Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மலேசியாவில் இறங்கிய ஜனநாயகன்.. விஜய்யுடன் இவ்வளவு நெருக்கம் காட்டுகிறாரே.. யார் இந்த டத்தோ மாலிக்?

Subscribe to Oneindia Tamil

கோலாலம்பூர்: நடிகர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. இதற்காக மலேசியாவுக்கு தனி விமானத்தில் சென்றுள்ள விஜய்யை, அங்குள்ள தமிழர் ஒருவர் வரவேற்றது கவனத்தை ஈர்த்துள்ளது. இதனால் யார் அந்த தமிழர் என்ற விவாதம் தொடங்கி இருக்கிறது. இதில் அந்த தமிழர் யார் என்பதை பார்க்கலாம்.

நடிகர் விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். இதன்பின் GOAT திரைப்படத்தில் நடித்த விஜய், மேலும் ஒரேயொரு படத்தில் மட்டும் நடிக்க உள்ளதாக கூறி இருந்தார். அதன்படி அ.வினோத் இயக்கத்தில் விஜய்யின் கடைசி படமாக ஜனநாயகன் அமைந்துள்ளது. இந்தத் திரைப்படத்தை கர்நாடகாவைச் சேர்ந்த கேவிஎன் நிறுவனம் தயாரித்துள்ளது.

Jana Nayagan Vijay Malaysia

விஜய்யுடன் நடிகை பூஜா ஹெக்டே, மமீதா பைஜு, பிரியாமணி, பிரகாஷ் ராஜ், பாபி டியோல் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். ஏற்கனவே ஜனநாயகன் படத்தில் இருந்து தளபதி கச்சேரி, ஒரு பெயரே வரலாறு, செல்ல மகளே ஆகிய 3 பாடல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த நிலையில் ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் இன்று பிரம்மாண்டமாக நடக்கவுள்ளது.

கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜலீல் மைதானத்தில் சுமார் 85 ஆயிரம் ரசிகர்கள் முன்னிலையில் இந்த இசை வெளியீட்டு விழா நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக நடிகர் விஜய் நேற்று மலேசியா சென்றுவிட்டார். தனி விமானத்தில் மலேசியா சென்ற விஜய்யை, அங்குள்ள தமிழர் ஒருவர் பிரம்மாண்டமாக வரவேற்று அழைத்து சென்றார். அவருடன் விஜய்யும் கொஞ்சம் நெருக்கம் காட்டியது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியது.

இதனால் விஜய்யை வரவேற்ற தமிழர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. மலேசியாவில் விஜய்யை வரவேற்றது வேறு யாரும் அல்ல.. அவர்தான் டத்தோ மாலில். தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தோர் பகுதியைச் சேர்ந்தவர். பிழைப்புக்காக மலேசியா சென்ற அவர் ஜவுளிக் கடை ஊழியராக வாழ்க்கையை தொடங்கி இருக்கிறார். இவரின் உண்மையான பெயர் அப்துல் மாலிக் தஸ்தகீர்.

அதன்பின் விரைவாக வளர்ச்சியை அடைந்த அவர், தொழில் சாம்ராஜ்ஜியத்தை சினிமா சார்ந்து விரிவுப்படுத்தினார். அதேபோல் நகை வியாபாரத்திலும் ஈடுபட்டு வருகிறார். தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகர், நடிகைகள், இசையமைப்பாளர்களை மலேசியா அழைத்து சென்று கலை நிகழ்ச்சிகளை நடத்துவது இவரின் வழக்கம். ரஜினி நடித்த கபாலி படத்தை மலாய் மொழியில் தயாரித்து விநியோகம் செய்தவரும் இவர்தான்.

தற்போது விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவுக்கான பணிகளை தயாரிப்பு நிறுவனம் டத்தோ மாலிக்கிடம் தான் ஒப்படைத்துள்ளது. இவர் மூலமாகவே மலேசியா அரசின் அனுமதி பெறப்பட்டு, உடனடியாக புக்கிட் ஜலீல் மைதானம் புக் செய்யப்பட்டுள்ளது. கலை நிகழ்ச்சிகளை எந்தவித சிக்கலும் இல்லாமல் நடத்துவதில் டத்தோ மாலிக் வல்லவர்.

அண்மையில் சிம்பு மலேசியாவில் இவரின் நகைக் கடையை தான் திறந்து வைத்தார். அந்த விழாவிலும் சிம்புவை வரவேற்று அழைத்து சென்றது டத்தோ மாலிக் தான். இவர் 2023ஆம் ஆண்டு மலேசியா ஊழல் தடுப்பு ஆணைய காவல்துறையால் சட்டவிரோத பணப்பரிமாற்றம் மற்றும் பயங்கரவாதிகளுக்கு நிதியளித்தல் உள்ளிட்ட வழக்கில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+