For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காஷ்மீர் பிரச்சினையில் பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவிக்கும் ஜெர்மனி

Google Oneindia Tamil News

இஸ்லமாபாத் : இந்தியா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தையில் காஷ்மீர் தவிர்க்க முடியாத ஒன்று என ஜெர்மனி, பாகிஸ்தானுக்கு ஆதரவான கருத்தை தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிறகு பாகிஸ்தானுக்கு வருகை தந்த ஜெர்மனிவெளியுறவு துறை அமைச்சர் பிராங் வால்டர் ஸ்டெயின்மியர், பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் இணைந்து கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது, கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த ஸ்டெயின்மியர் கூறியதாவது..

germany foriegn sec

காஷ்மீர் விவகாரங்கள் போன்ற ஆழமான பிரச்சினைகளை பேச்சுவார்த்தையில் ஒதுக்கிவைக்க முடியாது. தெற்காசிய நாடுகளுக்கு இடையே நல்லுறவு மேம்பட பேச்சுவார்த்தைதான் ஒரே வழி" என்று தெரிவித்தார்.

மேலும், பாகிஸ்தானும் தீவிரவாதிகளுக்கு எதிரான செயலை தீவிரப்படுத்த வேண்டும். இந்த நடவடிக்கையில் எந்த பாரபட்சமும் காட்டக்கூடாது எனவும் அவர் கூறினார்.

இந்தியா- பாகிஸ்தான் இடையே நடைபெற இருந்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்டத்திலான பேச்சுவார்த்தையில் காஷ்மீர் விவகாரம் இடம் பெற வேண்டும் என பாகிஸ்தான் வலியுறுத்தியது. ஆனால், ஏற்கனவே திட்டமிட்டபடி தீவிரவாதம் குறித்து மட்டுமே இந்த பேச்சுவார்த்தை நடைபெறும் என்று இந்தியா திட்டவட்டமாக கூறியதையடுத்து, பேச்சுவார்த்தையை பாகிஸ்தான் ரத்து செய்தது.

இந்த நிலையில், இந்தியா பாகிஸ்தான் பேச்சுவார்த்தையில் காஷ்மீர் தவிர்க்க முடியாத ஒன்று என ஜெர்மனி, பாகிஸ்தானுக்கு ஆதரவான கருத்தை தெரிவித்துள்ளார்.

English summary
Germany today said that "deep issues" like Kashmir should be a part of the talks between India and Pakistan as dialogue is the only way to move forward, days after the cancellation of NSA-level talks over India's insistence that Kashmir cannot be on the agenda.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X