Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாதவிடாய் வந்த நிலையில்.. கர்ப்பமான ஒரே மணி நேரத்தில்.. குழந்தையும் பெற்றெடுத்த பெண்.. மக்கள் ஷாக்

கர்ப்பமாகி ஒரு மணி நேரத்தில் குழந்தையை பெற்றெடுத்துள்ளார் ஒரு பெண்

Subscribe to Oneindia Tamil

ஜகார்த்தா: மாதவிடாய் வந்து கொண்டே இருந்தபோது, ஒரு பெண் திடீரென கர்ப்பமாகி விட்டார்.. அடுத்த ஒரு மணி நேரத்திலேயே குழந்தையும் பெற்றெடுத்துவிட்டார்.. உலக அதிசயமாய் நடந்த இந்த சம்பவத்தை நினைத்து மக்கள் ஆச்சரியத்தில் உள்ளனர்.

இந்தோனேஷியாவின் வெஸ்ட் ஜாவாவில், தஸிக்மல்யா என்ற பகுதி உள்ளது.. இங்கு வசித்து வரும் பெண்ணுக்கு 28 வயதாகிறது.. அவர் பெயர் ஹேனி நுரானி... இவருக்கு கல்யாணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

Java woman claimed that she gave birth to her son after a one hour gestation periodmedical miracle

இந்நிலையில், அவர் மறுபடியும் கர்ப்பமாகி, ஒரே மணி நேரத்திலேயே பிள்ளையும் பிறந்துவிட்டது.. இதை பற்றி உள்ளூர் ஊடகத்திற்கு அந்த பெண் பேட்டி ஒன்று தந்துள்ளார். அதில் அவர் சொல்லும்போது, "நான் வீட்டில் சாதாரணமாகத்தான் இருந்தேன்.. உடம்பில் ஒரு வித்தியாசமும் எனக்கு தெரியல.

திடீர்னு வயிற்றின் வலது பக்கத்தில் ஏதோ அசையற மாதிரி இருந்தது... தொடர்ந்து இப்படியே இருக்கவும், என் அம்மா வீட்டிற்கு கிளம்பி போனேன்.. வயித்துல பிடிச்சிருக்கும், ஏதோ பிடிப்பு இருக்கும் என்று நினைத்து ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போனாங்க.. ஆனால், அங்க போயி ஒரு மணி நேரத்துல எனக்கு குழந்தை பிறந்துடுச்சு.

இத்தனைக்கும் எனக்கு மாச மாசம் பீரியட்ஸ் வந்துட்டுதான் இருந்தது.. இந்த 9 மாசமும் வழக்கம்போலதான் மாதவிடாய் வந்தது.. குழந்தை பொறக்கறதுக்கு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிகூட பீரியட்ஸ் இருந்தது" என்றார். அவரது இந்த பேட்டியை பார்த்துவிட்டு, இந்தோனேஷியாவே ஆடிப்போய்விட்டது..

இதை பற்றி டாக்டர் ருஸ்வனா சொல்லும்போது, "25,000 கர்ப்பிணி கேஸ்களில் இப்படி ஒருவருக்கு நடக்கும்.. இவங்களுக்கு தான் கர்ப்பமாக இருக்கிறோம் என்றுகூட தெரியாது.. இருந்தாலும் இப்படி கர்ப்பமாகி, அடுத்த ஒரு மணி நேரத்திலேயே பிரசவம் ஆனது சாத்தியமில்லைதான் என்றார்.

ஹார்மோன் பிரச்சனையால் கூட இப்படி நடந்திருக்கலாம் என்று சொன்னாலும், இயற்கைக்கு மாறாக நடந்த இந்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தையே தந்து வருகிறது.. ஆனால், தாயும், சேயும் நல்லா இருக்காங்களாம்!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+