For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கையில்லை

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டோக்கியோ: ஜப்பானில் தொடர்ந்து, 2வது நாளாக இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.0 என பதிவான நிலநடுக்கத்தால் லேசான அதிர்வு மட்டுமே ஏற்பட்டது, பாதிப்புகள் ஏதுமில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

அந்நாட்டின் வடக்கே உள்ள மியாகோ நகரில் இருந்து, 167 கிலோ மீட்டர் தொலைவில் கடல்பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.0 என பதிவான நிலநடுக்கம், ஏறக்குறைய கடலின் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் உருவாகியதாக, புவியியல் நிபுணர்கள் தெரிவித்தனர்.

Japan Hit By Magnitude 6.0 Earthquake, No Tsunami Warning

நிலநடுக்கம் காரணமாக, லேசான அதிர்வலைகள் உணரப்பட்டபோதும், உடனடி பாதிப்புகள் எதுவும் இல்லை என்று, தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்காரணமாக, சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. கடந்த 24 மணிநேரத்தில் 2வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால், மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

கடந்த 2011ம் ஆண்டு மார்ச் மாதம் ஜப்பானில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்பட்டது. இதில் புகுஷிமா அணுமின் நிலையம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால், ஏற்பட்ட கதிர்வீச்சால் பலர் பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், புகுஷிமா அணுமின் நிலையம் உள்ள கடலோர பகுதியில் 5.3 ரிக்டர் அளவுகோல் மதிப்பிலான நிலநடுக்கம் நேற்று பதிவானது குறிப்பிடத்தக்கது.

English summary
Japan was hit by a strong earthquake for the second straight day today, though there were no immediate reports of damage or injuries, officials said.A shallow magnitude 6.0 earthquake struck off the coast of northern Japan today, 167 kilometres from Miyako city, the US Geological Survey said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X