For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இத்தனை கோடியா!! கேரள நிவாரணத்திற்கு அள்ளிக்கொடுக்கும் பில்கேட்ஸ், ஆப்பிள்!

கேரளா வெள்ள நிவாரணத்திற்கு ஆப்பிள் நிறுவனம் 7 கோடி ரூபாய் கொடுத்துள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

நியூயார்க்: கேரளா வெள்ள நிவாரணத்திற்கு ஆப்பிள் நிறுவனம் 7 கோடி ரூபாய் கொடுத்துள்ளது. மைக்ரோசாப்ட் குழுமத்தின் நிறுவனர் பில்கேட்ஸ் ரூ. 4.20 கோடியை வழங்கியுள்ளார்.

கேரளாவில் வெள்ள மீட்பு பணிகள் நடந்து வருகிறது. இதற்காக பல மாநில அரசுகள் நிதி உதவி அளித்துள்ளது.

ஆனால் இன்னும் பல இடங்களில் வெள்ள நீர் வடியாமல் உள்ளது. ஆனாலும் கேரளாவில் மொத்தமாக இயல்புநிலை திரும்ப குறைந்தது 2500 கோடி ரூபாயாவது தேவைப்படும் என்று கூறப்படுகிறது.

எவ்வளவு ரூபாய்

எவ்வளவு ரூபாய்

மத்திய அரசு இதுவரை 600 கோடி ரூபாய் கொடுத்துள்ளது. கேரளாவில் வெள்ளம் என்றவுடன், அரபு நாடுகள்தான் மிகவும் அதிகஅளவு உதவிகளை செய்தது. இது இல்லாமல் மக்கள் கொடுத்த பணம் மட்டும், கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு 530 கோடி ரூபாய் வந்துள்ளது.

பில் கேட்ஸ் எவ்வளவு

பில் கேட்ஸ் எவ்வளவு

கேரளாவின் வெள்ள நிவாரண பணிகளுக்காக மைக்ரோசாப்ட் குழுமத்தின் நிறுவனர் பில்கேட்ஸ் ரூ. 4.20 கோடியை வழங்கியுள்ளார். தனது அறக்கட்டளையான பில் அன்ட் மெலின்டா கேட்ஸ் பவுண்டேஷன் மூலம் இதை வழங்கியுள்ளார். யுனிசெப் அமைப்புக்கு இந்த பணம் சென்று சேரும். அதன் மூலம் கேரளா நிவாரண பணிகளுக்கு பயன்படுத்தப்படும்.

ஆப்பிள் எவ்வளவு உதவி

ஆப்பிள் எவ்வளவு உதவி

அதேபோல் கேரளாவிற்கு ஆப்பிள் நிறுவனமும் உதவி முன் வந்துள்ளது. கேரளா நிவாரண பணிகளுக்கு மெர்சி கார்ப்ஸ் தொண்டு நிறுவனம் மூலம் பணம் அளிக்க உள்ளது. மெர்சி கார்ப்ஸ் தொண்டு நிறுவனத்துக்கு 7 கோடி ரூபாய் வழங்குகிறது ஆப்பிள் நிறுவனம். இந்த பணம் கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு செல்லும் என்று கூறப்பட்டுள்ளது.

புதிய வசதி

புதிய வசதி

அதேபோல் கேரளாவிற்கு உதவ புதிய வசதிகளையும் கேரளா அரசு செய்து கொடுத்துள்ளது. ஆப்பிள் வெளியிட்டு இருக்கும் ஆப்களில் இருந்தும் மக்கள் பணம் செலுத்த முடியும். ஆப் ஸ்டோர், ஐடியூன்ஸ் ஸ்டோர் ஆகியவற்றில் இதற்காக தாற்காலிக ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கேரள நிவாரண நிதிக்கு பணம் அளிக்கும் வகையில் ஆப்ஷன்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

English summary
Kerala flood: Apple and Microsoft come to help people. Microsoft Bill Gates will give 4 crores rupees, and Apple will give 7 crores for the relief fund.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X