For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறியவர்... மனைவியின் குழந்தைக்கு ‘அப்பா’ : ஜப்பான் கோர்ட் அதிரடி தீர்ப்பு

Google Oneindia Tamil News

டோக்கியோ: பாலின அறுவைச் சிகிச்சை மூலம் ஆணாக மாறியவருக்கு தந்தை என்ற அங்கீகாரத்தை வழங்கி அதிரடியாக உத்தரவிட்டுள்ளது ஜப்பான் நீதிமன்றம்.

ஜப்பான் நீதிமன்றத்தில் சமீபத்தில் வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. அதில், பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறியவர் ஒருவர் தனது மனைவி செயற்கை முறையில் கருத்தரித்து பெற்ற குழந்தைக்கு தன்னையே தந்தையாக அறிவிக்கக் கோரியிருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், சட்டப்பூர்வமாக அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட அவருக்கு தந்தை என்ற அங்கீகாரத்தை வழக்கித் தீர்ப்பளித்துள்ளனர்.

இதன் மூலம், ஜப்பானில் பாலின அறுவைச் சிகிச்சை செய்து கொண்டு சட்டப்பூர்வமாக தந்தை என அங்கீகாரம் பெற்ற முதல் மனிதர் என்றப் பெருமையை அந்நபர் பெற்றுள்ளார்.

தீர்ப்பு குறித்து அவரிடம் கருத்துக் கேட்கப்பட்ட போது, ‘இத்தீர்ப்பால் தான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்வதாகவும், தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளது குறிப்ப்பிடத்தக்கது.

இந்த வழக்கில் சம்பந்தபட்டவர்களின் பெயர் மற்றும் அடையாளங்களை வெளியிட அரசு மறுத்து விட்டது.

English summary
A TRANSSEXUAL man, who was born a woman, has been recognized by Japan's top court as the legal father of his wife's child, in a national first.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X