For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அபே போட்ட ''லிட்டில் பாய் அணுகுண்டு''.. ராஜினாமா முடிவால் ஆடிப்போன ஜப்பான் மார்க்கெட்..என்ன நடந்தது?

Google Oneindia Tamil News

டோக்கியோ: ஒரு நாட்டின் சிறந்த தலைவர், அந்த நாட்டின் முகமாக கருதப்படும் ஒருவர் திடீரென பதவி விலகுவதகாக அறிவித்தால் என்ன நடக்கும்? கடந்த 30 வருடமாக ஜப்பான் அரசியலின் எதோ ஒரு வகையில் முகமாக இருந்த ஷின்ஷோ அபே பதவி விலகுவதாக அறிவித்து சில நொடிகளில் அந்த நாடு மொத்தமும் ஆட்டம் கண்டு போய் இருக்கிறது. எப்படி என்ன நடந்தது?

ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபே தனது பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். கடந்த 2012ம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக மூன்று முறை இவர் பிரதமர் பதவியை அலங்கரித்து வருகிறார். மொத்தமாக ஜப்பானின் பிரதமராக இவர் 4 முறை இருந்துள்ளார்.

திடீரென இன்று, எனக்கு உடல்நிலை சரியில்லை. இனிமேலும் அரசு ரீதியான பணிகளை கவனிக்க முடியாது. அதனால் நான் பதவி விலகுகிறேன் என்று ஷின்ஷோ அபே அறிவித்துள்ளார். எங்க பாட்டி செத்துட்டாங்க என்று ஸ்கூல் பையன் லீவ் எடுப்பது போல ஷின்ஷோ அபே பதவி விலகி இருக்கிறார்... பொறுங்கள்.. ஷின்ஷோ அபே இப்படி உடல்நிலையை காரணம் காட்டி பதவி விலகுவது இது முதல் முறையல்ல.

ஜப்பான்...அடுத்தது இவர்தான் பிரதமரா...அரசியலில் அதிரடி மாற்றம்!! ஜப்பான்...அடுத்தது இவர்தான் பிரதமரா...அரசியலில் அதிரடி மாற்றம்!!

ஏற்கனவே எப்படி

ஏற்கனவே எப்படி

இதற்கு முன் ஏற்கனவே 2006ல் இவர் தனது பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். 2005ல் பிரதமராக பதவி ஏற்றார். அதன்பின் சரியாக ஒரே வருடத்தில் அந்த பதவியில் இருந்து ராஜினமா செய்தார். அப்போது அவர் சொன்ன காரணமும் ''அஸ் ஐ யம் சபரிங் ஃப்ரம் பீவர்'' என்பதுதான். கொஞ்ச நாள் அரசியலில் இருந்து விலகி இருந்தவர், 2007ல் மீண்டும் அரசியலுக்கு வந்து, தனது தரப்பை வலிமை படுத்திக் கொண்டு 2012ல் மீண்டும் பிரதமர் ஆனார்.

என்ன பிரச்சனை இவருக்கு

என்ன பிரச்சனை இவருக்கு

இவருக்கு உடலில் நிறைய பிரச்சனைகள் இருப்பதாக இவரின் மருத்துவ குறிப்புகள் தெரிவிக்கிறது. இதயம், தொண்டை, கிட்னி ரீதியான பிரச்சனைகள் நிறைய இவருக்கு இருந்துள்ளது. chronic disease, ulcerative colitis, எனப்படும் வயிறு தொடர்பான பிரச்சனைகளும் இருந்துள்ளது. குணப்படுத்த கூடிய பிரச்சனை என்றாலும், ஏனோ அபே இதற்காக பதவி விலகும் முடிவை எடுத்துள்ளார். இதை கொஞ்சம் ஷாக்கிங் முடிவுதான் என்று அந்நாட்டு மக்கள் கூறுகிறார்கள்.

வல்லுநர்கள் சொல்வது என்ன

வல்லுநர்கள் சொல்வது என்ன

ஆனால் அரசியல் வல்லுனர்களோ, அபே இப்படி திடீரென ராஜினாமா செய்தது ஷாக்கிங் செய்தி அல்ல. கடந்த 3 மாதமாக திட்டமிட்டு அவர் எடுத்த முடிவு இது. கொரோனா காரணமாக ஜப்பான் பொருளாதாரம் சரிந்துவிட்டது. கடந்து 5 வருடமாகவே ஜப்பான் சரிவை சந்தித்து வருகிறது. உலக வல்லரசுகளின் இரண்டாம் இடத்தில் இருந்த ஜப்பான் 5 க்கும் கீழே சென்றுவிட்டது.. நாடு முழுக்க இளைஞர்கள் அரசு மீதும் அபே மீதும் கடும் கோபத்தில் இருக்கிறார்கள்.

தேர்தல் தோல்வி

தேர்தல் தோல்வி

தேர்தலை சந்தித்தால் தோல்வி நிச்சயம். விரைவில் அரசுக்கு எதிராக போராட்டங்கள் கூட நடக்கலாம் என்பதால் அபே முன்கூட்டியே ராஜினாமா செய்ய முடிவு செய்துவிட்டார். அபேவின் இந்த முடிவை அந்நாட்டு மக்கள் வரவேற்று இருப்பதும் இதை உறுதி செய்கிறது. ஆம் ஜப்பானின் நீண்ட பிரதமரின் ராஜினாமாவை அந்நாட்டு மக்கள் வரவேற்று இருக்கிறார்கள். ஆனால் ஜப்பான் வர்த்தக மார்க்கெட் இதை வரவேற்கவில்லை.

மார்க்கெட் காலி

மார்க்கெட் காலி

ஜப்பானின் மார்க்கெட் நிக் மதிப்பு 1.5% வரை சரிவை சந்தித்தது. ஜப்பான் யென் மதிப்பு உயர்வை சந்தித்தாலும், அந்நாட்டு மார்க்கெட் மதிப்பு வேகமாக சரிந்து வருகிறது. அடுத்த வாரம் முழுக்க அந்நாட்டு மார்க்கெட் மிக மோசமான சரிவை சந்திக்கும் என்கிறார்கள். அதிலும் நாட்டின் பணவீக்கம் மோசமாக வாய்ப்புள்ளது. அபே கொண்டு வந்த சில திட்டங்கள்தான் பண வீக்கத்தை கட்டுப்படுத்தியது.. இனி அதுவும் மோசமடையும் என்று ஜப்பான் பொருளாதார வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

மோசம் அடைந்தது

மோசம் அடைந்தது

கொரோனா காரணமாக ஜப்பான் மார்க்கெட் ஏற்கனவே மோசமான நிலையில்தான் இருந்தது. தற்போது அபே பதவி விலகிய காரணத்தால் வங்கிகள் தொடங்கி எல்லாம் மிக மிக மோசமான சரிவை சந்தித்துள்ளது. பொதுவாக அதிரடியான பொருளாதார நடவடிக்கைகளை எடுப்பதில் அபே வல்லவர். இதனால் இவரின் எக்கனாமிக் சீர்திருத்தங்கள் Abenomics என்று அழைக்கப்பட்டது. தற்போது அப்படி ஒரு பொருளாதார சீர்திருத்தவாதிதான் நாட்டின் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்கிறார்.

என்ன நடக்குமோ

என்ன நடக்குமோ

ஜப்பானுக்கு கொரோனா பிரச்சனை, வேலைவாய்ப்பு இன்மை, சீனாவுடன் எல்லை மோதல், வடகொரியாவுடன் மோதல் என்று நிறைய பிரச்சனைகள் இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் அபே பதவி விலக முடிவு செய்துள்ளார். இதனால்தான் அங்கு மார்க்கெட் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அணுகுண்டுகளை தாங்கி எழுந்து நின்ற நாடு, தற்போது அபே போட்ட குண்டு காரணமாக ஒரே நாளில் நிலைகுலைந்து போய் உள்ளது.

ஏன் கஷ்டம்

ஏன் கஷ்டம்

இந்த பிரச்சனையில் இருந்து ஜப்பான் மீண்டு வருவது கடினம் என்கிறார்கள். ஒரு நாடு மோசமான பிரச்சனையில் இருக்கும் போது, அந்த நாட்டின் பிரதமர் வெளியேறினால் என்ன நடக்கும்? இனி ஜப்பான் வரும் நாட்களில் பெரிய பிரச்சனைகளை, மோதல்களை சந்திக்கும் என்கிறார்கள். குட்டி வைரஸ் தொடங்கி பக்கத்தில் இருக்கும் குட்டி தீவான வடகொரியா வரை ஜப்பான் நிறைய விஷயங்களை உடனே சமாளிக்க வேண்டி உள்ளது. புதிய பிரதமர் என்ன செய்ய போகிறார் என்பதே இப்போது கேள்வியாக உள்ளது!

English summary
Japan market falls to worst after PM Shinzo Abe resignation out of nowhere.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X