For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோலாலம்பூர் ஏர்போர்ட்டில் கேட்பாரற்று நிற்கும் 3 போயிங் விமானங்கள்: உரிமையாளர்களை தேடும் அதிகாரிகள்

By Siva
Google Oneindia Tamil News

கோலாலம்பூர்: கோலாலம்பூர் விமான நிலையத்தில் கேட்பார் அற்று நிற்கும் 3 போயிங் 747-200எஃப் ரக விமானங்களின் உரிமையாளர்களை கண்டுபிடிக்க விமான நிலைய அதிகாரிகள் செய்தித்தாள்களில் விளம்பரம் அளித்துள்ளனர்.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள விமான நிலையத்தில் ஒன்றல்ல இரண்டல்ல மூன்று போயிங் 747-200எஃப் ரக விமானங்கள் கடந்த ஓராண்டுக்கும் மேலாக கேட்பாரற்று நிற்கின்றன. இந்நிலையில் அந்த விமானங்களின் உரிமையாளர்களை கண்டுபிடிக்கும் விதமாக விமான நிலைய அதிகாரிகள் செய்தித்தாள்களில் விளம்பரம் கொடுத்துள்ளனர்.

Kuala Lumpur airport seeks owner of 'abandoned' Boeings

அந்த விளம்பரத்தில் கூறியிருப்பதாவது,

கோலாலம்பூர் விமான நிலையத்தில் 3 போயிங் 747-200எஃப் ரக விமானங்கள் ஓராண்டுக்கும் மேலாக கேட்பாரற்று நிற்கின்றன. அந்த விமானங்களின் உரிமையாளர்கள் தயவு செய்து வந்து அவற்றை எடுத்துச் செல்லுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இந்த விளம்பரத்தை பார்த்ததில் இருந்து 14 நாட்களுக்குள் வந்து விமானங்களை எடுக்காவிட்டால் அவற்றை விற்கவோ, அப்புறப்படுத்தவோ எங்களுக்கு அதிகாரம் உள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த மூன்று விமானங்களின் உரிமையாளர்கள் யார் என்று தெரியவில்லை. அவர்கள் பார்க்கிங் கட்டணத்தை இன்னும் செலுத்தவில்லை. யாருக்கு பில் அனுப்புவது? என்று மலேசிய விமான நிலையங்களின் பொது மேலாளர் ஜெய்னுல் முகமது இஸா தெரிவித்துள்ளார்.

English summary
Kuala Lumpur airport officials have given advertisment in the local newspapers about three abandoned Boeing planes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X