For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கிழக்கு கடற்கரை வீட்டில் ஆள் நடமாட்டத்தை காட்டும் சேட்டிலைட் இமேஜ்! அப்போ கிம் ஜாங்கிற்கு என்னாச்சு?

Google Oneindia Tamil News

பியாங்கியாங்: கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் பொது இடங்களில் தோன்றாததால் அவரது உடல் நிலை குறித்து பல்வேறு வதந்திகளை ஏற்படுத்தியுள்ளது.

வடகொரிய அதிபராக உள்ள கிம் ஜாங் உன் நன்கு கொழு கொழு என இருப்பார். அவர் அமெரிக்க அதிபராக இருந்த டொனால்ட் டிரம்ப்பையே ஏவுகணை சோதனை விவகாரத்தில் பகைத்து கொண்டார்.

அண்டைய நாடுகள் யார் சொன்னாலும் ஆபத்தான ஏவுகணை சோதனையை தவறாமல் செய்ய உத்தரவிட்டு நட்பு நாடுகளின் பொல்லாப்பை சம்பாதித்துக் கொண்டார்.

மழையால் உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்குக - ஓபிஎஸ் வலியுறுத்தல் மழையால் உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்குக - ஓபிஎஸ் வலியுறுத்தல்

பொதுவெளியில்

பொதுவெளியில்

இந்த நிலையில் அவ்வப்போது பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் கிம், கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் அவ்வப்போது நடுநடுவே பொதுவெளியில் தோன்றாமல் இருப்பதும், அவரது உடல்நிலை குறித்து வதந்திகள் பரவுவதும் வாடிக்கையாகிவிட்டது. கடந்த ஆண்டு இதே போல் கிம் பொது வெளியில் தோன்றாமல் இருந்தார். இதனால் அவர் இறந்துவிட்டிருக்கலாம் என்றும் இதோ அறிவிப்பு வெளியாகும், அதோ அறிவிப்பு வெளியாகும் என்றெல்லாம் வதந்திகள் வலம் வந்தன.

கிம் ஜாங் உன்

கிம் ஜாங் உன்

ஆனால் அத்தனையையும் பொய்யாக்கிவிட்டு ஒரு நிகழ்ச்சியில் சூப்பராக வந்து நின்றார் கிம். இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 12 ஆம் தேதி பியாங்கியாங்கில் ஏவுகணை கண்காட்சியில் அதிபர் கிம் ஜாங் உன் கலந்து கொண்டார். அதன் பிறகு கிம் ஜாங் பொது வெளியில் தோன்றியதாக எந்த தகவலும் வெளியாகவில்லை.

இணையதளம்

இணையதளம்


இதுகுறித்து வாஷிங்டன்னை சேர்ந்த ஒரு வெப்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. அதாவது பியாங்கியாங்கில் கிழக்கு கடற்கரை வீடு மற்றும் லேக் சைட் மேன்சனில் தற்போது நடமாட்டங்கள் அதிகரித்திருப்பதாக செயற்கைகோள் படங்கள் காட்டுகின்றன. பொதுவாக கிம்மிற்கு உடல்நலம் பாதிக்கப்பட்டால் அந்த பகுதிகளில்தான் தங்குவாராம். தற்போது ஆட்கள் நடமாட்டம் அப்பகுதியில் உள்ளதால் கிம்மிற்கு உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கலாம் என சொல்லப்படுகிறது.

கடற்கரை வீடு

கடற்கரை வீடு

அது போல் அக்டோபர் மாத இறுதியில் ஜாங் உன்னின் கடற்கரை வீடு அருகே படகு ஒன்று வந்ததையும் செயற்கைோள் படங்கள் காட்டுகின்றன. அவர் பொது வெளியில் தோன்றாமல் இருந்தாலும் அவரது பணிகளை அவர் தொடர்ந்து செய்து வருகிறார். மற்ற தலைமை அதிகாரிகளுக்கு கடிதங்களையும் அனுப்பி வருகிறார்.

டிசம்பர் 17

டிசம்பர் 17

அவருக்கு உடல்நிலை பாதிக்காவிட்டால் அடுத்த மாதம் டிசம்பர் 17 ஆம் தேதி அவருடைய தந்தை கிம் ஜாங் இல்லின் நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்திற்கு கிம் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 2021 ஆம் ஆண்டு மட்டும் கிம் ஜாங் 14 நாட்கள், அதாவது 8 முறை பொதுவெளியில் தோன்றாமல் இருந்துள்ளார். அது போல் கடந்த 2020 ஆம் ஆண்டும் அதிக நாட்கள் பொது வெளியில் தோன்றாமல் இருந்தார். அவருடைய தாத்தாவின் பிறந்தநாளான ஏப்ரல் 15 , 2020 ஆம் ஆண்டு விழாவில் கிம் கலந்து கொள்ளவில்லை. இதனால் கிம்மிற்கு மாரடைப்பு ஏற்பட்டதாக வதந்திகள் பரவின. ஆனால் 3 வாரங்கள் கழித்து அவர் பொது வெளியில் தோன்றினார். ஆனால் அவரால் சரியாக நடக்க முடியவில்லை.

27 வயதில்

27 வயதில்

அது போல் 2014 ஆம் ஆண்டு 6 வாரங்களுக்கு பிறகு பொது மக்கள் முன் வந்த கிம் ஜாங் உன் கையில் ஒரு வாங்கிங் ஸ்டிக்குடன் வந்தார். வடகொரிய அதிபராக இருந்த கிம் ஜாங் இல்லின் இறப்புக்கு பிறகு 2011 ஆம் ஆண்டு தனது 27 வயதில் கிம் ஜாங் உன் நாட்டின் அதிபராக பொறுப்பேற்றுக் கொண்டார். கட்டுப்பாடில்லாத புகைப் பழக்கம், மதுப் பழக்கம் உடையவர் கிம். இவரது தாத்தா, தந்தை ஆகியோர் மாரடைப்பால் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Kim Jong Un absence in seven years sparks new health rumours North Korean President Kim Jong Un has not been seen in public for more than a month sparks new health rumours.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X