For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆங்கில நாவல் உலகின் "ரொமாண்டிக் ரைட்டர்” ஜாக்கி காலின்ஸ் மார்பக புற்றுநோயால் மரணம்!

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்காவின் பிரபல எழுத்தாளரான ஜாக்கி காலின்ஸ் நேற்று மரணமடைந்தார். இவர் காதல், அன்பு போன்ற மென்மையான உணர்வுகளை தனது கதைகளில் படம்பிடித்துக் காட்டுவதில் வல்லவராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர்.

பிரிட்டனைச் சேர்ந்த 77 வயதான ஜாக்கி காலின்ஸ் மறைவு குறித்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசிக்கும் காலின்ஸின் குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையில், "மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ஜாக்கி காலின்ஸ் உயிரிழந்தார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"தி வேர்ல்ட் இஸ் புல் ஆஃப் மேரீட் மேன்' என்ற தலைப்புடன் 1968 ஆம் ஆண்டு ஜாக்கி காலின்ஸ் தனது முதல் நாவலை ஆங்கிலத்தில் எழுதினார். அது விற்பனையில் சாதனை படைக்கவே தொடர்ந்து 40 ஆண்டுகளாக பல நாவல்களை எழுதி வந்தார்.

புகழ் பெற்றுத் தந்த நாவல்கள்:

புகழ் பெற்றுத் தந்த நாவல்கள்:

அவர் எழுதியவற்றில் 32 நாவல்கள், "தி நியூயார்க் டைம்ஸ்" இதழால் வெளியிடப்பட்ட அதிக விற்பனையான நாவல்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. காலின்ஸின் நாவல்களில், அவருக்கு மிகவும் புகழ் பெற்றுத் தந்தவையாக "ஹாலிவுட்ஸ் வைப்ஸ்", "தி ஸ்டட்" ஆகிய நாவல்கள் கருதப்படுகின்றன.

காதலர்களின் எழுத்தாளர்:

காதலர்களின் எழுத்தாளர்:

அவரது பல கதைக்களங்கள் காதல் பந்தம், கணவன் , மனைவிக்கு இடையில் எழும் பூசல்கள், மணமுறிவு ஆகியவற்றை மையப்படுத்தியதாகவே அமைக்கப்பட்டிருந்ததால் "ரொமாண்ட்டிக் ரைட்டர்" என வாசகர்களால் ஜாக்கி காலின்ஸ் அழைக்கப்பட்டார்.

உலகம் முழுவதும் சாதனை:

உலகம் முழுவதும் சாதனை:

அவரது நாவல்கள் அனைத்தும் உலகம் முழுவதும் 40 மொழிகளில் வெளியாகி 50 கோடிக்கும் அதிகமான பிரதிகள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளன. எட்டு நாவல்கள் திரைப்படங்களாகவும், தொலைக்காட்சி தொடர்களாகவும் வெளியாகியுள்ளன.

ஆறரை ஆண்டு போராட்டம்:

ஆறரை ஆண்டு போராட்டம்:

அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் உள்ள பெவர்லி ஹில்ஸ் பகுதியில் வாழ்ந்துவந்த ஜாக்கி காலின்ஸ் கடந்த ஆறரை ஆண்டுகளாக மார்பகப் புற்றுநோய்க்கு சிகிச்சைக்கு எடுத்துக் கொண்டே 5 நாவல்களை எழுதி முடித்தார். அவற்றுள் ஒன்றான "தி சாண்டான்கெலோஸ்" என்ற நாவல் கடந்த ஜனவரி மாதம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

English summary
British-born author of Hollywood Wives and The Stud dies in Los Angeles of breast cancer which she had kept secret for more than six years.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X