For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சுற்றி வளைத்த 14 சிங்கங்களை பந்தாடிவிட்டு தப்பிய குட்டி யானை 'கும்கி'!

Google Oneindia Tamil News

ஜாம்பியா: தென்னாப்பிரிக்காவின் ஜாம்பியாவில் ஒரு யானைக்குட்டி ஒன்று பதினான்கு சிங்கங்களுடன் போராடி தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

தென்னாப்ரிக்க வனப்பகுதியில் ஜாம்பியா என்ற இடத்தில் ஒரு வயதே ஆன குட்டி யானை தனிமையில் உலாவிக்கொண்டிருந்தது.

அப்போது, அதனை கோரப் பசியுடன் தாக்கிக் கொல்ல 14 சிங்கங்கள் சுற்றி வளைக்கின்றன.

வீடியோவில் பதிவான காட்சி:

வீடியோவில் பதிவான காட்சி:

அவற்றிடம் இருந்து போராடி அந்த யானைக் குட்டி தப்பிக்கும் காட்சி வனப்பகுதிக்கு சுற்றுலா சென்ற பயணிகளால் படம்பிடிக்கப்பட்டுள்ளது.

சுற்றி வளைத்து தாக்குதல்:

சுற்றி வளைத்து தாக்குதல்:

அந்த வீடியோவில் குட்டி யானையை 14 சிங்கங்கள் சுற்றி வளைத்து தாக்குகின்றன. ஒரு சிங்கம், அந்த குட்டி யானையின் மீது ஏறி அதனை கடித்துக் குதறுகிறது.

அடித்து விரட்டும் யானைக்குட்டி:

அடித்து விரட்டும் யானைக்குட்டி:

முதலில் சிங்கங்களின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாமல் திணறும் குட்டி யானை, பிறகு சினிமா கதாநாயகன் போல வீறுகொண்டு எழுந்து சிங்கங்களை அடித்து விரட்டுகிறது.

நீர்நிலையில் இறங்கி ஆசுவாசம்:

நீர்நிலையில் இறங்கி ஆசுவாசம்:

ஒவ்வொரு சிங்கத்தையும் விரட்டிவிட்டு, அங்குள்ள நீர்நிலைக்குள் இறங்கும் யானை தன் மீதிருந்த சிங்கத்தையும் விரட்டி விட்டு தப்பிச் செல்கிறது.

சூடுபறக்கும் வீடியோ:

இக்காட்சி சமூக வலைதளங்களிலும், யூடியூப் வீடியோ பக்கங்களிலும் பெரும் ஆச்சரியத்தையும், பரபரப்பையும் கிளப்பியுள்ளது.

English summary
The extraordinary footage shows the solitary elephant fending off the lions near a waterhole. One of the lions sinks its claws into the elephant’s rear flanks and even hitches a ride on the animal’s back.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X