அடேங்கப்பா.. 15 மனைவி.. 107 குழந்தைகள்.. ஒரே வீட்டில் ஒன்றாய் வாழும் நபர்.. சண்டையே இல்லை! பூரிப்பு
நைரோபி: கென்யாவில் 15 மனைவி, 107 குழந்தைகளுடன் ஒருவர் ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வருகிறார். மனைவிகள் இடையே சண்டை பொறாமை இல்லவே இல்லை என அவர் பெருமையாக கூறுகிறார்.
மனித வாழ்க்கையில் உள்ள முக்கிய உறவுகளில் முக்கியமானவற்றில் ஒன்று கணவன்-மனைவி. தனித்தனி வாழ்க்கை நடத்திய இருவரும் திருமண பந்தக்கு பிறகு ஒன்றாக சேர்ந்து வாழ்வதை அடிப்படை கொண்டது தான் இந்த கணவன்-மனைவி உறவு.
இந்தியாவில் ஒரு மனைவியையே சமாளிக்க முடியவில்லை என சிலர் புலம்பும் வகையில் ஒருவர் 15 திருமணம் செய்து அனைவருடனும் ஒரே வீட்டில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?. ஆம் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். கென்யாவை சேர்ந்த ஒரு நபர் தான் 15 மனைவிகளுடன் ஒரே வீட்டில் குக்கிராமமாக வாழ்ந்து வருகிறார். அதுபற்றிய விபரம் வருமாறு:

கென்யா நபர்
கென்யாவின் மேற்கு பகுதியில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர் டேவிட் சாகாயோ கலலுயானா. இவர் தான் அந்நாட்டின் தற்போதைய கல்யாண ராமனாக உள்ளார். 61 வயது நிரம்பிய இவர் தற்போது வரை 15 பெண்களை திருமணம் செய்துள்ளார். இதன்மூலம் அவருக்கு மகன், மகள் என மொத்தம் 107 குழந்தைகள் உள்ளனர். இதனால் அவரது குடும்பமே குட்டி கிராமமாக மாறியுள்ளது.

ஒரே வீட்டில் வசிக்கும் மனைவிகள்
தற்போதைய காலத்தில் ஒருவர் 15 திருமணம் செய்துள்ளார் என்பது ஆச்சரியாக உள்ள நிலையில் தான் அவர் அனைத்து மனைவிகள் மற்றும் குழந்தைகளுடன் ஒரே வீட்டில் வசிப்பது என்பது அனைவரின் புருவத்தையும் உயர்த்த செய்கிறது. இது உண்மையில் மிகப்பெரும் சாதனையாக தான் அந்நாட்டு பத்திரிகைகள் செய்து வெளியிட்டுள்ளன.

வித்தைகள் தெரியும்
இதுபற்றி டேவிட் சாகாயோ கலலுயானா கூறுகையில், ‛‛எனது இந்த முடிவின் பின்னணியில் அரசர் சாலமோன் தான உள்ளார். அவருக்கு மொத்தம் 700 மனைவிகளும், 300 பெண் பார்ட்னர்களும் இருந்தனர். நான் எந்த விதத்திலும் சாலமோனை விட குறைந்தவர் இல்லை. நான் பல பெண்களின் கண்களில் புத்திசாலித்தனமாக தெரிகிறேன். இதனால் தான் பல பெண்களை திருமணம் செய்து மனைவியாக்கி உள்ளேன். அவர்களை சமாளிக்கும் வித்தைகள் எனக்கு நன்றாக தெரியும். தற்போது ஒவ்வொருவருக்கும் தேவையான உணவை நான் கொடுத்து வருகிறேன். மனைவியின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்தாலும் எனக்கு அது பெரிய பிரச்சனையாக இருக்காது'' என்றார்.

பொறுப்பான மனிதர் எனக்கூறும் மனைவி
இதுபற்றி அவரது மனைவியில் ஒருவரான ஜெசிகா கூறுகையில், ‛‛என் கணவர் புதிதாக திருமணம் செய்வதை பார்த்து நான் ஒருபோதும் பொறாமை கொண்டது இல்லை. அவர் ஒரு பொறுப்பான மனிதர். அவர் ஒரு செயலை செய்யும் முன்பு பல முறை யோசிப்பார். அவரது முடிவுகள் எப்போதும் சரியானதாகவே இருக்கும்'' என்றார். அவர்கள் 1998 இல் திருமணம் செய்து கொண்டனர். ஜெசிகாவும், டேவிட்டும் 1998 ல் திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தது.

பழகிவிட்டோம் என சகித்து கொள்ளும் மனைவி
இன்னொரு மனைவி ரோஸ் கூறுகையில், ‛‛நாங்கள் ஒருவரையொருவர் நேசித்து நல்ல வாழ்க்கை வாழ்ந்து வருகிறோம். எனக்கும் டேவிட்டுக்கும் 15 குழந்தைகள் உள்ளன. நாங்கள் டேவிட்டுடன் இணைந்து வாழ பழகிவிட்டோம்'' என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications