"எல்லாரும் தப்பிச்சு ஓடுங்க" முதலில் பூகம்பம் அடுத்து சுனாமி! ஜப்பானில் புத்தாண்டில் என்ன நடக்கிறது
டோக்கியோ: ஜப்பான் நாட்டில் வலிமையான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி தாக்கத் தொடங்கியுள்ள நிலையில், இது தொடர்பாகக் கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது.
புத்தாண்டு தினமான இன்று ஜப்பான் நாட்டில் சக்திவாய்ந்த 7.5 ரிக்டர் நிலநடுக்கம் மத்திய ஜப்பானைத் தாக்கியது, இந்த பூகம்பம் மிகவும் வலிமையாக இருந்த நிலையில், சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டது.

மேலும், அதிகாரிகளும் அப்பகுதியில் உள்ள மக்களை உயரமான நிலத்திற்குச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். தொடர்ந்து அங்கே பல பகுதிகளை முதல் சுனாமி அலைகளும் தாக்கத் தொடங்கியுள்ளது.
சுனாமி: ஜப்பான் நாட்டின் இஷிகாவா மாகாணத்தில் உள்ள நோட்டோ பகுதியில் மாலை 4:10 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஜப்பான் கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் 300 கிலோமீட்டர் தொலைவில் அபாயகரமான சுனாமி அலைகள் ஏற்படக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, இஷிகாவா மாகாணத்தில் உள்ள வாஜிமா நகரில் 1.2 மீட்டர் உயரத்தில் சுனாமி அலைகள் தாக்கத் தொடங்கியுள்ளது.
அதே பிராந்தியத்தில் உள்ள நோட்டோவில் ஐந்து மீட்டர் உயரத்தில் சுனாமி அலைகள் தாக்கும் என்று ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் எச்சரித்துள்ளது. ஜப்பானின் பிரதான தீவான ஹொன்ஷூவின் உள்ளூர் நேரப்படி மாலை 4:06 மணியளவில் 5.7 ரிக்டரில் முதலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து மாலை 4:10 மணிக்கு 7.6 ரிக்டர் அளவிலும், 4:18 மணிக்கு 6.1 ரிக்டர் அளவிலும், 4:23 மணிக்கு 4.5 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. வரிசையாகப் பல பூகம்பங்கள் ஏற்பட்டுள்ளது.
ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! கடற்கரையில் இருக்கும் அணுமின் நிலையத்தின் நிலை என்ன? அரசு விளக்கம்
ஓடுங்கள்: தொடர்ச்சியாக ஏற்பட்ட பூகம்பங்கள் மற்றும் சுனாமி காரணமாகப் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. "உங்கள் வீடு, உங்கள் உடைமைகள் ஆகியவை உங்களுக்கு முக்கியமானது என்பது எங்களுக்குப் புரிகிறது.. ஆனால் அவை அனைத்தையும் விட உங்கள் உயிர் முக்கியம். எனவே, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் உயரமான இடத்தை நோக்கி ஓடுங்கள்" என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஜப்பான் நாட்டில் பொதுவாகவே அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும். அது ரிங் ஆப் பயர் என்ற பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதனால் அங்கே நிலநடுக்கம் அடிக்கடி ஏற்படும்.. இதன் காரணமாகவே ஜப்பான் நாட்டில் நிலநடுக்கங்களைத் தாங்கும் வகையிலான கட்டிடங்கள் ஜப்பான் நாட்டில் கட்டப்படுகிறது. இதனால் அங்கே கடுமையான கட்டுமான விதிமுறைகள் பின்பற்றப்படும். மேலும், மோசமான சம்பவம் நடந்தால் அதை எதிர்கொள்ள தயாராக இருக்கும் வகையில் அவசரகால பயிற்சிகளும் நடத்தப்படும்.
கடந்த காலங்கள்: இதற்கு முன்பு ஜப்பானில் ஏற்பட்ட மோசமான நிலநடுக்கம் என்றால் அது கடந்த 2011 மார்ச் மாதம் ஏற்பட்டது தான்.. 9 ரிக்டரில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அங்கே சுனாமி ஏற்பட்டது. இதில் சுமார் 18,500 பேர் உயிரிழந்தனர். இந்த 2011 சுனாமி புகுஷிமா அணுமின் நிலையத்தையும் தாக்கியது. ஜப்பானில் போருக்குப் பிறகு மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்திய பேரழிவு என்றால் இதை குறிப்பிடலாம், செர்னோபிலுக்குப் பிறகு நடந்த மிக மோசமான அணு விபத்து என்று கூட இதை சொல்லலாம்.
அதன் பிறகு மார்ச் 2022இல், ஃபுகுஷிமா கடற்கரையில் 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். ஜப்பான் தலைநகர் டோக்கியோவை பொறுத்தவரைச் சரியாக 100 ஆண்டுகளுக்கு முன்பு 1923இல் மிக மோசமான ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. அது மிக மோசமான பூகம்பமாகப் பார்க்கப்படுகிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications