For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கி.மீட்டருக்கு ரூ.7 செலவில் மார்ஸுக்கு சென்றுவிட்டோம்: அமெரிக்காவில் மோடி பேச்சு

By Siva
Google Oneindia Tamil News

நியூயார்க்: செவ்வாய் கிரகத்திற்கு செல்ல கிலோ மீட்டருக்கு ரூ.7 தான் நமக்கு செலவானது என்று நியூயார்க்கில் உள்ள மேடிசன் ஸ்கொயரில் பேசிய பிரதமர் மோடி தெரிவித்தார்.

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி நியூயார்க்கின் மேடிசன் ஸ்கொயர் கார்டனில் ஞாயிற்றுக்கிழமை உரை நிகழ்த்தினார். அவரது உரையை கேட்க ஏராளமான வெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்திய-அமெரிக்கர்கள் வந்திருந்தனர்.

மோடி தனது உரையில் கூறியதாவது,

நவராத்திரி

நவராத்திரி

அனைத்து மக்களுக்கும் எனது நவராத்திரி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

பாம்பாட்டி

பாம்பாட்டி

ஒரு காலத்தில் இந்தியா என்றால் பாம்பாட்டிகளின் நாடு என்று நினைக்கும் நிலை இருந்தது. ஆனால் இன்று உங்களாலும், ஐ.டி. ஊழியர்களாலும் நம் நாட்டை பற்றிய நினைப்பு மாறியுள்ளது. நம் முன்னோர்கள் போன்று இல்லாமல் நாம் மவுஸுடன்(கம்ப்யூட்டர் மவுஸ்) விளையாடுகிறோம்.

நன்றி

நன்றி

தேர்தல் பிரச்சார நேரத்தில் இந்தியா வந்த உங்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

பிரச்சனை

பிரச்சனை

நான் பல மைல் தூரத்தில் வாழலாம். ஆனால் உங்களின் பிரச்சனைகள் எனக்கு நன்கு புரிகிறது.

மார்ஸ்

மார்ஸ்

செவ்வாய் கிரகத்திற்கு கிலோ மீட்டருக்கு ரூ.7 தான் நமக்கு செலவானது. திறன் மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம். இதற்காகவே ஒரு அமைச்சகத்தை உருவாக்கியுள்ளோம்.

காந்தி

காந்தி

மகாத்மா காந்தி சுதந்திர போராட்டத்தை தேசிய புரட்சியாக்கினார். அனைவரும் காந்தி வழியை பின்பற்றி முன்னேற்றம் என்பது ஒவ்வொரு நபரின் கடமை என்றாக்க வேண்டும்.

விசா

விசா

இந்திய வம்சாவளியினருக்கு ஆயுள்காலத்திற்கும் பொருந்தும் விசா அளிக்கப்படும். இந்தியாவில் அதிக காலம் தங்கினால் அடிக்கடி காவல் நிலையத்தில் ஆஜராக தேவையில்லை. இந்தியாவுக்கு வந்தவுடன் அமெரிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு விசா வழங்கப்படும், தூதரக சேவைகள் விரிவுபடுத்தப்படும்.

கங்கை

கங்கை

கங்கை நதியை சுத்தப்படுத்த வேண்டியது அவசியம். உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள இந்தியர்கள் கங்கை நதியை புனிதமாகக் கருதி போற்றுகிறார்கள்.

மோடி, மோடி

மோடி, மோடி

மோடி பேசப் பேச அரங்கில் இருந்தவர்கள் மோடி, மோடி என்று கரகோஷம் எழுப்பினர். மேலும் நிகழ்ச்சிக்கு வந்தவர்களில் பலர் மோடியின் புகைப்படத்துடன் கூடிய டி-சர்ட் அணிந்திருந்தனர்.

ஒபாமா

ஒபாமா

பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவை இன்றும், நாளையும் சந்தித்து பேசுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Modi inspired the Indian crowd at Madison Square in New York on sunday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X