For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தைவான் விஷயத்தில் தலையிடாதீங்க.. வெளிப்படையாக எச்சரித்த பெலுசி.. நேரடியாக மோதும் சீனா - அமெரிக்கா?

Google Oneindia Tamil News

டோக்கியோ: அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி சமீபத்தில் தைவானுக்கு சென்றிருந்த நிலையில், சீனா இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தைவானை ஒட்டியுள்ள கடற்பரப்பில் போர் பயிற்சியை மேற்கொண்டது. இந்நிலையில், "தைவானை தனிமைப்படுத்த அமெரிக்கா அனுமதிக்காது" என நான்சி தெரிவித்துள்ளார்.

Recommended Video

    Taiwan- China இடையே போர் அபாயம்.. *World

    முன்னெப்போதும் இல்லாத அளவில் ஏவுகணைகளை வீசி போர் ஒத்திகையில் ஈடுபட்டு வரும் சீனாவின் மக்கள் விடுதலை ராணுவத்தின் நடவடிக்கைகள் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் நான்சியின் மேற்குறிப்பிட்ட கருத்தானது மேலும் பதற்றத்தை அதிகரிக்க செய்யும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

    ஏற்கெனவே உக்ரைனை நேட்டோவில் இணைய வற்புறுத்தி தற்போது ரஷ்ய-உக்ரைன் போர் ஏற்பட அமெரிக்க முக்கிய காரணமாக இருந்த நிலையில், அடுத்து சீனா-தைவான் போருக்கு அமெரிக்கா அடித்தளமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    உலகமே உற்றுநோக்கும் நிகழ்வு.. தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்! கொந்தளிக்கும் சீனா - போர் பதற்றம் உலகமே உற்றுநோக்கும் நிகழ்வு.. தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்! கொந்தளிக்கும் சீனா - போர் பதற்றம்

    ஒத்திகை

    ஒத்திகை

    தைவான் சீனாவின் ஒரு அங்கம் என அந்நாடு சொந்தம் கொண்டாடுகிறது. ஆனால், இதை தனிநாடாக அமெரிக்கா கருதுகிறது. அதாவது சீனாவை கலந்தாலோசிக்காமல் தைவான் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது, ஒப்பந்தம் மேற்கொள்வது என அமெரிக்கா சில நடவடிக்கையில் இறங்கியது. இது சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே இருந்த உரசல்களை மேலும் தீவிரமாக்கியது. இந்நிலையில் சமீபத்தில் அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவானுக்கு சென்றிருந்த நிலையில், சீன இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தைவானை ஒட்டியுள்ள கடற்பரப்பில் போர் பயிற்சியை மேற்கொண்டது.s

    ஆதரவு

    ஆதரவு

    முன்னெப்போதும் இல்லாத அளவில் ஏவுகணைகளை வீசி போர் ஒத்திகையில் ஈடுபட்டு வரும் சீனாவின் மக்கள் விடுதலை ராணுவத்தின் நடவடிக்கைகள் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது நான்சி "தைவானை தனிமைப்படுத்த அமெரிக்கா அனுமதிக்காது" என்று கூறியுள்ளார். மேலும், "தைவான் பிரதிநிதிகள் மற்ற நாடுகளுக்கு சென்று தங்கள் உரிமை குறித்து பேசுவதை சீனா தடுத்திருக்கலாம் ஆனால் அமெரிக்காவின் பிரதிநிதிகள் தைவானுக்கு செல்வதை தடுப்பதன் மூலம் தைவானை சீனாவால் தனிமைப்படுத்திவிட முடியாது" என்று டோக்கியோவில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார். இது சீனாவின் கோபத்தை மேலும் அதிகரித்துள்ளது.

    ஜோ பைடன்

    ஜோ பைடன்

    நான்சியை தொடர்ந்து, ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா "சீனாவின் ஏவுகணை தாக்குதல் ஒத்திகை, தேசிய பாதுகாப்பை பாதிக்கும் தீவிர பிரச்னையாக உருவாகியுள்ளது" என்று கூறியுள்ளார். சீனாவுக்கு எதிராக அமெரிக்காவின் நட்பு நாடுகள் ஒன்றாக கைகோர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பதற்றம் தொடங்குவதற்கு சுமார் 2 மாதங்களுக்கு முன்னர், "தைவான் மீது சீனா போர் தொடுத்தால் அமெரிக்கா தைவானுக்கு ராணுவ உதவிகளை செய்து அதை பாதுகாக்கும்" என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

     அணிசேரா கொள்கை

    அணிசேரா கொள்கை

    பெலோசி பயணத்திற்குச் சீனா காட்டிய இந்த எதிர்ப்பு மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. சீனாவின் இந்த எதிர்ப்பு மற்ற நாடுகள் தைவான் உடன் ராஜதந்திர உறவை மேம்படுத்தும் முன்பு பல முறை சிந்திக்க வைக்கும். ஏனென்றால், அனைத்து நாடுகளுக்கும் அமெரிக்காவைப் போலச் சீனாவின் ராணுவ பலத்தை எதிர்கொள்ளும் திறன் இருக்காது. சீனா உடனான வர்த்தகம் மிக முக்கியம் என்பதால் ஐரோப்பா நிச்சயம் இந்த விவகாரத்தில் தலையிடாது. இரு வல்லரசு நாடுகளுக்கு இடையேயான மோதலின் நடுவே சிக்கிக் கொண்டால் என்ன நடக்கும் எனத் தெரியும் என்பதால் பெரும்பாலான தென்கிழக்கு ஆசிய நாடுகளும் இந்த விவகாரத்தில் நிச்சயம் அணிசேரா கொள்கையையே எடுக்கும்.

    English summary
    Japan's PM Fumio Kishida condemns China's firing of ballistic missiles during military drills around Taiwan, five of which Tokyo believes landed in its exclusive economic zone.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X