், இனி உக்ரைனின் கிழக்கு பகுதிகளை பாதுகாப்பதில் கவனம் செலுத்தபோவதாகவும் ரஷியா கூறினாலும் இன்னும் அதை செயல்படுத்தவில்லை. மாறாக உக்ரைன் நகரங்களை சுடுகாடுகளாக மாற்றும் மூர்க்கத்தனமான தாக்குதல்களை தொடர்ந்து வருகின்றன. குறிப்பாக துறைமுக நகரமான மரியுபோல் மீதான தாக்குதல்கள் நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகின்றன.

பாதுகாப்பு கேள்விக்குறி

பாதுகாப்பு கேள்விக்குறி

மக்கள் நிலைமை ரஷ்ய படைகளின் தொடர் குண்டு வீச்சால் மரியுபோல் நகரில் உள்ள கட்டிடங்கள் அனைத்தும் சேதமடைந்துள்ள நிலையில் அங்குள்ள மக்களை காப்பாற்றவிடாமல் ரஷ்யா தடுப்பதாகவும், இதனால் அங்குள்ள மக்களின் நிலை அச்சமூட்டும் வகையில் உள்ளதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைன் எதிராக ரஷ்யா, பயோ வெப்பன், இரசாயன ஆயுதங்கள், அணு ஆயுதங்கள் என ஆபத்தான ஆயுதங்களை பயன்படுத்தலாம் எனவும் அச்சமூட்டும் தகவல் வெளியாகின.

வான் தாக்குதல்

வான் தாக்குதல்

ரஷ்யா ராணுவத்தின் வான் தாக்குதல் காரணமாக உக்ரைன் நகரங்களில் கட்டமைப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும், உக்ரைன் படைகளும் சளைக்காமல் ரஷியாவுக்கு பதிலடி கொடுத்தவண்ணம் உள்ளனர். இந்நிலையில் ரஷ்ய நாட்டின் எண்ணெய் கிடங்குகள் மீது ராணுவ ஹெலிகாப்டர்கள் தாக்குதல் நடத்தியதாகவும், இதனால் பல லட்சம் லிட்டர் எண்ணெய் வளம் சேதம் அடைந்ததாக ரஷ்யா பரபரப்பு புகார் கூறியுள்ளது

 எண்ணெய் கிடங்கில் தாக்குதல்

எண்ணெய் கிடங்கில் தாக்குதல்

ரஷ்யாவின் மேற்கு நகரமான பெல்கோரோட் நகரத்தில் உள்ள எண்ணெய் கிடங்கு மீது, உக்ரைனின் இரண்டு ராணுவ ஹெலிகாப்டர்கள் தாழ்வாக பறந்து வந்து தாக்குதல் நடத்தியிருப்பதாக அப்பகுதி பிராந்திய ஆளுநர் கூறி உள்ளார். ரஷ்ய எண்ணெய் கிடங்கை தாக்கியது உக்ரைன் தான் என ரஷ்ய ஊடகத்திலும் செய்தி வெளியாகி உள்ளது. ஆனால், இதுவரை உக்ரைன் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை. எனினும், அது உண்மையாக இருந்தால், படையெடுப்பு தொடங்கியபிறகு ரஷ்ய மண்ணில் உக்ரைன் நடத்திய முதல் தாக்குதலாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் கடும் கோபம் அடைந்துள்ள ரஷ்ய அதிபர் புடின் உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+