For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரான்ஸ் அதிபர் தேர்தல்: தொலைக்காட்சி விவாதத்தில் போட்டியாளர்கள் பரஸ்பரம் கடும் குற்றச்சாட்டு

By BBC News தமிழ்
|

நேருக்கு நேர் நடந்த தீவிரமான தொலைக்காட்சி விவாதத்தில், பிரான்ஸ் அதிபர் தேர்தலின் இரு போட்டியாளர்களும் பரஸ்பரம் அவமதிப்பான குற்றச்சாட்டுக்களைத் தொடுத்தனர் .

பிரான்ஸ் அதிபர் தேர்தல்: தொலைக்காட்சி விவாதத்தில் போட்டியாளர்கள் பரஸ்பரம் கடும் குற்றச்சாட்டு
BBC
பிரான்ஸ் அதிபர் தேர்தல்: தொலைக்காட்சி விவாதத்தில் போட்டியாளர்கள் பரஸ்பரம் கடும் குற்றச்சாட்டு

நீண்ட மற்றும் கசப்பான அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில் இத்தொலைக்காட்சி விவாதம் ஒரு முக்கிய தருணமாகும்.

பிரான்ஸ் அதிபர் தேர்தல் வேட்பாளரான மரைன் லெ பென், தனது எதிரணி வேட்பாளரான 39 வயது மையவாத கட்சியைச் சேர்ந்த அதிபர் வேட்பாளர் இமானுவேல் மக்ரோங் உலகமயமாக்கலின் கொடூரமான வேட்பளார் என்றும், அவர் மகிழ்ச்சியாக பிரான்ஸின் சொத்துக்களை விற்று விடுவார் மற்றும் நாட்டின் மீது அரசுக்கு இருக்க வேண்டிய உரிமையை கைவிட்டுவிடுவார் என்றும் குற்றம்சாட்டினார்.

இதற்கு பதிலளித்த இமானுவேல் மக்ரோங், தேசிய முன்னணியைச் சேர்ந்த 48 வயதாகும் தனது எதிரணி வேட்பாளர் மரைன் லெ பென், "அச்ச வியாபாரி" என்றும் அதிகமாக பேசினாலும், கூறியபடி எதையும் செய்யவில்லை என்று குற்றம்சாட்டினார்.

தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் மக்ரோங் முன்னணியில் இருந்தாலும், அவரது முன்னணி நிலவரம் குறைந்துள்ளது.

ஞாயிறன்று நடக்கவுள்ள இரண்டாம் கட்ட தேர்தலில், இன்னமும் முடிவு செய்யாத 18 சதவீத வாக்காளர்களின் வாக்குகளை பெறுவதே இவ்விரு வேட்பாளர்களின் நோக்கமாக உள்ளது.

தொடர்புடைய கட்டுரைகள்:

திராவிட ஆட்சி - வரலாற்றுப் பெருமிதங்களைக் கடந்த ஆய்வு தேவை

தலித்துகளை விலக்கி வைத்த திராவிட அரசியல்

'திராவிட இயக்கங்களின் வரலாற்றுத் தேவை முடியவில்லை'

திரைத்துறையும் திராவிடக் கட்சிகளின் ஆட்சியும்

இந்த செய்திகளையும் நீங்கள் படிக்கலாம்:

திருமணத்திற்கு போலி விருந்தினர்களை அழைத்ததால் கைதான சீன மணமகன்

சிங்கள ஆதரவுக் காற்று ராஜபக்‌ஷ பக்கம் வீசுவதைக் காட்டுகிறதா மே தினப் பேரணிகள் ?

மருத்துவ மேற்படிப்பு இட ஒதுக்கீடு: சர்ச்சை தொடர்கிறது

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

BBC Tamil
English summary
The two contenders for the French presidency traded insults in a fiery head to head TV debate, in a key moment of a long and bitter campaign.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X